*05/09/2020* *முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் விளக்கத்தை மேலும் தொடர்கிறார்.*
*மகாளய பட்சத்தில்,நம்முடைய பிதுர்க்களை திருப்திப் படுத்தக் கூடியதான ஸ்ராத்தங்களை செய்வதற்கான முறையை பார்ப்பதற்கு முன்பு, மகாளய பட்சத்தின் பெருமைகள் ஏன் இந்த அளவுக்கு முக்கியத்துவம் சொல்லப்பட்டிருக்கிறது, என்பதை புராணங்கள் மூலம் மகரிஷிகள் நமக்கு காண்பித்திருக்கிறார்கள்*
*வருஷரது பிறந்த உடனேயே எமன், பித்ருக்களை மேகத்தின் இடையே கொண்டு வந்து விட்டு விடுகிறார். அவர்கள் அந்த மேகத்திலே காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று ஆதித்திய புராணம் நமக்கு சொல்கிறது.*
*இந்த மஹாளய பட்சத்தை மட்டும் உத்தேசித்து இல்லை, எப்பொழுதுமே ஒவ்வொரு ஜீவனுமே, தன்னுடைய புண்ணிய பாவங்களை அனுபவித்த பிறகு, மேகங்களை திரை கொண்டு தான் இந்த பூலோகத்தில் வருகிறான் என்று உபநிஷத்துகள் காண்பிக்கின்றன.*
*ஒவ்வொரு ஜீவனும் அவன் செய்த புண்ணிய பாவங்களை அனுபவித்த பிறகு, கொஞ்சோண்டு பாக்கியிருக்கிறது பாவத்தையோ புண்ணியத்தையோ, வைத்துக்கொண்டு, ஆகாசத்திற்கும் வந்து அங்கிருந்து வாயுவாகவும், வாயிலிருந்து மேகத்திற்கும் வருகிறான். மேகத்திலே ஜலத்தோடு காத்துக் கொண்டிருக்கிறான் ஒவ்வொரு ஜீவனும் இந்த பூமியிலே வந்து பிறப்பதற்காக.*
*அப்படி மழை பொழிகின்ற பொழுது, அவன் வைத்துக்கொண்டு இருக்கின்ற கர்மா புண்ணியமாக இருந்தால், நல்ல வயல்களில் விழுந்து நெல், கோதுமை, எள், உளுந்து போன்ற தானியங்களாக ஆவிர்பவித்து, அதை சாப்பிடக் கூடிய மனிதனுடைய வயிற்றுக்கு போய், திரும்பவும் அவனுக்கு இந்த மனித ஜன்மா கிடைக்கிறது.*
*அப்படி அவன் வைத்துக் கொண்டு இருக்கின்ற கர்மா பாவ கர்மாவாக இருந்தால், பசு பக்ஷி களுடைய வயிற்றுக்கு போய், பசு பக்ஷிகள் ஆக பிறக்க நேரிடுகிறது.*
*இப்படித்தான் ஒவ்வொரு ஜீவ கதியும் உபநிஷத் நமக்கு காண்பிக்கிறது. இப்படி இந்த வருஷ ரது பிறந்த உடனே யமன், அனைத்து ஜீவர்கள் இடத்திலும் கருணை கொண்டு, பிதுர் லோகத்தை அடைந்தவர்கள், அல்லது பாப கர்மாவை அனுபவித்துக் கொண்டிருக்கக் கூடிய, நரகங்களில் இருக்கக்கூடியவர்கள், அல்லது பிரேதங்கள் ஆகவே இருக்கக்கூடியவர்கள், இவர்கள் அனைவரையும் மேகத்திலே கொண்டு வந்துவிடுகிறார் யமன்.*
*நம்முடைய பிதுருக்கள் இப்படி மேகத்திலே காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகையினாலே தான் நாம் மஹாளய பட்சத்தில் சங்கல்பம் செய்து கொள்ளும் பொழுது, சூரியன் கன்னி ராசியில் இருக்கின்ற போதும், ஆஷாட மாதத்தில் இருந்து ஐந்தாவது பட்சமான, இந்த கிருஷ்ண பக்ஷத்தில், நான் இந்த மஹாளய சிராத்தத்தை பண்ணுகிறேன் என்றுதான் சங்கல்பம் செய்து கொள்கிறோம்.*
*ஆஷாட மாதத்தில் இருந்து ஐந்தாவது மாதம் என்று ஏன் சொல்கிறோம், ஆஷாட மாதம் பிறந்த உடனேயே, எமன் அவ்வளவு பேரையும் மேகத்திலே கொண்டு வந்து விட்டு விடுகிறார். ஆஷாட மாதம் பிறந்தது முதல் நம்முடைய பிதுருக்கள் நம்மளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆகையினாலே தான் சங்கல்பத்தில் இலேயே நாம் அப்படிச் சொல்கிறோம் இதை தர்மசாஸ்திரம் காட்டுகிறது.*
