Friday, January 31, 2020

Mukunda mala stotram part 16,17,18 in tamil

Courtesy: Smt.Dr.Saroja Ramanujam

ஸ்ரீமத்பாகவதம் - ஸ்கந்தம் 6- அத்தியாயம் 12/13

அத்தியாயம் 12

இந்திரன் வ்ருத்ராசுரனனைப் பார்த்து அசுரனாயினும் பகவானிடம் பக்தி இ உள்ளவனாக இருப்பதைக் கண்டு அதிசயித்தான். பிறகு இருவரும் போர் புரிந்தனர்.

வ்ருத்ராசுரன் இந்திரனுடைய வஜ்ராயுதத்தல் அடிபட்டு தோள்பட்டைகள் இரண்டும் வெட்டுண்டு முன்னொருகாலத்தில் இந்திரனால் இறக்கைகள் வெட்டுண்டு விழுந்த மலை போல் காணப்பட்டான். ஆனாலும் அவன் பெரிய மலை போல பூமி அதிரும்படி கால்களால் நடந்து வந்து இந்திரனை அணுகி அவனை வாகனத்துடன் விழுங்கி விட்டான்.

நாராயண கவசத்தினால் ரக்ஷிக்கப் பட்ட இந்திரன் அவனுடைய வயிற்றிற்குள் சென்றபோதும் மரணம் அடைய வில்லை. வஜ்ராயுதத்தால் அவன் வயிற்றைப் பிளந்து கொண்டு வந்து அவன் தலையை வெட்டினான்.அப்போது அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே வ்ருத்ரனுடைய உடலில் இருந்து கிளம்பிய ஆத்ம ஜ்யோதி பரம் ஜ்யோதியான பரமாத்மாவிடம் கலந்தது.

அத்தியாயம் 13
வ்ருதரன் கொல்லப்பட்ட போது அதனால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் இந்திரனை வந்தடைந்தது. . அது மூப்பால் நடுங்கும் அங்கங்களுடன் க்ஷயத்தால் பீடிக்கப்பட்டு, இருமிக்கொண்டு, சிவந்த வஸ்திரத்துடநும் நரைத்த தலையுடனும் இந்திரனைப் பின் தொடர்ந்தது.

"நில், நில்" எனக் கூறிக்கொண்டு சண்டாள ஸ்திரீ வடிவத்தில் தன்னைத் தொடரும் அதைக்கண்டு இந்திரன் ஆகாய மார்க்கமாக கிளம்பி எல்லா திசையிலும் ஓடி கடைசியில் வடகிழக்கு திசையில் விரைந்து மானசரோவரில் புகுந்து தாமரைத்தண்டின் நூலினுள் மறைந்து எவர் கண்ணிலும் படாமல் ஆயிரம் ஆண்டுகள் இருந்தான்.

அந்த பிரதேசத்தின் தேவதையாகிய ருத்ரனாலும், தாமரையில் வசித்த மகாலக்ஷ்மியின் கருணையாலும் அவன் பாவம் குறைய பிரம்மஹத்தி பிசாசு வலிவிழந்தது. பிறகு சத்யநாராயண த்யானத்தால் இந்திரன் பாபத்தில் இருந்து முழுமையாக விடுபட்டான்.

இந்திரன் பதவி இழந்த காலத்தில் ஆயிரம் அச்வமேத யாகம் செய்த நஹுஷன் இந்திரபதவி அடைந்தான். ஆனால் ஐஸ்வர்யத்தினால் ஏற்பட்ட கொழுப்பால் இந்திராணியை அடைய எண்ணியவன் அகஸ்த்யரின் சாபத்தால் பாம்பாகி பூமியில் விழுந்தான்.

(இந்த வரலாறு பின்வருமாறு. நஹுஷன் சசீதேவியை தன்னிடம் வருமாறு கூற அவள் அவனுக்கு பாடம் கற்பிக்க எண்ணி அவனை சப்தரிஷிகள் தாங்கும் பல்லக்கில் வருமாறு கூறினாள். அப்போது அதில் ஒருவரான அகஸ்தியர் குள்ளமாக இருந்ததால் பல்லக்கு மெதுவாகச் சென்றதாகக் கருதிய அவன், 'ஸர்ப்ப , ஸர்ப்ப," – வேகமாகப் போ, என்று கூற கோபம் கொண்ட அகஸ்தியர் அவனை "ஸர்ப்போ பவ ," பாம்பாகப் போ , என்று சாபமிட்டார் . உடனே அவன் பல்லக்கிலிருந்து நழுவி பாம்பாக பூமியில் விழுந்தான்.)

இதற்கிடையில் இந்திரன் சாபம் நீங்கி மரீசி முதலிய முனிவர்களால் செய்து வைக்கப்பட்ட அஸ்வமேத யாகத்தால் யக்ஞநாராயணனை ஆராதித்து இழந்த பதவியைப் பெற்றான்.

இந்திரனைப் பற்றிய இவ்வரலாறு படிப்பவர்க்கு செல்வத்தையும் , புகழையும் பாவத்தினின்று மீட்சியையும் ஸத்ருஜயத்தஹ்யும் நீண்ட ஆயுளையும் மங்களத்தையும் அளிக்க வல்லது என்று சுகர் கூறினார்.
.
அடுத்து பரீக்ஷித் அசுரனான வ்ருத்ரனுக்கு பகவத் பக்தி எவ்வாறு உண்டாயிற்று என்று கேட்க சுகர் சித்ரகேதுவின் சரித்திரத்தைச் சொல்கிறார்.

முகுந்த மாலை

17.ஹே லோகா: ஸ்ருணுத ப்ரசூதிமரணவ்யாதே: சிகித்சாம் இமாம்
யோகஞா: ஸமுதாஹரந்தி முனயோ யாம் யாக்ஞவல்க்யாதய: 
அந்தர்ஜ்யோதிரமேயம் ஏகம் அம்ருதம் க்ருஷ்ணாக்யம் ஆபீயதாம் 
தத்பீதம் பரமௌஷதம் விதனுதே நிர்வாணம் ஆத்யந்திகம்

ஹே லோகா:, உலக மக்களே ! ப்ரசூதிமரணவ்யாதே:, பிறப்பு இறப்பு என்ற வியாதிக்கு சிகித்சாம், சிகிச்சையைக் ச்ருணுத, கேளுங்கள்.

யாம்- எதை, யோகஞா: - யோகம் தெரிந்த, முனய: முனிவர்களான , யாக்ஞவல்க்யாதய:- யாக்ஞவல்க்யரைப் போன்றவர்கள் , ஸமுதாஹரந்தி- போற்றுகிறார்களோ அந்த , அந்தர்ஜ்யோதி: - எல்லோருக்கும் உள் ஜ்யோதியாக இருக்கும், அமேயம் –அளவிடமுடியாத , க்ருஷ்ணாக்யம்- கிருஷ்ணன் என்ற., ஏகம் அம்ருதம்- ஒரு அமிர்தத்தை, ஆபீயதாம்- பருகுங்கள்
. தத் பரமௌஷதம்- அந்த சிறந்த மருந்து, பேதம்- உட்கொண்டபோது, நிர்வாணம் ஆத்யந்திகம் – பரம சுகமாகிய மோக்ஷத்தைத் தருகிறது.

உலகில் இரண்டு விதமான நோய்கள் உள்ளன. அவை ஆதி, மனநோய், வியாதி, உடல் நோய் எனப்படும். இந்த ஸ்லோகத்தில் வியாதிக்கும் அடுத்த ஸ்லோகத்தில் ஆதிக்கும் பரிகாரம் சொல்லப்படுகின்றன.

உடல் நோய்கள் என்று இங்கு சொல்லப்படுவது உடல் எடுப்பதால் உண்டாகும் ஆறு விதமான மாற்றங்கள். பிறப்பு, இருப்பு, மாறுதல், வளர்தல், குறைதல், நசித்தல்.இதிலிருந்து விடுபட வேண்டுமானால் உடல் எடுப்பது நிற்க வேண்டும். அதற்கு மருந்து கிருஷ்ணன் என்ற அமிர்தம்.
.
18. யோ மர்த்யா: பரமம் ஹிதம் ச்ருணுத யோ வக்ஷ்யாமி ஸம்க்ஷேபத: 
ஸம்ஸாரார்ணவம் ஆப்தூர்மி பஹுலம் ஸம்யக் பிரவிச்ய ஸ்திதா: 
நானாஞானம் அபாஸ்ய சேதஸிநமோ நாராயணாயேத்யமும் 
மந்த்ரம் ஸபிரணவம் ப்ரணாமஸஹிதம் ப்ராவர்தயத்வம் முஹு:

ஆபதூர்மிபஹுலம்- ஆபத்துகளாகிற அலைகள் கொண்ட, ஸம்ஸாரார்ணவம்- சம்சாரம் என்ற கடலில், ஸமயக் பிரவிச்ய- நன்றாக முழுகி, ஸ்திதா: - இருக்கும் , மர்த்யா:, மனிதர்களே, பரமம் ஹிதம், எல்லாவற்றிற்கும் மேலான ஹிதம் எதுவோ அதை வக்ஷ்யாமி சம்க்ஷேபத:, சுருக்கமாக சொல்கிறேன். ச்ருணுத- கேளுங்கள். நானாஞானம் , பலவிதமாகக் கற்றதை எல்லாம், அபாஸ்ய- தூக்கி எறிந்து, சேதசி –மனதில், நமோ நாராயணாய இதி - நமோ நாராயணாய என்ற , அமும் மந்த்ரம்- இந்த மந்திரத்தை, ஸப்ரணவம்- ஓம்காரத்துடன் , முஹு: - அடிக்கடி , ப்ராவர்தயத்வம்-ஜெபியுங்கள்.

பாகவத புராணம் கலௌ நாமசங்கீர்த்தனம் என்று கூறுகிறது. கலியுகத்தில் நாம சங்கீர்த்தனம் ஒன்றே போதுமானது என்று.,இது மிகவும் சுலபமாக இருந்தாலும் இதைச் செய்பவர் கலியுகத்தில் அபூர்வம். யாக யக்ஞங்கள் தவம், மற்றும் பல வேதத்தில் கூறியுள்ள கர்மங்கள் இவை கடினமானவை. மற்ற கல்வியை எல்லாம் விட்டு நாம பாராயணம் செய்யுங்கள் என்கிறார். இதைத்தான் சங்கர 'பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம் கோவிந்தம் பஜ மூடமதே , என்கிறார்.

வேத வேதாங்கங்கள் உள்பட எவையெல்லாம் பகவானிடம் நம்மை ஈடுபடுத்தாதோ அவையெல்லாம் வீணே என்று பொருள். கண்ணனும் இதையே பகவான் கீதையில் 'த்ரைகுண்ய விஷயா வேதா: நிச்த்ரைகுண்யோ பவ அர்ஜுன, என்று கூறுகிறார்


No comments:

Post a Comment