Wednesday, February 26, 2020

doing nothing - Summa iru sollara - Explanations

என் செயலாவது யாதோன்றும் இல்லை. எல்லாம் நின் செயலே என்று உணரப்பெற்றேன். சொல் அற சும்மாயிரு.

சும்மாயிருப்பதே சுகம். ஆனால் "சிந்தையை அடக்கியே சும்மாயிருக்கின்ற திறம் அரிது" என்பார் தாயுமானார்.

"சும்மா இரு சொல்லற என்றலுமே/அம்மா பொருளொன்றும் அறிந்திலனே" என்றார் கந்தர் அநூபூதியில் அருணகிரிநாதர்.

சும்மாயிருக்க முடிந்தால் பாவம், புண்ணியம் இரண்டுமே செய்ய முடியாத நிலை வரும்.

இவ்விரு வினைகளுமே ஆன்மாவைப் பிணிக்கும் தளைகளே. இவை இல்லாத இடத்தில் "மல பரிபாகம்" என்னும் இருவினை ஒப்பும், அதன் விளைவாகப் பிறவாநிலையும் எய்தப் பெறலாம் என்பது கருத்து - "மலபரி பாகம் வருமளவிற் பன்னாள்/அலமருதல் கண்ணுற்(று) அருளி உலவாது" -'கந்தர் கலிவெண்பா'.
  
சும்மா இரு " "சும்மா இரு " "சும்மா இரு "

மகிழ்ச்சி என்பது கார், பங்களா, காசு, பணத்தில் இல்லை. நன்றாக உண்டு நன்றாக தூங்க முடிகிறதா என்பதுதான் மிக முக்கியம். உண்மையிலேயே உங்களைப் பற்றி அக்கறைப்படுகிற, அன்பு காட்டுகிற மக்கள் இருக்கிறார்களா என்பதுதான் முக்கியம்.- பொறாமை அகற்றல். வெற்றி வேண்டுமெனில் "சும்மா இரு "

உழைக்கத் தெரிந்தவர்கள் மற்றவரை ஒருபோதும் புறந்தள்ளமாட்டார்கள். பொறாமைப்படமாட்டார்கள். பொறாமை அகற்றல். வெற்றி வேண்டுமெனில் "சும்மாஇரு "

வன்முறைக்கு முன் ஒரு அமைதி வேண்டியிருக்கிறது . அந்த அமைதியிலிருந்து தான் ஒரு வன்முறை தோன்றுகிறது. -கிருஷ்ண அர்ஜுன்.

"சும்மா இரு " என்பது உடம்பையோ,புத்தியையோ சொன்ன விஷயமில்லை.சும்மாஇருக்கச் சொன்னது மனசை.வெற்றியிலும் தோல்வியிலும் மனசை விலகி இருக்கச் சொன்ன வார்த்தையிது.

வலிமையானவர்களும் மெளனமாக இருப்பதற்கு பழக வேண்டும்.இல்லையெனில், வாழ்க்கை துயரம் சூழ்ந்ததாக ஆகிவிடும். -கதை கதையாம் காரணமாம்.

நண்பர்கள் புரிந்துகொள்ளப்பட முடியாதபோது நீங்கள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டபோது மிக மோசமான எதிரியாக மாறிவிடுகிறார்கள். -வெற்றி வேண்டுமெனில் "சும்மா இரு "

தினம் தினம் செய்யும் காரியங்களில் நேர்த்தி வேண்டுமெனில் தியானம் செய்தல் அவசியம். இப்போது சொன்னது மிகப்பெரிய வாக்கியம். அனுபவித்தாலொழிய இதன் கனம் புரியாது. -வெற்றி வேண்டுமெனில் "சும்மா இரு "

மூச்சை சீராக்கினால் மனம் அமைதியாகிறது. மூச்சை சீராக்குவதற்கு ஹடயோகம் உதவி செய்கிறது. அமைதியான மனதை உள்பக்கம் திருப்பினால் எதனால் மனம், புத்தி, உடம்பு இயங்குகிறது என்று உற்றுக் கவனித்தால் வேறு ஒரு விஷயம் புலப்படும். -வெற்றி வேண்டுமெனில் "சும்மா இரு "

வலிமையான ஞாபக சக்தி, தெளிவான சிந்தனை, அமைதியான போக்கு இவை தியானத்தால் ஏற்படும். தியானம் செய்ய செய்ய பொறாமை அறவே போய்விடும் . மனதில் இருந்து பொறாமை போனால் போதும். அதைவிட உற்சாகமான ஒரு வாழ்க்கை எதுவுமில்லை. இது மிகப்பெரிய வரப்ரசாதம். அமிர்த குடம். -வெற்றி வேண்டுமெனில் "சும்மா இரு "

ஒரு ஞானியின் அருகே அமர்ந்தால் பதட்டம் முற்றிலும் நீங்குவதை உணர முடியும்.மனம் உள்ளுக்குள் பார்க்கத் தொடங்கும். மெல்ல அடங்கத் தொடங்கும். -வெற்றி வேண்டுமெனில் "சும்மா இரு " சும்மா இரு சொல் அற என்றலுமே அம்மா ஒருபொருள் ஒன்றுமறிந்திலனே என அருணகிரி நாதர் கந்தர் அனுபூதியில் இதே அர்த்ததில்தான் கூறியுள்ளார்.
 
 

No comments:

Post a Comment