11/07/2020 முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் விளக்கத்தை மேலும் தொடர்கிறார்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் அபர கர்மாவினை எப்படி நாம் செய்வது என்பதைப் பற்றி தர்ம சாஸ்திரம் கூறும் கருத்துக்களை பார்த்துக்கொண்டு வருகிறோம்.
*முக்கியமான ஒரு விஷயம். இந்த நாட்களில் அப்புற கர்மாவை பற்றி ஒரு ஹாலஸ்சியம் அதாவது வேண்டாவெறுப்பாக ஏதோ ஒரு முறையில் செய்து முடித்து விட வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.*
ஆனால் அப்படி கூடாது நாம் என்ன நினைக்கிறோம் அபர கர்மா என்றால் ஏதோ அந்த சரீரத்தை கொண்டுபோய் மந்திரங்களைச் சொல்லி அக்னியில் வைப்பது என நினைத்துக் கொண்டிருக்கிறோம். அது மட்டுமல்ல அதை அனுசரித்து நிறைய விஷயங்கள் நடக்கின்றது அபர கர்மாவில்.
*அதில் மிகவும் முக்கியமான ஒரு விஷயம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அக்னி சொல்லப்பட்டிருக்கிறது. ஐந்து விதமான அக்னியை நமக்கு தர்மசாஸ்திரம் காண்பித்து இருக்கிறது. அக்னிஹோத்ரா அக்னி, ஹௌபாசனா அக்னி, கபால அக்னி, துஷா அக்னி, உத்தபனா அக்னி என்று ஐந்து விதமான அக்னிகள் உள்ளது. யார் யாருக்கு எந்த முறையில் சம்ஸ்காரங்கள் செய்ய வேண்டுமோ அந்தந்த முறையிலே அதை செய்ய வேண்டும்.*
ஏனென்றால் இந்த *சரீரத்தை நமக்கு கொடுத்தவர் அக்னி பகவான். கடனாக நமக்கு இதை கொடுத்திருக்கிறார். திரும்பவும் இந்த சரீரத்தை அவருக்கு பத்திரமாக திருப்பி கொடுக்க வேண்டும். அதனால் ஒருவர் காலமாகும் பொழுது எந்த நிலையில் அவர் இருக்கிறாரோ அதற்கு தகுந்தார்போல் அக்னியானது சொல்லப்பட்டிருக்கிறது.* தர்ம சாஸ்திரத்தில் அக்னி நிர்ணயம் என்ற ஒரு பகுதியே இருக்கிறது.
அதிலே யார் யாருக்கு *எந்த எந்தவிதமான சம்ஸ்காரங்கள் செய்யப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அவ்வளவு தூரம் போக வேண்டாம் சாதாரணமாக நாம் ஒரு ஹோமம் செய்தால் கூட, அந்த ஹோமம் செய்யப்படவேண்டிய தான அக்னி எப்படி இருக்கவேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. நாம் ஏதோ ஒரு விதத்திலே சம்பாதித்து அந்த அக்னியை செய்கிறோம். அப்படி செய்கின்ற பொழுது அந்த ஹோமமானது முடிந்துவிடும். ஆனால் அந்தக் ஓம் அதனுடைய பலன் பார்த்தோமேயானால் மிகவும் குறைவாக தான் நமக்கு கிடைக்கும். 100% அந்தக் ஓமத்தின் உடைய பலன் நமக்கு கிடைக்க வேண்டுமென்றால் அந்த அக்னி மிகவும் முக்கியம்.* எல்லா விதமான ஹோமங்களுக்கம்மே ஒரு அக்னி சொல்லப்பட்டிருக்கிறது. அது என்ன அக்னி என்றால் மகரிஷிகள், *ஆபஸ்தம்பர் சொல்லும் பொழுது அரச மரத்தினுடைய வேரிலிருந்து எடுக்கப்பட கூடிய ஒரு கட்டை. அதற்கு அரணி என்று பெயர் சமி கர்ப்பம். அந்தக் கடையை கடந்து எடுத்து வைக்கின்ற அக்னியில் தான் ஹோமங்கள் செய்யப்படவேண்டும்.* அல்லது *அக்னி ஹோத்திரம் செய்கின்ற ஒருவருடைய வீட்டில் இருந்து எடுத்து வரப்பட்ட அக்னியாக* இருக்கவேண்டும். இந்த இரண்டு விதமான அக்னிகள் மட்டும்தான் நாம் செய்யப்பட கூடியதான அனைத்தும் ஹோமங்களுக்மே சொல்லப்பட்டிருக்கிறது.
