*13/09/2020*
*முசிறி அண்ணா இப்பொழுது நடந்து கொண்டிருக்கின்ற மஹாளய பட்சத்தின் விளக்கத்தையும் மேலும் தொடர்கிறார்.*
*இந்த மஹாளய பக்ஷத்தில் எந்த எந்த பித்ருக்களை நாம் ஆராதிக்கிறோம் என்பதைப்பற்றி பார்த்துக்கொண்டு வருகிறோம். அதில் மஹாளய பக்ஷத்தின் பெருமையை சஹாருணீக பிதுருக்களின் - நம் பித்ருக்களை தவிர நம்மை சுற்றியுள்ள ஏழு கோத்திர காரர்களையும் சேர்த்து ஆராதிக்கிறோம் என்பதினாலேயே தான் இதற்கு இந்த அளவுக்கு முக்கியத்துவம் சொல்லப்பட்டிருக்கிறது நம்மை சுற்றியுள்ள ஏழு கோத்திர காரர்களை தான் நாம் காருணீர்க்கியர்கள் என்று சொல்கிறோம்.*
*இதை நம்முடைய தர்ம சாஸ்திரம் வரிசைப்படுத்தி கொடுத்திருக்கிறது. அதிலே சிலபேர்கள் சொல்லப்பட்டிருக்கிறது சிலபேர்கள் சொல்லப்படவில்லை. அப்பொழுது விடப்பட்டவர்கள் எல்லாம் அந்த பட்டியலில் வராததினால் அவர்கள் காருணீக பிதுருக்கள் இல்லையா? அவர்கள் இல்லாததினால் சேர்த்துக் கொள்ளலாமா வேண்டாமா? என்கின்ற சந்தேகம் நமக்கு வருகிறது.*
*இந்த விஷயத்திலே நாம் நம்முடைய தர்மசாஸ்திரம் சொல்கின்ற படி கடைபிடிக்க வேண்டும். தர்ம சாஸ்திர கிரந்தங்கள் நிறைய இருக்கின்றது ஒன்றை மட்டும் எடுத்துக் கொண்டு பார்க்க கூடாது. வைத்யநாத தீக்ஷிதீயம் என்று ஒன்று இருக்கிறது. தர்ம சிந்து, நிர்ணய சிந்து, சதுர் வர்க்க சிந்தாமணி, மனுஸ்மிருதி, யாக்ஞவல்கியர் ஸ்மிருதி, இப்படி நிறைய தர்ம சாஸ்திர கிரந்தங்கள் இருக்கின்றன,*
*நம்முடைய முன்னோர்கள் இந்த தர்ம சாஸ்திரங்களை எப்படி வரிசைப் படுத்தி இருக்கிறார்கள் என்றால், நம்முடைய பாரத தேசத்தை மூன்றாகப் பிரித்து இருக்கிறார்கள் அதாவது, தக்ஷிணம் (தெற்கத்திய ஆசாரங்கள்) நாமெல்லாம் பாரத தேசத்தின் தென்கோடியில் இருக்கிறோம். இந்த தக்ஷின ஆசாரங்களை சிலவற்றை முக்கியமாக வைத்துக்கொண்டு செய்து கொண்டிருக்கிறார்கள்*
*மதியம் (அதேபோல பாரத தேசத்திலே மதியத்தில் உள்ளவர்கள் சில ஆசாரங்களை முக்கியமாக வைத்துக் கொண்டு உள்ளார்கள்) உத்திரம் (அதேபோல உத்திர பாரதத்திலே சில தர்ம சாஸ்திர கிரந்தங்கள் முக்கியமாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள்*
*ஆனால் அவர்கள் சிலவற்றை முக்கியமாக வைத்துக் கொண்டு இருக்கிறார்களே தவிர மற்றவைகள் ஒதுக்கப்பட்டனவா? இப்பொழுது தெலுங்கு பேசுபவர்கள் சில ஆசாரங்களை பின்பற்றுகிறார்கள். ஸ்மார்த்தர்களுக்கு ஒரு தர்ம சாஸ்திரம். ஹிந்தி பேசுபவர்களுக்கு ஒரு தர்ம சாஸ்திரம் என்று நாம் புரிந்து கொண்டிருக்கிறோம் அது அப்படி அல்ல.*
*தக்ஷனாசாரம் மதியமா சாரம் உத்தராசாரம் இன்று நாம் பிரித்து கொள்ள வேண்டும்.அதிலே நாம் தக்ஷிணா சாரத்திலே முக்கியமாக வைத்துக் கொண்டிருக்கக் கூடிய கிரந்தம் வைத்தியநாத தீக்ஷ்தீயம். அதாவது திராவிடர்கள் என்று சொல்கிறோம் இல்லையா, ஸ்மார்த்த ஆச்சாரங்களில் உள்ளவர்களுக்கு இது தான் முக்கியம்.*
*அதேபோல மதியமா சாரம் என்று எடுத்துக்கொண்டால், ஆந்திரம் மகாராஷ்டிரம் கர்நாடக தேசம், இங்கெல்லாம் நிர்ணய சிந்து, என்கின்ற கிரந்தத்தை வைத்துக்கொண்டு தர்மங்களை செய்கிறார்கள்.*
*அதேபோல உத்திராசாரங்களில் பார்த்தால், ஹேமாத்திரி என்கின்ற ஒரு கிரந்தம் இருக்கிறது. அதுதான் முக்கியமான கிரந்தம் அவர்களுக்கு. அப்படி என்றால் மற்ற கிரந்தங்களை எடுத்துக் கொள்ள மாட்டார்களா என்றால் அப்படி அல்ல, மற்றவையும் எடுத்துக் கொள்வார்கள் ஆனால் அவர்கள் முக்கியமாக வைத்துக்கொண்டிருக் கும் கிரந்தத்திற்கு ஏற்புடையதாக இருந்தால்.*
*இப்பொழுது நாம் தக்ஷிணாச்சாரத்திலே பார்க்கின்ற பொழுது, வைத்யநாத தீக்ஷிதீயம் என்கின்ற கிரந்தத்தை முக்கியமாக வைத்துக் கொண்டிருக்கிறோம். அது ஒன்று தான் முக்கியம் மற்றவைகளை நாம் விட்டு விடலாம் என்று நாம் புரிந்து கொள்ளக் கூடாது. நிர்ணயச் சிந்து தர்ம சிந்து ஹைமாத்திரி போன்ற கிரந்தங்களிலும் நாம் அனுஷ்டானத்தில் வைத்துக் கொண்டிருக்கின்ற பல விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன. ஆகையினாலே அதிலுள்ள வகைகளையும் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.*
*அப்படி நாம் எடுத்துக் கொள்ளாவிடில் நாம் செய்கின்ற நிறைய காரியங்களையே நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டி வரும், விட வேண்டிவரும். ஏனென்றால் வைத்தியநாத தீக்ஷிதர் அதைப் பற்றி நிறைய சொல்லாததினால்.* *ஏன் அவர் சொல்லவில்லை மற்ற கிரந்தங்களில் அதைப் பற்றி சொல்லி இருப்பதினால் திரும்பவும் சொல்ல* *வேண்டாம், என்கின்ற காரணத்தினால் சொல்லவில்லையே தவிர, மற்ற கிரகங்கள் எல்லாம் நாம் விட்டுவிட வேண்டும் என்கின்ற அர்த்தம் செய்து கொள்ளக் கூடாது*
*அந்த வரிசையிலே பார்க்கின்ற பொழுது இந்த காருணீக்க பிதுருக்கள் வரிசையில், சிலபேர்கள் விடப்பட்டிருக்கிறது. இப்பொழுது உதாரணத்திற்காக பார்த்தால், பிதுருவியர்கள் சொல்லப்பட்டு இருக்கிறது அதாவது தகப்பனாருடன் கூடப்பிறந்த சித்தப்பா பெரியப்பா. ஆனால் அவர்களுடைய மனைவி/குழந்தைகள் சொல்லப்படவில்லை.*
*சகோதரர்கள் சொல்லப்பட்டிருக்கிறது ஆனால் அவர்களுடைய மனைவி சொல்லப்படவில்லை. புத்திரன் சொல்லப்பட்டிருக்கிறது புத்திரனுக்கு புத்திரன் சொல்லப்படவில்லை. அத்தை சொல்லப்பட்டிருக்கிறது அத்தையின் கணவர் அத்திம்பேர் சொல்லப்படவில்லை. தாய் மாமா சொல்லப்பட்டிருக்கிறது அவருடைய மனைவி சொல்லப்படவில்லை.*
