மகாளய அமாவாசை ஸ்பெஷல் !
மஹா பரணி !
பித்ருக்கள் பக்ஷம் எனப்படும் மஹாளய பக்ஷத்தில் நான்காம் நாளான சதுர்த்தி தினம் மஹா பரணி எனும் முக்கிய தினமாக அனுஷ்டிக்க படுகிறது.
மஹாபரணி" என்பது புரட்டாசி மாதத்தில் மஹாளய பக்ஷத்தில் வரும் பரணி நக்ஷத்திரமாகும். பரணி நட்சத்திரம் என்பது யமதர்ம ராஜனின் நக்ஷத்திரம் ஆகும்.
இந்நாளில் இறந்த நம் முன்னோர்கள் எல்லாம் அவரவர் கர்ம விணைக்க ஏற்ப யமதர்மனின் தீர்ப்புக்கு இணங்க சொர்க்கத்திற்க்கும் நரகத்திற்க் கும் செல்வார்கள் என்பது நியதி ஆகும்.
யமதர்மனுக்கு உகந்த மஹாபரணி நக்ஷத்திர நாளில் முன்னோர்களுக்கு ஸ்ரார்த்தம், திதிகள், தர்ப்பணம் செய்வது மற்றும் யம தீபம் ஏற்றுவது போன்றைவைக ளை செய்தால் யமதர்மன் மனம் மகிழ்ந்து நரகத்திற்க்கு செல்ல வேண்டிய நம் முன்னோர்களின் வேதனையை குறைத்து சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பார்கள் என ஐதீகம்.
மஹாளய பக்ஷத்தில் மஹா பரணியிலும் தீபாவளிக்கு முந்தைய தினத்தன்றும் யம தீபம் ஏற்றுவது நம் மரபு. மரணபயம் நம்மைவிட்டு அகலவும் துர்மரணமின்றி அமைதியான மரணம் ஏற்படவும் யமதர்மராஜனை தவறாமல் வழிபட வேண்டும்.
தக்ஷிணாயன புண்ய காலத்தில் வீடு தேடி வரும் முன்னோர்களுக்கு ஆடி அமாவாசை, மஹாளய பக்ஷம் மற்றும் தீபாவளி அமாவாசை ஆகிய நாட்களில் தர்பணம் செய்வது மரபு.
அவ்வாறு வருகை தரும் பித்ருகளுக்கு. அவர்கள் மீண்டும் திரும்பிச் செல்வதற்கு வெளிச்சம் காட்டுவது "யம தீபம்" மட்டுமே. அவர்களை வழியனுப்பும் பொருட்டு தீபமேற்றுதல் வேண்டுமாம்.
சாத்திரப்படியான யம தீபம் ஏற்றும் முறை:
1. உங்கள் வீட்டின் உயரமான பகுதியில் யம தீபம் ஏற்றப்பட வேண்டும்.
2. தெற்கு திசை நோக்கி விளக்கு எரிய வேண்டும்.
3. விளக்கேற்றிய பின்னர், இந்து பலிதானிகளையும் உங்கள் முன்னோரையும் மனதில் ஓரிரு நிமிடங்கள் சிந்திக்க வேண்டும்.
4. பின்னர்க் கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச் சொல்ல வேண்டும்.
ஸ்ரீ யமாய நம: யமாய தர்ம ராஜாய
ம்ருத்யவே சாந்த காயச
வைவஸ்தாய காலாய ஸர்வ பூத க்ஷயாயச
ஓளதும்பராய தத்னாய நீலாய பரமேஷ்டினே!
வ்ருகோதராய சித்ராய சித்ரகுப்தாய வை நம:
சித்ரகுப்தாய வை ஓம் நம இதி.
*ஸக்ருன் மஹாளயம் செய்பவர்கள் கவனிக்க வேண்டிய தினங்கள்*
नन्दायां भार्गवदिने चतुर्दश्यां त्रिजन्मसु।
एषु श्राद्धं न कुर्वीत गृही पुत्रधनक्षयात् ।।
நந்தாயாம் பார்கவதிநே சதுர்தஶ்யாம் த்ரிஜந்மஸு।
ஏஷு ஶ்ராத்தம் ந குர்வீத க்ருஹீ புத்ரதநக்ஷயாத் ।।
மஹாளய பக்ஷத்தில் பக்ஷ மஹாளயம், ஸக்ருன் மஹாளயம், என இரண்டு விதம் உள்ளது.
1)பக்ஷத்திலில் 16நாளும் ஶ்ராத்தம் தர்பணம் செய்வது பக்ஷ மஹாளயம்.
2) பக்ஷத்தில் ஒருநாளில் மட்டும் ஶ்ராத்தம் தர்பணம் செய்வது ஸக்ருன் மஹாளயம்
பக்ஷமஹாளயம் செய்பவர்கள் நாள் நக்ஷத்ரம் எதையும் கவனிக்காமல் பக்ஷம் முழுவதும் ஶ்ராத்தம்/ தர்பணம் செய்யலாம் ஸக்ருன் மஹாளயம் பண்ணுபவர்கள் நாள் நக்ஷத்ரம் முதலியவைகளை தேர்ந்தெடுத்து தான் செய்ய வேண்டும்.
நந்தா திதி எனப்படும் ப்ரதமை, ஷஷ்டி, ஏகாதஶி, ஆகிய திதிகளிலும் வெள்ளிக் கிழமையிலும் , சதுர்தஶி திதியிலும், மஹாளயம் செய்பவரின் ஜன்ம அனுஜன்ம த்ரிஜன்ம நக்ஷத்ரங்களிலும் , தனது பத்னீ புத்ரன் இவர்களின் நக்ஷத்ரத்தன்றும் ஸக்ருன் மஹாளயமானது செய்யக்கூடாது. அப்படி செய்யப்பட்டால் தனம் முதலியவைகளுக்கு குறைவு ஏற்படும் என்பதினால்.
இவ்வாறு தேர்ந்தெடுப்பது கடினம் என்பதால் இதற்கு விதிவிலக்காக சில நாட்கள் சொல்லப்பட்டுள்ளது
अमापाते भरण्यां च द्वादश्यां पक्षमध्यके ।
तथा थिथिं च नक्षत्रं वारं च न विचारयेत् ।
அமாபாதே பரண்யாம் ச த்வாதஶ்யாம் பக்ஷமத்யகே ।
ததா திதிம் ச நக்ஷத்ரம் வாரம் ச ந விசாரயேத் ।
மஹாவ்யதீபாதம், மஹாபரணி, த்வாதஶி, மத்யாஷ்டமி, கஜச்சாயை, போன்ற புண்யகாலங்களில் ஒரு நாளை தேர்ந்தெடுத்து திதி, வாரம் , நக்ஷத்திரத்தை ஆராயாமல் மஹாளய ஶ்ராதத்தை செய்யலாம்
*நிர்ணய ஸிந்து*
*ஐவகை ஸ்நானங்கள் எவை ?*
1) ஆக்னேயம் - விபூதியை பூசிக் கொள்ளுதல்
2) வாருணம் - நீரில் மூழ்குதல்
3) பிரம்மம் - மந்திர நீரால் ஜலத்தில் மூழ்குதல்
4) வாயவ்யம் - பசுவின் கால் தூசு ( தூளி ) தன் மீது படுமாறு நடந்து செல்லுதல்
5) திவ்யம் - வெயிலுடன் கலந்த மழை நீரில் மூழ்குதல்.
No comments:
Post a Comment