Friday, September 11, 2020

ஸ்ரீ_பாஞ்சராத்ர_ஸ்ரீஜெயந்தி

*ஸ்ரீ_பாஞ்சராத்ர_ஸ்ரீஜெயந்தி*

       *10.09.2020*

        *அஷ்டமி திதியும் ரோகிணி நட்சத்திரமும் கூடிய ஸ்ரீ பாஞ்சராத்ர ஸ்ரீஜெயந்தி*

ஸ்ரீஜெயந்தி என அழைக்கப்படும் இந்த நாள் ஆவணி மாதத்தில் சிம்மம் ராசியில் சூரியன் இருக்கும் சமயம் அஷ்டமி திதியும் ரோகிணி நட்சத்திரமும் கூடிய நாளான இந்த தினம் ஸ்ரீஜெயந்தி தினமாகும் இந்த தினம் ஸ்ரீ #கிருஷ்ண பகவான் அவதரித்த தினமாக கொண்டாடப்படுகிறது

ஸ்ரீ_பாஞ்சராத்ர ஸ்ரீஜெயந்தி :
வைணவ ஆகமங்களில் பாஞ்சராத்ரம் வைகானசம் என்னும் இரண்டு விதமான ஆகமங்கள் உண்டு. ஆகமங்கள் என்பது ஆராதனை முறைகளாகும். #பாக்ன்சராத்ர_ஆகமம் என்பத பத்ரிகாஸ்ரமத்தில் பகவான்விஷ்ணு தானே நரனும் நாராயணனுமாகிநாராயணன்_நரனும்மு உபதேசித்த_பூஜைமுறைகளாகும், இந்த பூஜை முறை ஐந்து ராத்திரிகளில் சொல்லப்பட்டதால்_பாஞ்சராத்ரம் என்று பெயர் பெற்றது. வைகானச ஆகமம் என்பது பகவான் விஷ்ணு தானே வகானச முனிவராகி_சௌனகாதி முனிவர்களுக்கு உபதேசம் செய்ததாக கூறப்படுவதால் இந்த ஆகமம் வைகானச ஆகமம் என்று கூறப்படுகிறது.

பாஞ்சராத்ர ஸ்ரீஜெயந்தி 

பாஞ்சராத்ர ஸ்ரீஜெயந்தி என்பது ஆவணி மாதம் சிம்மத்தில் சூரியன் இருக்கும் சமயம் கிருஷ்ணபட்சம் அஷ்டமியன்று கொண்டாடப்படும் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி ஆகும். இன்று சூரிய உதயத்தில் சப்தமி அல்லது கிருத்திகை நட்சத்திரம் சம்பந்தம் ஒரு வினாடி ஓம் நமோ நாராயணா இருந்தாலும் அது தோஷமுள்ள நாளாக கருதப்படுவதால் மறுநாள் தான் ஸ்ரீஜெயந்தியாக கொண்டாடப்
படவேண்டும். மேலும் சூரிய உதயத்தில் அஷ்டமி ரோகிணி ஆகியவை இல்லாதிருந்தாலும் அன்றே பாஞ்சராத்ர ஸ்ரீஜெயந்தி ஆகும்.
ஸ்ரீ கிருஷ்ண 
ஜெயந்தி விரதம்
ஸ்ரீ வைகானச ஸ்ரீஜெயந்தி ஆவணி மாதம் சிம்மத்தில் சூரியன் இருக்கும் சமயம் நடு இரவில் ரோகிணி இருக்கும் சமயம் வைகானச ஸ்ரீஜெயந்தியாகும் அன்று தேய்பிறை அஷ்டமி அர்த்தராத்திரிக்கு முன்பு சிறிதளவு இருந்தாலும் போதுமானது. இவ்வாறு பலவகையிலும் பலவித ஆச்சாரியார்களின் வழிகாட்டுதலின்படி பலவிதமான நாட்களில் பலவித பெயர்களில் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment