Wednesday, May 13, 2020

2020 Navaratri & Mask - Joke

இந்த நவராத்திரிக்கு ரிட்டர்ன் கிஃப்ட் மாஸ்க்தான்.

போன ரவராத்திரிகெல்லாம் வந்த பல்வுஸ் பிட்ட கிழிச்சி மாஸ்க் தெச்சி தந்துட வேண்டியதுதான்..

முக்கியமானவா வந்தா N95 மாஸ்க் கொடுக்கனும்.
பாக்கி பேருக்கு துணி மாஸ்க் போதும்.

மாஸ்குக்குள்ளேயே ஜோபி வெச்சு அதில் சுண்டல் போட்டுக் கொடுத்துடலாம்

அவாத்துல போய் பாடினேன், அதுக்கு மாஸ்க் கொடுக்கறா !! வாயை மூடிக்கோங்கோன்னு சிம்பாலிக்கா சொல்றாப்லன்னா இருக்கு

என்னது பொம்மையெல்லாம் தள்ளித்தள்ளி இருக்கு ? சமூக விலகொலு !!


அவாத்துக்குப் போனோன்ன உத்தரிணில ஒண்ணு கொடுப்பா.. தீர்த்தம்னு நினைச்சு மடக்குன்னு குடிச்சுடாதீங்கோ.. அது சானிடைசர்.. ஸங்கல்பம் செஞ்சுக்கறா மாதிரி கையைத் துடைச்சுக்கோங்கோ !!

இது அநியாயம்டி.. அவாத்துக்குக்கூட போகப்போறதில்லை.. Zoom meetingலதான் பாக்கப்போறே.. அதுக்காக பட்டுப்புடவையெல்லாம் கட்டிக்கனுமா ?

ஏய்...இங்க பாரு...நான் வெச்சு தந்த மாஸ்க் எனக்கே திருப்பி வந்திருக்கு😜 ரவிக்கைத் துணி தான் இப்டினா...மாஸ்க்குமா

யாராத்து மாமி யாருன்னே தெரிய மாட்டேங்குது. எல்லோரையும் பொத்தாம்பொதுவா வாங்கன்னு சொல்லிட்டேன்.
ஏம்மா?
எல்லோரும் மாஸ்க கட்டிண்டு முகத்தை மறைச்சுண்டு இருக்கா. குமுதம் போட்டியில் கண்ணைப் பார் கண்டுபிடின்னு சொல்றாப்ல கண்டு பிடிக்க வேண்டியிருக்கு.

அவா பாடறது சுத்த சாவேரி...மாஸ்க் வழியா வடிகட்டி வரது

ரவிக்கைத் துணி வெச்சுத் தருவா ரெண்டு மூணு மாஸ்க் தெச்சுக்கலாம்னு பார்த்தா பிசுநாரியா ஒத்தை மாஸ்க் குடுத்திருக்கா பாரேன்....

என்னடாதிது.. மாஸ்குல சுண்டல் கொட்டி வெச்சிருக்கே..
ஓ மாஸ்க்கா.. நான் தொண்ணைன்னு நினைச்சுட்டேன் மாமி.. கைப்பிடிவேற அழகா தூக்கிண்டு போறதுக்கு வாகா இருந்துதா


என்னடா இது மண்ணைக் கொட்டி வெச்சிருக்கே..
பார்க் மாமி..
பார்க்னா, யாருமே இல்லையே..
அது, லாக்டௌன் மாமி.. எல்லாரும் அவாவா ஆத்துக்குள்ளேயே இருக்கா


எங்காத்து வழக்கப்படி, நின்னுண்டுதான் மாஸ்க் வாங்கிக்கனும். தெக்கப்பாத்து வாங்கிக்கப்டாது

அது பொம்மனாட்டி மாஸ்க் டீ.. புருஷாளுக்கு சேப்பு, பச்சை ஜரிகைவெச்சு மயில்கண் மாஸ் கொடுக்கப்டாதோ !!


ரொம்ப அதீதமாப் போய் எல்லா சாமிக்கும் மாஸ்க் போட்டிருக்கே சரி.. ஆனா பிள்ளையாரை மட்டும் விட்டுட்டியே !!!
நல்லாப் பாருங்கோ.. பிள்ளையாருக்கு எப்படி மாஸ்க் போடறது.. அதான் சட்டை மாட்டி, ஜோபிக்குள்ள துதிக்கையை விட்டுட்டேன்.


ஐய்யோ.. அது எங்காத்து மாமாடீ.. மாஸ்க் போட்டுண்டிருக்கார்.. அவருக்குப் போய் குங்குமம் கொடுத்துண்டிருக்கே.. நீங்களாச்சும் சொல்லப்டாது ? வாங்கிண்டு நிக்கறேளே.

மரண மாஸ்(க்) jokes

மாமி நீங்க இப்போ தாராளமா பாடலாம். மாஸ்க் போட்டு இருக்கறதால உங்க முன் பல் கொட்டிப் போச்சுன்னு யாருக்கும் தெரியாது.
அடப் போடி! கொரோனா வர்றதுக்கு ஜஸ்ட் டூ டேஸ் முன்னாடி தான் தங்கப்பல் கட்டிண்டேன். அதப் பளிச் பளிச்சுன்னு காட்ட முடியாம.. இந்த சனியன் மாஸ்க போட்டுண்டு... என்னவோடி!


ஏண்டீ, மாஸ்குல போய் ஓட்டை போட்டுண்டிருக்கே ?
அட ஏன் மாமி நீங்கவேற.. இப்பத்த்தான் அவர் வைர மூக்குத்தி வாங்கிக்கொடுத்தார்.. அதுக்குள்ள இந்த சனியன் கரோனா வந்துடுத்து.. வாங்கி என்ன ப்ரயோஜனம் சொல்லுங்கோ.. அதான் அங்க மட்டும் ஒரு ஓட்டை போட்டிருக்கேன்.


அவா வடமான்னு எப்படிக் கண்டுபிடிச்சே ?
மாஸ்க்கை தலைக்குப் பின்னாடி கட்டிண்டிருக்கா பாத்தியோன்னோ ? அதான்.. வடமாதான்.. ப்ரஹசரணம்னா காதுக்குப் பின்னால மாட்டிப்பா..


மாமியாரும் மருமாளுமா கொலுக்கு போவேப்டாது..
ஏன், என்னாச்சு..
வயசானவாளுக்குத்தான் கரோனா வரும், அவாளுக்கு மட்டும் மாஸ்க் கொடுத்துட்டு, எனக்கு எவர்சில்வர் டப்பி ஒண்ணு கொடுத்துட்டா.. உங்கம்மாக்கு பெருமை தாங்கலை.. !


கோடியாத்து கோமு கூடவே க்ளவுஸூம் கொடுக்கறாளாம். அவாத்துல ஒரே க்யூ

என்னடா மாது, நவராத்திரியும் அதுவுமா அரை டிராயர் போட்டுண்டு உட்காந்துண்டிருக்கே..
அத்த ஏண்டா கேக்கற சீனு, எதுக்கு வீண் செலவுன்னு என் வேஷ்டி ஒண்ணு விடாம மாஸ்க்கா தெச்சு, ரிட்டர்ன் கிஃப்ட்டா ரெடி பண்ணிட்டாடா, ஜானகி..

No comments:

Post a Comment