*எவ்வளவு நாள் எப்படி காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால், ஆதித்திய புராணம் நமக்கு சொல்கிறது. மனுஷ ஜென்மாவை தவிர, பாக்கி அனைத்து பிறவிகளிலும், நாம் எந்த மாதிரியான பாவத்தினால் என்ன மாதிரியான பிறவிகளை எடுத்தோம், எந்த பாவத்தினால் இந்த தூக்கத்தை நாம் அனுபவிக்கிறோம், என்பது அனைவருக்கும் தெரியும். அது போல தான் நம்முடைய பித்ருக்களுக்கும் தெரிகின்றது.*
*பசியுடன் அவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நாம் இந்தப் பாவம் செய்ததினால் தான் இந்த பிறவி நமக்கு கிடைத்திருக்கிறது, என்று தெரிகிறது பிதுருக்களுக்கு.*
*இப்படி ஒரு பாவம் செய்ததினால் இப்படி ஒரு லோகம் நமக்கு கிடைத்திருக்கிறதே, இப்படி ஒரு நரகத்தை நாம் அனுபவிக்கும் படி ஆயிற்றே, நரக வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்க கூடிய பிதுருக்களும். பிரேதங்கள் ஆக இருக்கக் கூடிய பிதுருக்களும், நினைத்துக்கொண்டு பசியோடு அவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.*
*இவன் தான் நமக்கு புத்திரன், இவன்தான் பௌத்திரன், இதுவும் அவர்களுக்கு தெரிகிறது. நம்முடைய பசியைத் தீர்க்க கூடியவன் இந்த புத்திரன் தான், இப்படி புத்திரனை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள், இதை ஆதித்திய புராணம் நமக்கு சொல்கிறது.*
*மேலும் எவ்வளவு நாட்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள், ரொம்ப பசி அவர்களுக்கு, இந்தப் பசியை தீர்ப்பதற்கான ஆகாரம் நம்முடைய புத்திரன் இடத்தில் இருக்கு என்று, பெரிய அதிகமான ஆசையோடு காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த மகாளய பட்சத்தில் பித்ருக்கள் ஐ உத்தேசித்து நாம் ஒன்றுமே செய்யாமல் விட்டு விட்டால், அப்பவும் நம்முடைய பிதுருக்கள் திரும்பப் போவதில்லை, இந்த மகாலய பக்ஷம் இல்லாவிட்டாலும், புரட்டாசி மாதம் முடிவதற்குள் செய்வான், என்று பித்ருக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்*
*புரட்டாசி மாதமும் நாம் செய்யவில்லை என்றால், ஐப்பசி மாதம் முழுவதும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். பசி அவர்களுக்கு போனால் தானே அவர்கள் திரும்ப போக முடியும். ஐப்பசி மாதம் முழுவதும் பசியோடு காத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்பவும் பையன் செய்யவில்லை என்றால், விருச்சிக ராசியில் சூரியன் இருக்கின்றபோதும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.*
*அதாவது கார்த்திகை மாதம் பௌர்ணமி வரையிலும், நம்முடைய பிதுருக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். புத்திரன் இப்போது செய்து விடுவான் நம்முடைய பசியை போக்கி விடுவான் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆகையினாலே தான் மஹாளய பட்சத்திற்கான காலம் திருக்கார்த்திகை வரையிலும் காலமுண்டு.*
*அது வரையிலும் நாம் செய்யலாம். அப்பவும் அவன் செய்ய வில்லை என்றால், சில சாபங்களை கொடுத்துவிட்டு சில வஸ்துக்களை எடுத்துக்கொண்டு சென்று விடுகிறார்கள்,*
*என்ன மாதிரியான வஸ்துக்களை எடுத்துக் கொண்டு போகிறார்கள் என்றால், அவன் வைத்துக்கொண்டு இருக்கக்கூடிய தான பணம், சந்ததிகள், மன நிம்மதி, இந்த மூன்றையும் பித்ருக்கள் எடுத்துக்கொண்டு போய் விடுகின்றனர்.*
*இந்த மூன்றையும் நாம் இழக்க வேண்டிவரும் என்று தர்ம சாஸ்திரம் காண்பிக்கிறது நாம் மஹாளய சிரார்த்தம் செய்ய வில்லை என்றால், மேற்கொண்டு அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*
No comments:
Post a Comment