Monday, February 17, 2020

Dress code

அதெப்படி?

" அப்பா! நான் ஆபிஸ்லேருந்து வர லேட்டாகும். இன்னிக்கு எங்க ஆபிஸ்ல New Year Party. So, நாங்கள்ளாம் Hotel போறோம். அங்கேயே சாப்டு வந்துடுவேன்" கிளம்பிக்கொண்டே கோபி அப்பாவிடம் சொன்னான்.
" அதென்ன Second Bag?" கோபியின் கையிலிருந்த Office bag போல இன்னொரு bagஐப் பார்த்து அப்பா கேட்டார்.
" இன்னிக்கு Partyயில்லயா! அதனால சாயங்காலம் Dinner dress. அது பெரிய Hotel. அங்க dress code very important. So general office dressல போகமுடியாது. வறேம்பா" அவசரமாகக் கிளம்பிச்சென்றான்.
ஓரு வாரம் கழித்து கூடாரை வெல்லும் பாசுரம். குடும்பத்துடன் கோவிலுக்குக் கிளம்பினர். " அப்பா நா Ready" என்றான் கோபி.
அழகான நீலநிற Jeans, அதற்கு Matchingஆக காலர் இல்லாத Sleveless பனியன். இருபத்தைந்து வயது இளைஞனுக்குரிய வசீகரம்.
"ஏம்பா, வேஷ்டி உடுத்தலயா?" – அப்பா.
"Oh Dad, பக்தி மனசுல இருந்தா போறாதா! இஃதென்ன வேஷம். I don't like this." என்றான் தோளக்குலுக்கி…
"கோபி! Last week dinnerக்கு dress code follow பண்ணயே. அதெப்படி? அப்ப இந்த தோள குலுக்கலயா? ஞாபகமாக another Set dress எடுத்து வச்சுண்டயே! My dear Son பெருமாள சேவிக்க dress code necessaryன்னு accept பண்ண முடியலயா? ஒரு நாள் சாப்பாட்டுக்கே dress codeன்னா, நமக்கு என்னிக்கும் படியளக்கும் பெருமாளுக்கு அது Necessity இல்லயா?"
அப்பா பேசி முடிக்குமுன் கோபி Pantஐ மாற்றி வேஷ்டியுடன் சட்டையில்லாமல் மேல் வஸ்திரத்துடன் வந்து நின்றான். இனி அவன் இந்த argument பண்ணமாட்டன். சரி what about us?

No comments:

Post a Comment