Monday, February 17, 2020

Mukunda maalai part 38 to 40 in tamil

Courtesy: Smt.Dr.Saroja Ramanujam

முகுந்த மாலை

38.
த்யாயந்தி யே விஷ்ணும் அனந்தம் அவ்யயம் 
ஹ்ருத்பத்ம மத்யே சத்தம் வ்யவஸ்திதம் 
ஸமாஹிதானாம் ஸததாபயப்ரதம்
தே யாந்தி ஸித்திம் பரமாம் ச வைஷ்ணவீம்

யே – எவர்கள் , அனந்தம்-முடிவில்லாதவரும், அவ்யயம் –அழிவில்லாதவரும், ஹ்ருத்பத்மமத்யே – இதயமாகிய கமலத்தின் நடுவில் , சத்தம் – எப்போதும் , வ்யவஸ்திதம்- நிலையாக இருப்பவரும், ஸமாஹிதானாம்- புலன்களை வென்றவர்க்கு , ஸததாபயப்ரதம்- எப்போதும் அபயம் அளிப்பவருமான, விஷ்ணும்- விஷ்ணுவை , த்யாயந்தி- தியானிக்கிறார்களோ, தே- அவர்கள், பரமாம் – உயர்ந்ததாயும். சாச்வதீம், நிலையானதும் ஆன, வைஷ்ணவீம் சித்திம் – வைகுண்ட பதவியை, யாந்தி அடைவார்கள்.

வைகுண்டம் என்றால் தடையில்லாதது என்று பொருள். அதாவது தடையற்ற ஆனந்தம் அல்லது பிரம்மானந்தம். பகவானை நம் ஹ்ருதயத்தில் இருப்பவனாக தியானிக்க வேண்டும் என்கிறார் . இதுதான் தஹர வித்யா என்று உபநிஷத்தில் வர்ணிக்கப்படுவது. மனதை அடக்கி அவனை தியானிப்பவர்க்கு அவன் அருள் நிச்சயம்.

39.க்ஷீரசாகர தரங்க சீகராஸார தாரகித சாருமூர்த்தயே
போகிபோக சயநீய சாயினே மாதவாய மதுவித்விஷே நம:

க்ஷீரசாகர- பாற்கடலின், தரங்க சீகராஸார- அலைத்துளிகளால், தாரகித – நக்ஷத்திரம் உள்ளதுபோல செய்யப்பட்ட, சாருமூர்த்தயே-அழகியதிருமேனி கொண்டவரும், போகிபோக – ஆதிசேஷனின் மேனியாகிய சயநீய சாயினே – படுகையில் படுப்பவரும், மதுவித்விஷே – மது என்ற அரக்கனைக் கொன்ற, மாதவாய – மாதவனுக்கு , நம: நமஸ்காரம்.

பகவான் ஆதிசேஷன் மேல் பள்ளிகொண்டிருக்கையில் பாற்கடலின் அலைத்துளிகள் அவர் மேனியில் தெறிக்கின்றன. நீலமேகம்போன்ர மேனியில் அவை நக்ஷத்திரங்கள் போல பிரகாசிக்கின்றன. ஒரு அழகான உவமை. 
ஆயின் ஆதிசேஷன் மேல் படுத்துக்கொண்டிருந்தாள் அது உயர்ந்த இடம் அல்லவா? அங்கு எப்படி அலைத்துளிகள் தெறிக்கும் என்ற கேள்வி எழுகிறது. அதற்கு வேதாந்த தேசிகரின் யாதவாப்யுதயத்தில் விடை காண்கிறோம்.

க்ருஹேஷு தத்ன: மதனப்ரவ்ருத்தௌ
ப்ருஷத்கணை: உத்பதித: ப்ரகீர்ண: 
நிதர்சயாமாஸ நிஜாம் அவஸ்த்தாம்
ப்ராசீம் ஸுதா சீகர யோகசித்ரம் (யாத- 4.28)

இதன் பொருள், 
கண்ணன் தயிர் கடையும்போது வெண்ணை உண்ணும் ஆசையால் அதன் அருகில் சென்று நிற்கிறான் . அப்போது தயிர் துளிகள் அவன் மேல் தெறிக்கின்றன. இது பாற்கடலை கடையும்போது பாற்கடலின் அலைத்துளிகள் அவன்மேல் தெரித்ததாம். அதை இந்த சம்பவம் னியாய்வூட்டுகிறது என்கிறாரா. அதாவது பால் துளிகள் அவன் மேல் தெறித்தது அவன் சயனம் இருந்தபோது அல்ல. அவன் பாற்கடலை கடையும்போதுதான்.

40.யஸ்ய ப்ரியௌ ஸ்ருதிதரௌ கவிலோகவீரௌ
மித்ரே த்விஜன்ம வரபாரசராவபூதாம் 
தேனாம்புஜாக்ஷ சரணாம்புஜ ஷட்பதேன 
ராக்ஞா கருதா கிருதி: இயம் குலசேகரேண

யஸ்ய –எவருக்கு, ப்ரியௌ- அன்பர்களும், ஸ்ருதிதரௌ- கேள்விஞானமுள்ளவரும்,கவிலோகவீரௌ-கவிகளில் சிறந்தவர்களும் ஆன , த்விஜன்ம வரபாரசரௌ- அந்தணகுலத்திலும் மிஸ்ரவர்ணத்திலும் பிறந்த, மித்ரௌ- இரு நண்பர்கள், அபூதாம்-இருந்தார்களோ, அம்புஜாக்ஷ சரணாம்புஜஷட்பதேன- தாமரைக்கண்ணனின் திருவடித்தாமரையை சுற்றும் வண்டு போன்றவரான , தேன – அந்த , குலசேகரேண- குலசேகரர் என்ற , ராக்ஞா- அரசரால் இயம் க்ருதி: - இந்த ஸ்தோத்திரம், க்ருதா –செய்யப்பட்டது. 
குலசேகரர் இந்த ஸ்லோகத்தின் மூலம் அவருடைய இரு நண்பர்களுக்கு நன்றியை தெரிவிக்கிறார்.

முகுந்த மாலை முற்றிற்று.

No comments:

Post a Comment