Monday, September 21, 2020

Deva prayag divya desam

மூன்றெழுத்ததனை மூன்றெழுத்ததனால்
மூன்றெழுத்தாக்கி மூன்றெழுத்தை
ஏன்று கொண்டிருப்பார்க்கு இரக்கம் நன்கு உடைய
எம் புருடோத்தமனிருக்கை
மூன்றடி நிமிர்த்து மூன்றினில் தோன்றி மூன்றினில்
மூன்றுருவானான்.
கான்தடம் பொழில் சூழ் கங்கையின் கரைமேல்
கண்டமென்னும் கடிநகரே

அ, உ, ம என்கிற மூன்று எழுத்துக்களைக் கொண்ட பிரணவத்தை நிருக்தத்தினால் மூன்று எழுத்தாகப் பிரித்து, அதை மனதில்   நினைப்பவருக்கு அருள் புரிபவனாகவும், மூன்று தன்மையைத் தோற்றுவித்து, அம் மூன்று தன்மைக்கு எதிராக மூன்று தன்மையைக் கொண்டவனுமாகிய எமது புருஷோத்தமனுடைய இருப்பிடம் நறுமனம் மிகுந்த சோலைகள் சூழ்ந்த கங்கையின் கரையில் அமைந்த  கண்டம் என்னும் கடி நகராகும்.  

பிரணவத்துடன் நமஸ்ஸையும் நாராயணாய என்பதையும் கூட்டினால் ஓம் நமோ நாராயணாய என்ற திருமந்திரம் உண்டாகும். அந்த மூன்று பதங்களும் ( நிலைகளும்)–
(ஓம்) அநந்யார்ஹ சேஷத்வம் –எம்பெருமான் ஒருவனுக்கே அடிமையாதல்

நமோ – அநந்ய சரணத்வம் – எம்பெருமானே உபாயம்

நாராயணாய – அநந்ய யோக்யத்வம் – பகவானைத் தவிற வேறு ஒன்றை உபேயமாகக் கொள்ளாமை.

திருக் கண்டமென்னும் கடிநகர்  - தேவப்ரயாகை

மூலவர் – நீலமேகப் பெருமாள் – புருஷோத்தமன் – நின்ற திருக்கோலம் – கிழக்கே திருமுக மண்டலம்.

தாயார் – புண்டரீகவல்லி
தீர்த்தம் – மங்கள தீர்த்தம் – கங்கை நதி
விமானம் – மங்கள விமானம்

கோவிலுக்குப் பின் அனுமன் சன்னிதி உள்ளது. அளக்நந்தா, பகீரதி இவற்றின் சங்கமம்.. பகீரதனின் தவப் பயனால் கங்கை பூமிக்கு வந்ததால் ஆதி கங்கைக்கு பகீரதி என்றும் பெயர் உண்டு. மிகவும் ரம்யமான க்ஷேத்ரம். ஆழ்வார் பாடிய பெருமாளை இங்கு ரகுநாத்ஜி என்றே அழைக்கின்றனர்.

ஆதி சங்கரர் ரகு நாதனின் மூர்த்தியை ஸ்தாபித்தார்.

மங்களாசாஸனம் – பெரியாழ்வார் – 391-401 – 11 பாசுரங்கள்

No comments:

Post a Comment