Tuesday, June 2, 2020

Tamil words that have sanskrit origin

கீழேயுள்ளவை எல்லாமே சமஸ்கிருத வார்த்தைகள். பல வார்த்தைகள் நம்மிடையே புழக்கத்தில் இருக்கும் வார்த்தைகள். இவைகளையெல்லாம் தவிர்த்து எழுதினால் தான் தனித்தமிழாம், புதுத்தமிழாம், அவர்கள் தான் தமிழ் ஆர்வலர்களாம்.  தமிழிலிலேயே இயற் சொற்களைத் தவிர திசைச் சொற்கள் எப்போதுமே இருந்துதான் வந்திருக்கின்றன திருவள்ளுவர் காலத்தில் இருந்தே.
இரண்டே இரண்டு குறள் மட்டும் சொல்கிறேன் அதில் உள்ள சொற்களைப்பாருங்கள்.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி 
பகவன் முதற்றே உலகு.
தானம்தவ மிரண்டும் தாங்கா வியனுலகம் 
வானம் வழங்கா தெனின்
முதல் குரலிலே ஆதி யும் பகவானும் 
அடுத்ததில் தானம், தவம், உலகு சமஸ்கிருத வார்த்தைகள்.
அற்புதம் ஆலயம் ஆதாரம்,ஆலோசனை, அவசியம் அவசரம் அலங்காரம் அகங்காரம் அர்ச்சனை ஆரம்பம் ஆரத்தி,ஆராதனை அகிலம் ஆதி அந்தம் அவதாரம் அபராதம் அத்தியந்த அங்கம் அபலை, அநேகம் ஏகம்,ஆபத்து, ஆகாரம் கருணை பகவான், ஆச்சரியம் ஆச்சாரியர் குரு மாதா பிதா தேவன் தேவி அசுரர்,ஆசனம்,மூலம்,பிம்பம், உச்சம், நீச்சம், உற்சவம்,சாகசம்,சாமர்த்தியம்,ஈனம் (ஹீனம்)காமம் ,உற்பத்தி, பிரச்சாரம்,இயந்திரம், பிரகடனம், வர்ணனை, வர்ணம, உபகாரம் ,கோகுலம்,பூர்ணம்,சம்பூர்ணம், பரிபூர்ணம், நிரந்தரம்,சீலம் குணம் மனம், சிந்தனை, நிந்தனை தர்மம் அதர்மம் யோக்கியதை சங்கம் சங்கமம் புருஷன் உத்தமம் சர்வம் ஐஸ்வர்யம் தனம் ஜனம் ஜன்மம் ஜனனம் ஜந்து சாந்தம் பந்தம் பிரியம் பிரேமை, நிரந்தரம் பிசாசு உலகம் உலோகம் ஆதிததியன் சந்திரன் சூரியன் பூர்ணம் பௌர்னமி அமாவாசை இரவு தினம் தினகரன் பிரபாகரன் சபை சம்மேளனம் சந்தோஷம் தேகம் தைரியம் அதைரியம் அமானுஷ்யம் அச்சரம் (அக்ஷரம்) ஆச்சாரம் அபச்சாரம் அனாச்சாரம் ஆதி அர்தம் (பாதி) அர்த்தம் (பொருள்) விதி, யாகம், வேதம், சங்கீதம் , சாஸ்திரம் , அஸ்திரம், சஸ்திரம், வஸ்திரம், பாக்கியம், அபாக்கியம், வைதீகம், வைதவ்யம், விதவை, நாதன், அநாதை, முக்தி ,பக்தி, மேகம், சரித்திரம் பூகோளம், பௌதீகம், ரசாயனம், தியாகம்,தியானம், கௌரவம், சர்வம், சர்ப்பம் , கர்மம், கர்த்தா, வியாகூலம், வியாகரணம், விலாசம், காரணம், கோகிலம், கஷ்டம் நஷ்டம் லாபம், மீன், நட்சத்திரம், ராசி, பலன், பலம், உபயோகம், உபகாரம், பிரயோகம், தத்துவம், பட்சம், பகிஷ்காரம், புனர்ஜன்மம், ஜன்மம், ஆயுள் (ஆயுஷ்) சத்தியம், சாதகம், சாதனை,.