Thursday, May 21, 2020

Matsya avatar

**ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ... ஸ்ரீமத் வரவரமுநயே நமஹ...* 🙏🙏🙏
      
       *தஸாவதாரம்* 

  *ஸ்ரீமத்ஸயாவதாரம்* 

 *பகுதி 05* 

18 புராணங்கள்.

1. பிரம்மபுராணம்: பிரம்மனால், மரீச்சி முனிவருக்குச் சொல்லப்பட்டது. இதில் பதின்மூன்றாயிரம் பாடல்கள் உள்ளன.

2. பத்மபுராணம்: ஐம்பத்தைந்தாயிரம் பாடல்களைக் கொண்டது.

3. விஷ்ணுபுராணம்: பராசர முனிவரால் சொல்லப்பட்டது. இருபத்து மூவாயிரம் பாடல்களைக் கொண்டது.

4. வாயுபுராணம் (சிவபுராணம்): வாயுதேவனால் கூறப்பட்டது. இருபத்து நான்காயிரம் பாடல்களைக் கொண்டது.

5. பாகவதபுராணம்: பதினெட்டாயிரம் பாடல்களைக் கொண்டது.

6. நாரத புராணம்: நாரதரால் கூறப்பெற்றது. இருபத்து ஐந்தாயிரம் பாடல்களைக் கொண்டது.

7. மார்க்கண்டேய புராணம்: ஒன்பதாயிரம் பாடல் களைக் கொண்டது.

8. அக்னி புராணம்: அக்னி தேவனால் வசிட்ட முனிவருக்குக் கூறப்பட்டது. பதினாயிரம் பாடல்களைக் கொண்டது.

9. பவிஷ்ய புராணம்: பிரம்மனால் கூறப்பட்டது. பதினாலாயிரத்து ஐந்நூறு பாடல்களைக் கொண்டது.

10. பிரம்மவைவர்த்த புராணம்: சாவர்ணி மனுவால் நாரதருக்குக் கூறப்பட்டது. பதினெட்டாயிரம் பாடல்களைக் கொண்டது.

11. லிங்க புராணம்: பிரம்மனால் கூறப்பட்டது. பதினோராயிரம் பாடல்களைக் கொண்டது.

12. வராக புராணம்: விஷ்ணுவினால், பூமிதேவிக்குக் கூறப்பட்டது. இருபத்து நான்காயிரம் பாடல்களைக் கொண்டது.

13. ஸ்கந்த புராணம்: ஸ்கந்தனால் கூறப்பட்டது. எண்பத்தோராயிரம் பாடல்களைக் கொண்டது.

14. வாமன புராணம்: பிரம்மனால் கூறப்பட்டது. பத்தாயிரம் பாடல்களைக் கொண்டது.

15. கூர்மபுராணம்: விஷ்ணுவினால் அவர் ஆமை வடிவில் இருந்த பொழுது கூறப்பட்டது. பதினெட்டாயிரம் பாடல்களைக் கொண்டது.

16. மச்ச புராணம்: விஷ்ணு மீன் அவதாரம் எடுத்த பொழுது கூறப்பட்டது. பதினாலாயிரம் பாடல்களைக் கொண்டது. ( தற்போது நாம் பார்த்துக் கொண்டிருப்பது )

17. கருட புராணம்: கிருஷ்ணனால் கூறப்பட்டது. பதினெட்டாயிரம் பாடல்களைக் கொண்டது.

18. பிரம்மாண்ட புராணம்: பிரம்மனால் கூறப்பட்டது. பன்னிரண்டாயிரத்து இருநூறு பாடல்களைக் கொண்டது.