*அதுபோல் தாயாருடன் கூட பிறந்த சகோதரிகள், பெரியம்மா சித்தி சொல்லப்பட்டிருக்கிறது, அவர்களுடைய கணவர்கள் சொல்லப்படவில்லை, சகோதரி சொல்லப்பட்டிருக்கிறது சகோதரியின் கணவர் சொல்லப்படவில்லை, பெண் சொல்லப்பட்டு இருக்கிறது அவளுடைய கணவர் மாப்பிள்ளை சொல்லப்படவில்லை.*
*இப்படி எல்லாம் விடப்பட்டு போயிருக்கிறது அவர்களெல்லாம் காருணீக பிதுருக்களில் வரமாட்டார்களா? இப்பொழுது நாம் செய்கின்ற பொழுது அத்தை ஆத்துக்காரரும் இல்லை என்றால், அவரை இப்போது நாம் சேர்த்துக் கொள்வதா வேண்டாமா? தகப்பனார் உடன்பிறந்த சகோதரர்கள் சேர்த்துக் கொள்கிறோம் ஆனால் அவருடைய மனைவியே சேர்த்துக் கொள்வதா வேண்டாமா? இப்படியான சந்தேகங்கள் எல்லாம் வருகின்றன.*
*இப்போது அதிலே நாம் என்ன நினைக்கிறோம் பொதுவாக, கடைசியிலே தத்தத் கோத்ரானு தத்தத் சர்மனஹ என்று பண்ணுகிறோம். இப்பொழுது உலக வழக்கில் என்ன ஆகிவிட்டது என்றால், அந்தந்த காருணீக்க பிதுருக்களுக்கு தனியாக செய்ய வேண்டியதில்லை, வர்க்கத்துவய பிதுருக்களையும் செய்த பிறகு, அதிலே எல்லாவற்றையும் சொல்லி விட்டாலே போதும், அதிலே காருணீக்க பிதுருக்களும் வந்து விடுவார்கள், இதை தனித்தனியாக சொந்தம் சொல்லி சொல்ல வேண்டியது இல்லை, என்ற ஒரு பேச்சு வழக்கத்தில் இருக்கிறது.*
*ஆனால் அதிலே நாம் கவனிக்க வேண்டியது, இவர்களெல்லாம் காருணீக்க பித்ருக்கள் இவர்கள் எல்லோரையும் சேர்த்து ஒரே தர்ப்பணத்தை செய்துவிடு என்று தர்ம சாஸ்திரம் சொல்லி இருக்க வேண்டும், ஆனால் அப்படி சொல்லவில்லை. தர்ம சாஸ்திரத்தில் பார்க்கும்பொழுது உத்தேஸ்சியாஹா இவர்களை எல்லாம் உத்தேசித்து செய்யவேண்டும் என்று ஒரு பட்டியலே காண்பிக்கிறது.*
*ஏன் அந்தப் பட்டியலை நமக்கு கொடுக்க வேண்டும், நம்மை சுற்றியுள்ள ஏழு கோத்திர காரர்களுக்கும் தத்தத் கோத்திரானு சொல்லி செய்துவிடு என்று முடித்திருக்கலாம், இவர்களெல்லாம் காருண்ய பித்ருக்கள் என்று தர்ம சாஸ்திரம் எப்போது வரிசைப்படுத்தி ஒரு பட்டியலாக நமக்கு கொடுத்ததோ, அப்போது அவர்கள் எல்லாம் தனித்தனியாக செய்து தான் ஆகவேண்டும் என்பது நமக்குத் தெரிய வருகிறது.*
*ஆகையினாலே இவர்களை உத்தேசித்து நாம் செய்யும் பொழுது தனித்தனியாகத்தான் செய்ய வேண்டும் சிராத்த பிண்டங்கள் தனித்தனியாகத்தான் வைக்க வேண்டும். ஆவாகனம் செய்யும் போது அவர் அவர்களுடைய பெயரைச் சொல்லி தான் செய்ய வேண்டும். இதெல்லாம் தர்ம சாஸ்திரத்தை பார்க்கும்போது தெரிகிறது. விடுபட்டு போனவர்களை எப்படி சேர்ப்பது என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.*
No comments:
Post a Comment