சாட்சி, சங்கதி, சங்கேதம், சம்பவம், சம்பூர்ணம், சமயம், சேவை, ஆசிரமம், விமானம், சித்தம், ஆலிங்கனம், சம்போகம், போகம், மோகம், வம்சம், வேதனை, சாதனை, அமிர்தம், விஷம், விஷேசம் , பூர்வம், அபூர்வம்,பருவம், காலம், விஞ்ஞானம், அஞ்ஞானம், சொர்க்கம் நரகம், சித்திரம், சௌந்தரியம், சுந்தரி, சிந்தனை, வந்தனை, நிந்தனை, சொர்ணம், ஈஸ்வரன், பார்வதி, அம்பிகை, துர்க்கை, வருடம், மாதம், வாரம், வரம், சாபம், சபதம், பிரச்சினை, ஜலம், நாட்டியம், பாவனை, ராகம், தாளம், லயம், சந்தனம், சந்தானம், கீதம் சங்கீதம் , கானம், சீக்கிரம், வார்த்தை, யோசனை, காவியம், கவிதை, கருணை, கவி, சுபம், அசுபம், சுத்தம், அசுத்தம், சத்தம் (சப்தம்), வேகம், விவேகம், வாதம், விவாதம் வாஞ்சை, வாத்சல்யம், தீர்க்கம், மார்க்கம், ஆகுதி, தாகம், வீரம், செந்தூரம், சிங்காரம், பங்கம், சக்தி, ஆசீர்வாதம், ஆகமம், குருகுலம், குரு, குலம், சூலம், போஜனம், சாதகம், போதனை, வாசம், வாசனை, லட்சியம், அலட்சியம், நிச்சயம், மாமா, (தமிழ் மாமா அம்மான்தான்) மாமி, சமாதானம், சாத்வீகம், காவியம், இதிகாசம், அதிசயம், மரியாதை, புத்தி, சுவாதீனம், சுயம் (ஸ்வயம்), நாதன், நாதம், கீதம், சிற்பம், (சில்பம்), சந்தர்ப்பம், அதிதி, காமம், மோகம், மேகம், வாயு, அக்கினி,(அக்னி), புத்திரன், கற்பனை (கல்பனா), சாஹித்யம், தூரம், அண்டம், பகிரண்டம், பூதம், சாது, பசு, வாயு, சிரமம், பரிகாரம், கலை, மத்திய, மாத்யம், மூலம், நகல், மந்திரம், தந்திரம், மீன், பூமி, ஆகாயம், பாதாளம், பாதம், பிரகடனம், பிரதிநிதி, பிரத்தியட்சம், யதார்த்தம் லட்சியம், கேசம், சிரசு பாதம், சமுத்திரம், சாகரம், பேதம் வேதம், கலை, விஷேசம், விரதம், கலாச்சாரம்,வீரன், சூரன், கவி முனி, ரிஷி, சேனை, அதிபதி, சதிபதி, சத்ரபதி,சேனாதிபதி, தளபதி, பதி,சதி,மித்ரு சத்ரு, தேசியம், பரதேசி, வீணை, மணி, மாங்கல்யம், சுவாரசியம், சுகம் துக்கம், மேகம், ஆனந்தம்,புஸ்தகம், சுவாசம், அரசன், சக்கரவர்த்தி, ஜனாதிபதி, பிரதம மந்திரி, அக்கிராசனர், சபாநாயகர், ராஷ்ட்ரபதிஜனாதிபதி, முக்கியம், நயனம், சயனம், மிருகம், மரணம், வரம், நதி, சிங்கம், ஆசனம், யோகம், தவம், சந்தியா,உதயம் அஸ்தமனம், மதியம், விஷம் அமிர்தம், பானம், வனம், வாசம், இந்திரியம், இந்திரன், அக்கினி,வருணன், யமன், பூதம், தூரம், பூர்வம்,அபூர்வம், அரூபம், சொரூபம் குரூபம்,விஸ்வரூபம், சுயரூபம் , திசை, காலம், சேவகம், விசுவாசம், கீர்த்தி, பிரமாணம், சத்தியம் அசத்தியம் சாத்தியம் அசாத்தியம், பூர்த்தி, சகவாசம், சகா, சகாயம், பர்வதம், கிரி, அசலம், வாக்கியம், நீலம், சீலம், மது, தானம், அஹிம்சை, இம்சை, சைவம் வைஷ்ணவம், சம்பிரதாயம். தீபம் தியாகம், வாரிசு, அநாதை, விமானம், மரியாதை, கும்பம், சிரம் கரம் கேசம் முஷ்டி, புஷ்டி,பாதம் புஜம் பிரதானம் ராஜ்ஜியம் சபை ஞானம் பாடம் (படி) வித்தை வீரம் சூரன் பயம் , அபயம், நிர்பயம், மலம் நிர்மலம், நிர்வாணம், பரம்பரை, வம்சம்,பிரசன்னம், பிரவசனம், பிரவேசம், பிரயோகம், பிராப்தி, பேதம், பிரபாவம், சுவபாவம், மங்களம் அமங்களம், சுமங்கலி, சுவாதீனம், ஆர்ஜிதம், பிதுரார்ஜிதம், சுயார்ஜிதம், ஸ்தானம், ஸ்தலம் (தளம்) சேனை, சாகசம், சிருங்காரம்,நவ ரசம் ரசனை, விரோதம் குரோதம் , பலி சதி, சகி, சக, சகா, சினேகிதி, சினேகம், வாத்சல்யம், அபிமானம், மானம் மரியாதை, தானம்,தவம்,ஆசனம், யோகம் பிரணாயாமம், பத்மம், பங்கஜம் கமலம், அம்புஜம் கஜம் ரதம், பாதசாரி, சஞ்சாரம், சம்சாரம்,பாஷ்யம், பாஷை, ஆசை, விவசாயம், வியாபாரம், தாசன், தாசி, சம்ஹாரம், வதம், பதம், பதவி, உத்தியோகம், அங்கம், அமாவாசை பௌர்னமி, திதி, பிரதமை, திவிதியை, திரிதியை, சதுர்த்தி பஞ்சமி, சஷ்டி, சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி,ஏகாதசி, துவாதசி, திரயோதசி, சதுர்த்தசி, தசமம்,தசம், சதம்,சதாப்தி, பூர்த்தி, சிருங்காரம்,நவ ரசம் ரசனை, விரோதம் குரோதம் , பலி சதி, சகி, சக, சகா, சினேகிதி, சினேகம், வாத்சல்யம், அபிமானம், மானம் மரியாதை, தானம்,தவம்,ஆசனம், யோகம் பிரணாயாமம், பத்மம், பங்கஜம் கமலம், அம்புஜம் கஜம் ரதம், பாதசாரி, சஞ்சாரம், சம்சாரம், சாகரம்,நவீனம, புராதனம், முக்தி, தர்மம், அதர்மம்,பூஜை, உசிதம், அனுபவம்,ஆதர்ஷம்,அவசியம், அவசரம்,பிராமணன், லட்சியம், லக்ஷணம், போதனை, தியானம்,சாகித்யம், பாடசாலை, யாகசாலை,யோக்கியன், அயோக்கியன், மனிதன், மனுஷி, வேகம், நாகம், புனிதம், விவகாரம், சேவகன், சேவகம், பசு, தளபதி,துரோகி, வைத்தியம், நிவேதனம், உபவாசம், உபகாரம், பிரதியுபகாரம், பூகோளம், சரித்திரம், ரசாயனம், உதயம், அஸ்தமனம்,கதை,சுவீகாரம், சுவாரஸ்யம்,பலாத்காரம், சமத்காரம், அவகாசம்,மராமத்து, வித்தியாசம், விசித்திரம், ஏகம், அனேகம், தானியம், சந்தர்ப்பம், சுலபம்,ஆக்ரோஷம், அரவிந்தம்,ஆனந்தம், பாலகன், பாலகி, புத்திரன், புத்திரி, கிராமம், நகரம், நாசம், விநாசம், நிருத்தியம், பூர்வீகம், ஆத்மா,சோதி (ஜோதியின் மருவு) கோரம், குரூரம்,பாவம், பாவம், குரூபி, பக்தன், பக்தி,சுவாமி, சாமி, சீடன் (சிஷ்யனின் மருவு) யோகம் பிரணாயாமம், பத்மம், பங்கஜம் கமலம், அம்புஜம் கஜம் ரதம், பாதசாரி, சஞ்சாரம், சம்சாரம், சாகரம்,
சுமார் 600 வார்த்தைகள் இருக்கும்.
இது மாதிரி இன்னும் ஆயிரக்கணக்கான சமஸ்கிருத வார்த்தைகள் நம்மிடையே புழக்கத்தில் உள்ளன என எங்கள் வீட்டுப் பெரிசு சொல்கிறது. .நானே இவற்றில் அனேக வார்த்தைகளை சர்வ சாதாரணமாக உபயோகப் படுத்திக் கொண்டிருக்கிறேன்.
இவற்றை ஒதுக்கி எழுத வேண்டியது அவசியம் என்று யாராவது சொல்லும் போது எனக்குச் சிரிப்புத்தான் வருது. (அனேகம், வார்த்தைகள்,சர்வ, சாதாரணம்,உபயோகம் அத்தனையும் சமஸ்கிருதச் சொற்கள்) தனித் தமிழ், புதுத்தமிழ் என திருச்சபை  தமிழ் ஆர்வலர்கள்  என்னைத் திட்டாதீர்கள்
என்ன செய்வது, பழக்க தோஷம் , சகவாச தோஷம்.

No comments:

Post a Comment