Thursday, October 31, 2019

Vishnu Sahasranama 809 to 822 in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

விஷ்ணு ஸஹஸ்ரநாமம்

806. ஸுவர்ண பிந்து: - பிந்து என்பது அனுஸ்வாரம் அதாவது 'ம்' என்பதைக் குறிக்கும். வர்ண என்றால் எழுத்து., ஸு +வர்ண, சிறந்த எழுத்து அதாவது பிந்துவுடன் கூடிய ஓம்காரம். 
பிந்து என்பது அங்கங்களையும் குறிக்கும் ஆதலால் பொன் போன்ற பிரகாசமான அங்கங்களை உடையவர் என்பது பொருள். 
807.அக்ஷோப்ய: - கலக்க முடியாதவர். 
808. ஸர்வவாகீச்வரேச்வர: - பேச்சுத்திறன் கொண்டவர்க்கெல்லாம் மேலான ஈஸ்வரன். 
809. மஹாஹ்ரத:-பக்தர்களுக்கு ஆனந்த வெள்ளம் நிரம்பிய பெரிய மடுவாக இருப்பவர். 
810. மஹாகர்த்த:- எல்லாம் எதிலிருந்து வந்து எதில் இருந்து கொண்டு எதில் புகுகிறதோ அந்த ஆழம் காணமுடியாத பெரும் பள்ளம் போன்றவர். 
811. மஹாபூத:-பஞ்ச பூதங்களுக்கும் ஆதாரமாக இருப்பவர். 
812. மஹாநிதி:- மகான்களின் நிதியாக இருப்பவர் அல்லது மிகப்பெரிய நிதியாக உள்ளவர் 
813. குமுத:-கும், பூமிம் மோதயதி இதி . உலகத்தின் ஆனந்தமாக இருப்பவர் அல்லது கௌ பூமௌ மோததி- பூமியில் பக்தர்களுடன் மகிழ்பவர்,
814. குந்தர: - பிரம்மஞானத்தை அளிப்பவர் . மோக்ஷம் அளிப்பவர்
815. குந்த: - கும் பாபம் தயதி- பக்தர்களின் பாபத்தை அழிப்பவர்
816. பர்ஜன்ய:-பிறவித் துன்பத்தின் வெப்பத்தைப் போக்கும் மழை மேகமாக இருப்பவர்.
817.பாவன:- தம்மை நினைத்த மாத்திரத்தில் பரிசுத்தமாக்குகிறவர். 
818. அனில:-இல என்றால் தூண்டுவிப்பது. அனில என்றால் தூண்டுதல் இல்லாதது. பகவான் தூண்டுதல் இல்லாமலே பக்தர்களை காப்பவர் 
819.அம்ருதாச: -பக்தர்களுக்கு தம் குணங்கள் என்னும் அமுதத்தை அளிப்பவர்.
820. அம்ருதவபு:-அழியாத வடிவம் உள்ளவர்
821. ஸர்வக்ஞ:- எல்லாம் அறிந்தவர்.
822.ஸசர்வதோமுக:-எங்கும் முகம் உடையவர். அதனால் எல்லா வழியிலும் அடையக்கூடியவர்

  

No comments:

Post a Comment