#ஸூர்யக்ரஹணம்:-
நாள்:-26/12/2019
விஹாரி வருஷம்
மார்கழி 10 (26.12.2019) வியாழக்கிழமை மூல நக்ஷத்திரத்தில் காலை 08.08க்கு ஆரம்பித்து,
பகல் 11.19க்கு முடிவடைகிறது.
க்ரஹண மத்ய காலம் காலை 09.34 மணிக்கு இருக்கும்.
ஸூர்யகிரகணம்
26.12.2019
முதல்நாள் 25.12.2019 மாலை சூர்ய அஸ்தமனத்திற்குப் பிறகு போஜனம் கிடையாது.
வயோதிகர்கள், கர்ப்பிணி ஸ்த்ரீகள் மற்றும் வியாதியஸ்தர்கள் முதல் நாள் இரவு 01:30 வரை ஆகாரம் எடுத்து கொள்ளலாம்.
மறுநாள் 26.12.2019
க்ரஹணம் ஆரம்பம் :
காலை 08:08
மத்யகாலம் தர்ப்பணம் :
காலை 09:34
மோக்ஷ காலம்
காலை - 11:19
(இது சென்னை சூரிய உதயப்படி)
#அனுஷ்டானம்:-
காலை எழுந்து ஸ்நானம், சந்தியாவந்தனம் செய்யவும்.
மறுபடியும் காலை 08:08க்கு ஸ்நானம் செய்து கோபிநாமம் இட்டுக்கொண்டு, மடியுடுத்தி காயத்ரி ஜபம் காலை 09:34 வரை செய்ய வேண்டும்.
காலை 09:34 க்கு ஸர்வ பித்ரு தர்ப்பணம் மற்றும் தானம் செய்யவும்.
அதன் பிறகு அப்படியே அமர்ந்து 11:19 மணிவரை காயத்ரீ ஜபம் செய்யவும்.
காலை 11:19க்கு க்ரஹணம் விட்ட பிறகு மீண்டும் ஸ்நானம் செய்யவும்.
ஸ்திரிகளும் தலைக்கு ஸ்நானம் செய்யவேண்டும்.
கிரகணம் முடிந்த பிறகு
ஸ்நானம், பூஜை, நைவேத்யம் செய்த பிறகு போஜனம் செய்யவும்.
வாழ்க வளமுடன். RRV
#கேட்டை
#மூலம்
#பூராடம்
#அஸ்வினி
#மகம்
ஆகிய நக்ஷத்திரக்காரர்கள் சாந்தி செய்து கொள்வது நல்லது.
கர்ப்ப ஸ்திரீகள் க்ரஹண காலத்தில் வெளியே வரவேண்டாம் மேலும் ஸூரியனை பார்க்க வேண்டாம்.
#ஸூர்ய
#க்ரஹண
#தோஷ
#பரிஹார
#ஸ்லோகம்:-
கீழே கூறப்பட்டுள்ள ஸ்லோகங்கள் #சாந்திகுஸுமாகரம் என்கிற நூலில் க்ரஹண சாந்தியைக் கூறுமிடத்தில் காணப்படுகின்றன.
ஈச்வரனின் அஷ்டமூர்த்திகளாகிய
#இந்த்ரன்,
#அக்னி,
#எமன்,
#நிருருதி,
#வருணன்,
#வாயு,
#குபேரன்,
#ஈசானன்
ஆகிய 8 திக்பாலகர்களும்
க்ரஹணத்தினால் ஏற்படக்கூடிய தோஷங்களைப் போக்கட்டும் என்பது இந்த ஸ்லோகங்களின் கருத்து.
ஆகையால் க்ரஹண சமயத்தில் இதை பாராயணம் செய்து தோஷத்திலிருந்து விடுபடுவீர்களாக.
வாழ்க வளமுடன். RRV
#பாராயணம்
#செய்ய
#வேண்டிய
#ஸ்லோகங்கள்:-
001.
யோzஸெள வஜ்ரதரோ தேவ:
ஆதித்யானாம் ப்ரபுர்மத: |
ஸஹஸ்ரநயன: ஸூர்ய -
க்ரஹபீடாம் வ்யபோஹது ||
002.
முகம் யஸ்ஸர்வபூதாநாம்
ஸப்தார்சி ரமிதத்யுதி: |
ஸூர்யோபராகஸம்பூதா -
பீடாமக்னிர் வ்யபோஹது ||
003.
ய : கர்மஸாக்ஷி பூதானாம்
யமோ மஹிஷவாஹந: |
யமஸ்ஸூர்யோ பராகோத்தாம்-
தத்ர பீடாம் வ்யபோஹது ||
004.
ரக்ஷோகணாதிபஸ் ஸாக்ஷாத்
ப்ரளயாநிலஸந்நிப: |
கட்கவ்யக்ரோzதிபீதிச்ச -
ரக்ஷ்: பீடாம் வ்யபோஹது ||
005.
நாகபாசதரோ தேவ:
நித்யம் மகரவாஹந: |
ஸஜாலாதிபதிஸ் : ஸூர்ய -
க்ரஹபீடாம் வ்யபோஹது ||
006.
ப்ராணரூபீ த்ரிலோகாநாம்
வாத : க்ருஷ்ணம்ருகாதிப : |
வாயூஸ்ஸூர்யோபராகோத்தாம்-
தத்ரபீடாம் வ்யபோஹது ||
007.
யோzஸெள நிதிபதிர் தேவ:
கட்கசூலகதாதர : |
ஸூர்யோபராககலுஷம் -
தனதஸ்தத் வ்யபோஹது ||
008.
யோzஸெள பிந்துதரோ தேவ :
பீனாகி வ்ருஷ வாஹந: |
ஸூர்யோபராகபாபானி -
விநாசயது சங்கர: ||
No comments:
Post a Comment