1 அந்த காலத்துல வள்ளுவர், வாசுகின்னு கூப்பிட்டதும் கிணத்துல வாளியைஅப்படியே விட்டுட்டு, வாசுகி பறந்து வந்தாங்களாம்...
இப்ப அது மாதிரி கூப்பிட்டா வாசுகி அங்கயே நின்னுருப்பாங்க,*வாளி மட்டும் பறந்துவரும்...*
-------------
2 வக்கீல் : ஏம்மா போன வாரம் தான் உன் புருஷன் கிட்டேயிருந்து விவாகரத்துகேட்ட , வாங்கி கொடுத்தேன் .. இப்ப வந்து என் புருஷனோட சேர்ந்து வைங்க'ன்னுகேக்கிறயே ஏன்???*
மனைவி : அந்த ஆளு என் கண்ணு முன்னாடியே சந்தோஷமா திரியறான் சார்என்னால சகிச்சிக்க முடியல!!!*
----------------
3 *கணவர் : செல்லம் சப்பாத்தி* *சூப்பரா செஞ்சிருக்கடி* *மனைவி :??
*கணவன் :நல்லாருக்குன்னு தானே சொல்றேன்* *அப்ரம் ஏன் முறைக்கிற..*
*மனைவி : அது தோசை*
--------------------
4 உலகத்தையே ஒரு கலக்கு கலக்கனும்னு ஆசை but அந்த கரண்டித்தான்எங்க இருக்கூனு தெரியல்ல
------------------
5 ''டேய்..ஓடாதே..நில்ரா..எதுக்குடா இவளை தூக்கிட்டு ஓடறே ?''
'நீங்கதானே சார் சொன்னீங்க. விளையாட்டு விழா ஆரம்பிக்கறதுக்கு முன்னால,ஜோதியைத் தூக்கிட்டு ஓடணும்னு
------------------------
6 "(என்ன இவ! இன்னக்கி இட்லில இவ்ளோ ஓட்ட போட்டு வச்சுருக்கா)"
"என்னங்க இடியாப்பம் எப்டி இருக்கு"
"ஆத்தி இடியாப்பமா இத சூப்பர் செல்லம்"
---------------------
7 ஜோதிடர் : உங்கள் வலது கையில் உள்ள இந்த மச்சத்தால் உங்களுக்கு ஒருநல்ல மனைவி அமைவாள்.
கோபு : யோவ் அது மச்சம் இல்லய்யா 'சூடுய்யா" - அதை வச்சதே என் மனைவிதான்.
---------
8 *மதிப்பெண் என்று பெயர் வைப்பதால்தான் பெண்கள் முதலிடத்தில்**வருகிறார்கள்...*
*இனி மதிப்பையன் என்று மாற்றித்தாருங்கள் மாணவர்கள் முதலிடம் வருவார்கள்..*
----------------------
9 சார்! நீங்க எந்தக் கடவுளைக் கும்புடுவீங்க .....?
கல்யாணத்துக்கு முன்னாடியா, பின்னாடியா.....?
கல்யாணத்துக்கு முன்னாடிதான் சொல்லுங்களேன்.....
கல்யாணத்துக்கு முன்னாடி, எனக்கு முருகனைத்தான் ரொம்பப் பிடிக்கும் ......
அப்போ பின்னாடி.....? அட,அதை ஏன் கேக்குறீங்க, கல்யாணத்துக்கு அப்புறம் நான்வேண்டாத தெய்வமே இல்லை.....!!?!!?!!?
1O சத்தியவான் சாவித்திரி .....
தன் கணவனை.....எமதர்ம ராஜாவிடமிருந்து
தன் தந்திர வரங்களால் கடுமையாகப் போராடி மீட்டாள்.....
கதையின் கருத்து :--ஒரு புருஷன... பொண்டாட்டிகிட்ட இருந்து ...... எமதர்மனாலகூடகாப்பாத்த முடியாது.....!!!
*************
11 மனைவி: ஏங்க! உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு என் புத்தியை ருப்பாலத்தான் அடிச்சுக்கோணும்......!
கணவன்: செருப்பு இந்தா இருக்கு......!புத்திக்கு எங்கே போவ!!??
************
12 கணவன்: "என்ன சமைச்சிருக்கே ...?
சாணி வரட்டி மாதிரி இருக்கு... நல்லாவேயில்லை"......
மனைவி: "கடவுளே! ......இந்த மனுஷன் இன்னும் என்னவெல்லாம் ப்பிட்டுப்பார்த்திருக்காரோ...?தெரியலையே... ஏ...ஏ...
**************
13 மனைவி என்பவள் திருக்குறள் போன்றவள்.....அடேங்ங்ங்ங்ங்ங்ங்கப்பா!
எவ்வளவு அதிகாரங்கள்.....?
--------------
14 *"என்ன மாப்ளே.... உங்க கண்ணெதிர்ல ஒருத்தன் கோயில்உண்டியலை உடைச்சு பணத்தை எடுத்தான்னு சொல்றீங்க....*
*அதைத் தடுக்காம பார்த்துக்கிட்டு இருந்திருக்கீங்களே?"*
*"அந்தக் கோயில்லதான் உங்க பொண்ணை எனக்கு கல்யாணம் பண்ணிவச்சீங்க...*
*அப்போ இந்தச் சாமி தடுக்காம பார்த்துக்கிட்டுதானே இருந்துச்சு!"*
--------------------------
15 நிம்மதியாக இருக்கும் வயதில் மனைவியைத் தேடுவதும், மனைவிவந்தப்பின் நிம்மதியைத் தேடுவதுமே.. ஆண்களின் வாழ்க்கை தேடல்..
--------------------------------
16 மனைவி : என்னங்க பக்கத்து வீட்டில பெரிய சண்டை நடக்குது. போய் ஒருதடவை என்னன்னு பார்த்துட்டு வாங்களேன்.
கணவன் : ஏற்கனவே ஒரு தடவை போனதுக்குத்தான் சண்டையே நடக்குது
--------------
17 பர்ஸ்ல உள்ள காசு எல்லாம் புடுங்கிட்டஒரு புதுகாலி பர்ஸ் கொடுப்பான்பாரு... அவன் தான் நகை கடைக்காரன்..
No comments:
Post a Comment