Thursday, September 17, 2020

Dasavatar & Gita - Vamanavatar


Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

தசாவதாரமும் கீதையும்

வாமனாவதாரம்

வாமனர் ஞான ஸ்வரூபம் . ஞானம் இல்லையேல் பதவியும் செல்வமும் அஹங்காரத்தைதான் வளர்க்கும் என்பது மஹாபலி விஷயத்தில் காண்பிக்கப்பட்டது,.

அவன் எல்லாம் தன்னுடையது என்றும் தான் எல்லாம் தரவல்லவன் என்றும் எண்ணினான். எல்லாமே பக்வானால் கொடுக்கப்பட்டது என்பதை மறந்தான். பக்தி உள்ளவனும் பெருமிதத்தால் அதை மறந்துவிடக்கூடும் என்பதையே இது காட்டுகிறது.

மூன்றடி மண் கூடக் கொடுக்க இயலவில்லை என்று கண்டதும் அவன் பக்தியானது அஹம்பாவம் நீங்கி ஞானம் பெற்று வானளாவ உயர்ந்தது. அதற்கு பதிலாக பகவான் தன்னையே கொடுக்கிறான்.

கீதையில்,
'ஞானீ து ஆத்மைவ மேமதம் ஆஸ்தித: ஸ ஹி யுக்தாத்மா மாமேவ அனுத்தமாம் கதிம்,' ( கீ. 7.18) ஞானி என்னுடைய ஸ்வரூபமே, என்னிடம் ஒன்றிய மனமும் புத்தியும் கொண்ட அவன் மிகவும் உயர்ந்த கதியான என்னையே பற்றி நிற்கிறான், என்று கூறியுள்ளபடி, மஹாபலிக்கு உத்தம ஸ்தானத்தை அளித்தார். அவனுடைய பாதாள க்ருஹத்தின் வாயில் காப்போனாகவும் நின்றார்.

பரசுராமாவதாரம்

பரசுராமர் உட்பகைவரான காமக்ரோதாதிகளை வென்ற யோகியின் ஸ்வரூபம். அதர்மத்தின் வழி சென்ற க்ஷத்ரியர்களே காமக்ரோதாதியர். ரஜஸ் தமஸ் இரண்டையும் வென்ற பின் சத்வம் மேலோங்குகிறது. க்ஷத்ரியர்களை வென்று பூமியை கஸ்யபரிடம் கொடுத்ததைக் குறிக்கிறது.
பரசுராமரின் கோடலி விவேகம் வைராக்யம் இவற்றைக் குறிக்கிறது.

கீதை பதினைந்தாவது அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஸம்சாரம் என்கிற அரச மரம் முக்குணங்கள் என்ற நீரினால் வளர்ந்து விஷய சுகம் என்ற தளிர்களுடன் கூடி எங்கும் பரவி உள்ளதாக சித்தரிக்கப் படுகிறது. 'குணப்ரவ்ருத்தா விஷயப்ரவாளா: ,' (கீ. 15.2)

அஸ்வத்தம் ஏனம் ஸுவிரூட மூலம் அஸங்கசஸ்த்ரேண த்ருடேன ச்சித்வா ( கீ. 15. 3)
ஸம்சார உருவான அரச மரத்தை உறுதியான வைராக்யம் என்ற கோடலியினால் வெட்டி எறிந்து, என்று கூறுவதையே இங்கு காண்கிறோம்.

  

No comments:

Post a Comment