நாம் ஹௌபாசனம் ஆரம்பித்து செய்தாலும்கூட, இந்த முறையிலேயே தயார் செய்ய பட்ட அக்னியாக இருக்க வேண்டும். இது இல்லாமல் இன்னும் பலவிதமான அக்னிகள் தர்ம சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன.
அதாவது காட்டுத்தீ இருக்கிறது அதுவும் அக்னிதான். எரிமலை இருக்கின்றது. சூரியனிடமிருந்து லென்ஸ் ஒன்றை நாம் வைத்தோமே ஆனால் அதிலிருந்து ஒரு அக்னி உண்டாகும். ஆனால் இவையெல்லாம் நாம் ஹோமங்கள் செய்வதற்கு உகந்த அக்னி அல்ல.
*இது விஷயமாக நிறைய விசாரங்களை தர்மசாஸ்திரம் செய்திருக்கிறது. இந்தக் காட்டுத் தீ அக்னியூ அல்லது லென்ஸ் மூலமாக நாம் எடுக்க கூட அக்னியூ வைத்துக் கொண்டு ஹோமம் செய்யக்கூடாதா என்றால் அதெல்லாம் சண்டாளா அக்னி என்று பெயர். எந்தெந்த ஹோமங்களுக்கு என்னவிதமான அக்னி நாம் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை தர்மசாஸ்திரம் சொல்லிக் கொடுத்திருக்கிறது. அப்படித்தான் நாம் செய்ய வேண்டும். எரிமலைத் தீ, தீப்பெட்டி மூலமாக உற்பத்தி பண்ணக்கூடிய தீயோ காட்டுத்தீயை அல்லது சூரியனிடமிருந்து லென்ஸ் மூலமாக பெறப்பட்ட தீயோ வைத்துக்கொண்டு ஹோமங்களை செய்யக்கூடாது. எப்படி நமக்கு சொல்லி இருக்கிறார்களோ அப்படி செய்தால் தான் செய்ததாக அர்த்தமே தவிர, இல்லையென்றால் நாம் கணக்கு காட்டுகிறோம் என்று அர்த்தம் நாமே நம்மை ஏமாற்றி கொள்கிறோம்.*
அபர கர்மாவிலே அக்னி ஆனது மிகவும் முக்கியம். அதாவது *அக்னிஹோத்திரம் செய்பவராக இருந்தால், அவர் மூன்று விதமான அக்னியை காப்பாற்றிக் கொண்டு வருகிறார். கார்கபத்தியம், தக்ஷிணா அக்னி, ஆகமணியம் என்ற இந்த மூன்று. இந்த மூன்றில் ஏதாவது ஒன்றில் தான் அவருடைய தேகமானது வைக்கப்பட வேண்டும். இரண்டாவதாக ஹௌபாசனம் என்ற ஒரு அக்னி. அக்னி ஹோத்திரம் வரைக்கும் போகவில்லை திருமணம் செய்து கொண்டிருக்கிறார் கிரகஸ்தனாக ஆக இருக்கிறார் என்றால் அவருக்கு அந்த ஹௌபாசனா அக்கினியிலே சரீரத்தை தகனம் செய்ய வேண்டும். அதேபோல கபால அக்னி என்று ஒன்று இருக்கிறது. பிரம்மச்சாரி திருமணமாகாத கன்னிகைகள் என்றிருந்தால், கபால அக்னி என்று வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கலயத்தில் அக்னிஹோத்ரம் செய்து வரக்கூடிய அக்னியிலிருந்து அல்லது அந்தக் கடையில் கடைந்தெடுத்த அக்னி, அந்த அக்னியில் இந்த மண் கலயத்தை சூடு செய்ய வேண்டும். அது சூடானவுடன் அதனுள்ளே தேங்காய் நாரை போடவேண்டும் அதிலிருந்து அக்னி ஆனது பிடித்துக்கொள்ளும். அதற்குத்தான் கபால அக்னி என்று பெயர். இவர்களுக்கு