Wednesday, July 29, 2020

dont get cheated - Poem on Krishna

Courtesy:Smt.Padma Gopal

(ஏமாறாதே, ஏமாறாதே...)

பட்டு ஒன்று, கரைக்குது பார்!
மொட்டு, அதற்கு சிரிக்குது பார்!
தொட்டு, திசைதிருப்புது பார்;
சிட்டு, சரிந்து போகுது பார்!

சொல்ல வந்த சேதியையே−
மெல்ல அளக்கும் நேர்த்தியைப் பார்;
கள்ளமில்லா கன்றுமிங்கு−
உள்ளம் தந்து, உவப்பதைப் பார்!

இதையும் அதையும் பேசிப்பேசி−
இதயத்தைஅது கவர்ந்திடுமோ?
கதையை நம்பி, கன்றுக்குட்டி−
கரமதனைத் தந்திடுமோ?

இசைவு ஒன்று பெற்றிடவே−
என்ன மாயம் செய்திடுமோ?
என்னைப் போல யாருண்டு−
என்று சொல்லி ஏய்த்திடுமோ?

பார்வையிலே பொய்இருக்கே,
பார்த்தால், அதுதெரியாதோ?
ஈர்ப்பு மிகுந்து விடுமானால்−
ஏமாறுவதும், சுகம்தானோ?

Image may contain: 2 people

No comments:

Post a Comment