Tuesday, October 29, 2019

Vishnu Sahasranama 788 to 805 in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

விஷ்ணு ஸஹஸ்ரநாமம்

788. சுபாங்க: -அழகான அங்கங்களை உடையவராக தியானிக்கத் தகுந்தவர். 
789. லோகஸாரங்க: - லோகஸாரேண கம்யதே இதி- உலகத்தின் ஸாரம் எதுவோ ( அதாவது ஓம்காரம்) அதனால் அடையப்படுபவர்.

790. ஸுதந்து:-தனு என்றால் மெல்லிய என்று பொருள். தந்து என்பது நூல் . பஞ்சிலிருந்து மெல்லிய வடிவில் பெரிதாக வெளிப்படுவதால் தந்து எனப்படுகிறது. ஸுதந்து: என்றால் பஞ்சிலிருந்து நூல் போல இந்த ப்ரப்ஞ்சத்தை விரிவாக்குகிறவர் என்று பொருள். 
'யதா ஊர்ணநாபி: ஸ்ருஜதே க்ருஹ்ணதே ச ,' – உபநிஷத்.

எவ்விதம் சிலந்தியானது தன்னிடம் இருந்தே நூலை உண்டாக்கித் தனக்குள்ளேயே இழுத்துக் கொள்கிறதோ அது போல பரம்பொருளிடம் இருந்து இவ்வுலகம் உண்டாகிறது பின்னர் ஒடுங்குகிறது.

791. தந்து வர்தன: பிரபஞ்சத்தை விருத்தி செய்பவர் .
792. இந்த்ரகர்மா- இந்த் என்றால் பரம ஐஸ்வர்யம். பகவான் பரமேஸ்வரன். ஈச்வரஸ்ய இதம் ஐஸ்வர்யம். 
793. மஹாகர்மா-உன்னதமான செய்கைகளை உடையவர்
794. க்ருதகர்மா- காரியம் செய்து ஆகவேண்டியது ஒன்றும் இல்லாதவர் . அல்லது திரும்பத் திரும்ப ஸ்ருஷ்டி முதலிய கர்மங்களை செய்துகொண்டிருப்பவர் 
795. க்ருதாகம: -ஆகம அல்லது வேதத்தை உண்டுபண்ணியவர்.
796. உத்பவ:-உனனதமானவர். எல்லாவற்றிற்கும் மேல் இருப்பவர் 
797. ஸுந்தர:- சுந்தரமான ரூபம் உடையவர்.
798. ஸுந்த:-ஸுஷ்டு உதந்தி இதி- பக்தர்களிடம் தயை உள்ளவர்.
799. ரத்னநாப: -ரத்தினம் போன்ற நாபியை உடையவர். தங்கத்தாமரையால் ஜ்வலிப்பதால். 
800.ஸுலோசன:- அழகிய தாமரைக் கண்களை உடையவர் 
801. அர்க: அர்ச்சயதே இதி அர்க; - பிரம்மாதிதேவ்ர்களாலும் வணங்கப்படுபவர்
802. வாஜஸனி:-வாஜம் அன்னம் தனோதி இதி-அன்னத்தைக் கொடுப்பவர் . அதாவது பராமரிப்பவர்.
803. ச்ருங்கீ-கொம்புள்ள மீனாக அவதரித்தவர்.
804.ஜயந்த:- ஜெயிப்பவர் அல்லது வெற்றிக்குக் காரணமானவர்.
805. ஸர்வவித் ஜயி- எல்லாம் அறிந்தவர். எல்லாப் பகைகளையும் வென்றவர்.

No comments:

Post a Comment