அதிலேதான் சம்ஸ்காரம் செய்யப்படவேண்டும். அதேபோல் துஷா அக்னி என்று இருக்கிறது. அதாவது இந்த மண் கலயத்தை அந்த அக்னி மேல் வைக்கவேண்டும் அதை சூடானவுடன் அதனுள்ளே நெல் பதரையோ அல்லது தவிடையோ போட்டு கொண்டே வரவேண்டும். அது பிடித்துக் கொண்டுவிடும் அப்படி எடுக்கப்பட்ட அக்னி துஷா அக்னி என்று அழைக்கப்படும். அது சிலருக்கு சொல்லப்பட்டிருக்கிறது. அதேபோல உத்தபனா அக்னி என்று இருக்கிறது. அதாவது மனைவி காலமான கணவன். அல்லது கணவன் முதலிலே காலமான பெண். இவர்களுக்கு உத்தபனா அக்னியை வைத்துக்கொள்ள வேண்டும். அதாவது அந்த அக்கினியிலே ஒரு தர்ப்பைக் கட்டை காண்பிக்க வேண்டும். அந்த தர்பை கட்டு எரியும் பொழுது இரண்டாவது தர்ப்பைக் கட்டை காண்பிக்க வேண்டும். அந்த இரண்டாவது தர்பை கட்டு எரியும் பொழுது மூன்றாவது தர்ப்பைக் கட்டை காண்பிக்க வேண்டும். மூன்றாவதாக அக்னியில் காண்பிக்கப்பட்டு எடுக்கப்பட்ட அக்னி தான் உத்தபனா அக்னி என்று பெயர். அதிலேதான் விதரனுக்கோ அல்லது விதவைக்கோ தகனம் செய்யப்பட வேண்டும். இப்படியாக தர்மசாஸ்திரம் காண்பிக்கின்றது.* இது மிகவும் முக்கியம் அப்படி யாருக்கு எந்த அக்னி சொல்லப்பட்டிருக்கிறதோ, என்பதைத் தெரிந்து கொண்டு அதன்படி சம்ஸ்காரம் செய்ய வேண்டும். புத்திரன் செய்தாலும் சரி அல்லது ஞாதிகள் செய்தாலும் சரி. யார் செய்தாலும் சரி பொறுப்பு எடுத்துக்கொண்டு செய்கிறவர் அவருக்கு சொல்லப்பட்ட அக்னி தான் அங்கு வைத்து இருக்கிறதா என்பதை பார்த்துவிட்டு கர்மாவை செய்ய வேண்டும்.
*அக்னி என்பது அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை தர்மசாஸ்திரம் கண்டித்திருக்கிறது. அதைப் பார்க்காமல் வாத்தியார் சொல்கிறார் அவர் சொல்கிறார் என்று நாம் பொறுப்பை முடித்து விட்டோமேயானால், அது நமக்கு பெரிய சிரமத்தை பின்னாளிலே உண்டு பண்ணும். நாம் ஏதோ ஒரு வழியிலே வாழ்ந்து முடித்து விடுவோம் ஆனால் நம்முடைய குழந்தைகள் அனைவரும் வீதியிலே வந்து நிற்கும் படி ஆகிவிடும். பெரிய கஷ்டங்களை நாம் சந்திக்க வேண்டி வரும். ஆகையினாலே இந்த அக்னி விஷயத்தில் நாம் மிகவும் ஜாக்கிரதையாக செய்ய வேண்டும். அந்த அக்னி யானவர் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார் என்பதினால் தான் உடனே அதை செய்ய வேண்டும். மந்திரம் எதுவும் சொல்லாமல் அமந்தரமாக செய்யக்கூடாது. அதாவது வெறுமனே கொண்டு வைத்து செய்யக்கூடாது என்பதை நாம் புரிந்து கொண்டு செய்ய வேண்டும்.*
மேற்கொண்டு அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.
No comments:
Post a Comment