 *பாற்கடல் கடைதல்* 

தேவர்கட்கும், அசுரர்கட்கும் இடைவிடாமல் போர் நடந்து கொண்டே இருந்தது. இரண்டு பக்கத்திலும் கணக்கற்றவர் இறந்து கொண்டே இருந்தனர். ஆனால் அசுரர்களைப் பொறுத்தமட்டில் அவர்கள் குருவாகிய சுக்கிராச்சாரிக்குத் தெரிந்த மிருத்யுசஞ்சீவினி மந்திரத்தால், இறந்த அசுரர்கள் எல்லாம் பிழைத்துக் கொள்ள, தேவர்கள் ஜனத்தொகை குறையலாயிற்று. தேவர்கள் சென்று தங்கள் நிலையை பிரம்மனிடம் விளக்கிச் சொல்ல, 'பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுத்து உண்டால் தேவர்கள் சாகாத்தன்மை பெறுவர் என்று கூற, கடல் கடையும் வேலை தொடங்கிற்று. மந்திரமலை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பு கயிறாகவும் கடையத் தயார் ஆனாலும் மந்திர மலை ஆகிய மத்தை அடியில் இருந்து தாங்க விஷ்ணு உடன்பட்டார். அசுரர்கள் வாசுகி தலைப்பக்கமும் தேவர்கள் அதன் வால்பக்கமும் பிடித்துக் கடைந்தனர். முதலில் வந்த சந்திரனை, சிவன் தலையில் வைத்துக் கொண்டார். அடுத்து வந்த லட்சுமியை விஷ்ணு எடுத்துக் கொண்டார். உச்சைச்சிரவம் என்ற குதிரை வர இந்திரன் எடுத்துக்கொண்டார். கடைசியாக தன்வந்திரி அமுத கலசத்தோடு வர, அசுரர்கள் அதைப் பிடுங்க முயலும் போது, விஷ்ணு பெண் வடிவெடுத்து அவர்கள் கவனத்தைத் திருப்ப, அமுதம் தேவர்களுக்கு மட்டும் பங்கிடப்பட்டது. அசுரர்களில் ஒருவன் தேவ வேடமிட்டு  அமுதத்தை வாங்க  உண்மை அறிந்த சூரிய சந்திரர்கள் பெருமாளிடம் இவன் தேவன் அல்ல என சைசை செய்ய பகவான் அமுத அகப்பை(கரண்டி)யால் அவன் கழுத்தில் தட்ட  தலை வேறு உடல் வேறாகிவிட்டது.  தன்னைக் காட்டிக் கொடுத்த சூரிய, சந்திரர்களைப் பிடிக்க ராகு கேது முயல்வதுதான் கிரகணங்கள் என்று சொல்லப்படும்.
 
ஓம் சமுத்ரராஜாய வித்மஹே
கட்கஹஸ்தாய தீமஹி
தன்னோ மத்ஸ்ய ப்ரசோதயாத் (மச்சாவதார-காயத்திரி)
 
      பிரளய காலத்தில் தோன்றும், விஷ்ணுவின் முதல் அவதாரம் மச்ச அவதாரம். உலகின் முதல் உயிர் வாழ்க்கை நீரிலேயே உருவானதாக கூறுகிறது. அதுவும் நம் தமிழகத்தில் மதுரையில் அதனால் தான் பாண்டிய மன்னர்களுக்கு மீன்🐟 கொடியாகியது.

குருவாயூரப்பனின் அத்யந்த பக்தரான நாராயண பட்டத்ரி, வாத நோயால் பீடிக்கப்பட்டார். அப்போது குருவாயூரப்பன், மீனிலிருந்து ஆரம்பித்து நாராயணீயம் எனும் காவியத்தை எழுத பட்டத்ரிக்கு ஆணையிட்டார். அதை தன் குருநாதர் எழுத்தச்சனிடம் கூறினார் பட்டத்ரி. தசாவதாரத்தில் முதல் அவதாரமான மச்சாவதாரத்தைத்தான் குருவாயூரப்பன் உணர்த்தினார் என எழுத்தச்சன் கூற திருவருளோடு குருவருளும் சேர நாராயணீயத்தை எழுதினார் பட்டத்ரி. அதில் மச்சாவதார மூர்த்தியை தியானித்து 'ஜஷாக்ருதிம் யோஜந...' என ஆரம்பிக்கும் துதியில் எட்டு லட்சம் யோஜனை நீளமுள்ள (ஒரு யோஜனை - ஒன்றரை மைல்) மீனாக உருமாறி சப்தரிஷிகளையும் ஓடத்தில் ஏற்றிக் கட்டி இழுத்து பிரளய காலத்தில் காப்பாற்றினாயே, அப்போது அவர்கள் மிகுந்த சந்தோஷம் அடைந்தார்களே, அதுபோல நானும் ஆனந்தமாக வாழ உன் அருள் எனும் மருந்தால் என் நோயை நீக்குவாயாக என பிரார்த்தித்தார். அதோடு மட்டுமல்ல சோமுகாசுரன் எனும் அசுரன் நான்முகனிடமிருந்து கவர்ந்த நான்கு வேதங்களையும் இந்த மச்சமூர்த்திதான் சோமுகாசுரனைக் கொன்று அவனிடமிருந்து மீட்டு நான்முகனிடம் தந்தார். 

சித்திரை தேய்பிரை-திரியோதசி-மத்ஸய  ஜெயந்தி

 *ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்* 🙏🙏🙏

 *வானமாமலை  ராமானுஜ ஜீயர் திருவடிகளே சரணம்* 🙏🙏🙏

நாளையும்  ஸ்ரீமத்ஸாவதாரம்   காணலாம் ....

🙏 *சர்வம் கிருஷ்ணார்ப்பனம்* 🙏*

No comments:

Post a Comment