பெரியவா திருவடியே
சரணம்.
சோழவரம் பக்கத்துல ஒரு ஊர்ல பள்ளிக்கூட வாத்யார் ஒருத்தர் இருந்தார்.
மகாபெரியவாளோட மானசீக பக்தர் அவர்.
அவரோட ஒய்ஃபுக்கும் பெரியவா தான் எல்லாமும்.மகாபெரியவாளோட பேரைச் சொல்லாம அவருக்கு ஒரு நாளும் விடியாது.
முடியாது அவாளுக்கு, மனசுக்குள்ளே ஒரு ஏக்கம் இருந்தது.'மகாபெரியவாளை நேர்ல தரிசிக்கப் போகணும்'கறதுதான் அது.
இந்தக் காலம் மாதிரி போக்குவரத்து வசதியெல்லாம் அப்போ கிடையாது.. அதனால பள்ளிக்கூடத்துக்கு லீவெல்லாம் எடுத்துண்டு போயிட்டு வரமுடியாத சூழல்.
இப்படியே நாள்,வாரம்,
மாசம்,வருஷம்னு காலம் ஓடிண்டு இருந்த நிலையில, ஒரு நாள் அந்த பக்தரோட ஆத்துக்காரிக்கு ஒரு கனவு வந்தது.
அதுல சாட்சாத் மகாபெரியவா வந்தார்."என்னைப் பார்க்கணும்னு சதா ஏங்கிண்டு இருக்காதே.
பகவானோட நாம சங்கீர்த்தனத்தைப் பாடிண்டு இரு. உங்க அகத்துல பூஜை பண்ண நானே வருவேன்!" . மகான் சொன்னதைக் கேட்டதும் அப்படியே சிலிர்ப்போட எழுந்தா அந்தப் பெண்மணி.
பக்கத்துல இருந்த அகத்துக்காரை எழுப்பி விஷயத்தைச் சொன்னா. அவருக்கும் தேகம் சிலிர்த்தது. கண்ணுலேர்ந்து ஆனந்த பாஷ்யம் பெருகி வழிஞ்சுது.
விடியகாலம்பற நேரம் கண்ட கனவு பலிக்கும்னு சொல்லுவா. அதனால நம்ப அகத்துக்கு கண்டிப்பா மகாபெரியவா வருவார்னு நம்பிக்கையோட, மகானோட வாக்குப்படி பகவானோட நாம சங்கீர்த்தனத்தைப் பண்ணிண்டே இருந்தா.
நாட்கள் தேய்ஞ்சு நகர்ந்தது. ஆனா, அவாளோட நம்பிக்கை மட்டும் வாடாமத் துளிர்த்தது.,
ஒரு நாள் மத்தியான நேரம். அந்த பக்தரோட அகத்து வாசலில் ரெண்டு பேர் வந்து நின்னா அந்தப் பகுதிக்குப் புதுசா இருந்த அவாளைப் மகா ஆசாரமானவாங்கறது தெரிஞ்சுது
யார் அவான்னு பலரும் யோசிச்சுண்டு இருக்கறச்சே, சுத்துமுத்தும் திரும்பித் திரும்பிப் பார்த்த அவா, சட்டுன்னு..அந்த பக்தரோட அகத்துக்குள்ளே நுழைஞ்சா.
அந்த பக்தரோட பேரைச் சொல்லி, அவரைப் பார்க்கத்தான் வந்திருக்கறதாச் சொன்னார்
"நாங்க ஸ்ரீமடம் முகாம்லேர்ந்து வரோம். மகாபெரியவா திருப்பதியில இருந்து மெட்ராஸுக்கு யாத்திரை பண்ணிண்டு இருக்கார்.
வழியில பல இடங்கள்ள தங்கி பூஜை பண்ணிட்டு யாத்திரையைத் தொடர்ந்துண்டு இருக்கார்.
அந்த வகையில மகாபெரியவா நாளை மறுநாள், இந்தப் பக்கமா வர இருக்கிறார்.அவர் ரெண்டு நாள் இங்கே தங்கறதா தீர்மானம்.
உங்க அகத்துல அவருக்கு தங்கிக்க வசதி பண்ணலாம்னு கேட்கத்தான்......." வந்தவா சொல்லி முடிக்கறதுக்குள்ளேயே, அப்படியே சந்தோஷத்துல சகலத்தையும் மறந்துட்டா அந்த பக்தர் தம்பதி
"பெரியவாளோட திருவடி எங்க அகத்துல படறதுன்னா, அதுக்கு நாங்க எத்தனையோ பிறவிகள்ல புண்ணியம் பண்ணியிருக்கணும்.
இதோ இந்த க்ஷணமே எங்க அகத்தை உங்ககிட்டே ஒப்படைச்சுடறோம்!"னு தழுதழுப்பா சொன்னா.
மகாபெரியவா அங்கே வரப்போறதும், ரெண்டு நாள் தங்கப்போறதும் ஊர்க்காரா எல்லாருக்கும் தெரிஞ்சுது.
ஆளாளுக்குப் போட்டி போட்டுண்டு,
தெருவை,ஊரை சுத்தப்படுத்தி, தோரணமெல்லாம் கட்டி,வாசல் தெளிச்சு கோலம்போட்டு...அமர்க்களமா ஏற்பாடுகளைப் பண்ணினா.
கனிவர்க்கம்,காய்கறிகள்,தானியங்கள் இப்படி அவசியமான திரவியங்களைப் பலர் கொடுத்தா.
பூ, இலைன்னு பூஜைக்குத் தேவையானதுக்கெல்லாம் சிலர் ஏற்பாடு செஞ்சா.
மகாபெரியவா அந்த ஊருக்கு வந்தப்போ ஏராளமானபேர் திரண்டு வந்து பூர்ணகும்ப மரியாதை குடுத்து வரவேற்றா.
எல்லாருக்கும் ஆசிர்வாதம் பண்ணிண்டே அந்த பக்தரோட அகத்துக்குள்ளே எழுந்தருளின மகாபெரியவா, அவாளைப் பார்த்து, "என்ன சொப்பனம் மாதிரி இருக்கா?"
அப்படின்னு கேட்டதும் அப்படியே தடால்னு அவர் திருவடியில விழுந்து நமஸ்காரம் பண்ணிண்டா ரெண்டுபேரும். . .
பகவானோட நாமசங்கீர்த்தனத்தைச் சொன்னா கலியுகத்துல கைமேல நற்பலன் கிடைக்கும்கறதுக்கு, அந்த பகவானோட அம்சமா விளங்கின மகாபெரியவா நடத்தின திருவிளையாடல்னே இதைச் சொல்லாம் இல்லையா!
ஜயஜயசங்கர!!ஹரஹரசங்கர!!
No comments:
Post a Comment