Friday, October 4, 2019

Vishnu Sahasranama 667 to 683 in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

விஷ்ணு ஸஹஸ்ரநாமம்

667. ப்ரஹ்மண்ய:-ப்ரம்ம என்றால் சித் அசித்துடன் கூடிய ப்ரக்ருதி. அதன் காரணமானவர்.

668. ப்ரஹ்மக்ருத் ப்ரஹ்மா- ப்ரம்ம என்றால் வேதம் என்றும் பொருள். ப்ரஹ்மக்ருத், ப்ரஹ்மா-
வேதத்தையும் ப்ரம்மாவையும் உண்டாக்கியவர்.

669. ப்ரஹ்ம- பரமாத்மா. உபநிஷத்தில் அறியப்பட்ட ப்ரம்மம். 
670. ப்ரஹ்ம விவர்தன: -ப்ரம்ம என்னும் சொல்லால் குறிப்பிடப்படும் தவம், யாகம், முதலியவைகளை வளர்ப்பவர்.
671.ப்ரஹ்மவித்- வேதத்தை உள்ளபடி உணர்ந்தவர்,
672. ப்ராஹ்மண:- ப்ரம்மம்(வேதம்) நயதி (அனதி) இதி ப்ராம்மண: -வேதத்தை எல்லோருக்கும் உபதேசிப்பவர் 
673. ப்ரஹ்மீ-ப்ரஹ்ம அஸ்மின் அஸ்தி இதி. ப்ரஹ்ம என்று சொள்ளக்கூடியதெல்லாம் அவரிடம் இருப்பதால் ப்ரஹ்மீ எனப்படுகிகிறார்.

674. ப்ரஹ்மஞ:-ப்ரஹ்மன் என்று வேதத்தில் கூறப்படும் தன்னைத் தானே அறிந்தவர்.(அவரை அறிந்தவர் அவரே)

675.ப்ராஹ்மணப்ரிய: -ப்ரஹ்மாம் ஜாநாதி இதி ப்ராஹ்மண தேஷாம் பிரிய: . பிரம்மத்தை அறிந்தவர்க்குப் பிரியமானவர்;

676.மஹாக்ரம: -க்ரம என்றால் அடிவைப்பு. அதனால் மஹாக்ரம: என்பது த்ரிவிக்ரமனைக் குறிக்கும். 
ஒரு தாய் குழந்தையை கையைப் பிடித்து அடிமேல் அடியாகக் கூட்டிச் செல்வதைப் போல அடியார்களை முக்தி நெறியில் அழைத்துச் செல்கிறான்.

677. மஹாகர்மா-படைத்தல் காத்தல் அழித்தல் முதலிய மிகப்பெரிய செயல்களை உடையவர்.
678.மஹாதேஜ:-பெரும் ஒளியுடையவர். 
நாசயாமி ஆத்மபாவஸ்த: ஞான தீபேன பாஸ்வதா- ப.கீ. 1௦-11
அந்தர்யாமியாக இருந்துகொண்டு ஞானம் என்ற தீபத்தின் ஒளியால் அஞ்ஞானத்தை அழிக்கிறேன்.

679. மஹோரக: - மஹான் உர: - பரந்த இதயம் உள்ளவர் அதனால் க:எங்கும் செல்பவர். உரஸி கச்சதி இதி உரக: என்றால் அடியவர்களின் இதயம் புகுபவர் என்று பொருள்.

உரஸா கச்சதி என்று பார்க்கும்போது உரக: என்றால் பாம்பு. கால்கள் இல்லாமல் மார்பினால் ஊர்ந்து செல்வதால். மஹா உரக: என்பது ஆதிசேஷன்.பகவான் ஆதிசேஷனை உடையவன் ஆதலால் மஹோரக: எனப்படுகிறான்.

680.மஹாக்ரது: -க்ரது அல்லது யாகங்களினால் சிறந்த அஸ்வமேதம் முதலியவைகளால் ஆராதிக்கப்படுபவர்.

681. மஹாயஜ்வா- யாகம் செய்பவராகவும் அதன் அதிதேவதையாகவும் இருப்பவர். 
682.மஹாயக்ஞ:-- அவருடைய் ஆராதனையே மிகப்பெரிய யக்ஞமாக உடையவர். 'யக்ஞானாம் ஜபயக்ஞ: அஸ்மி,'ப.கீ 1௦.25- தலை சிறந்த ஜபயக்ஞமாக இருப்பவர்.

683. மஹாஹவி: -அக்னியில் சமர்ப்பிக்கப்பட்ட எல்லாமாக தானே இருப்பவர். 'ப்ரஹ்மார்ப்பணம் ப்ரம்ம ஹவி: .ப்ரஹ்மாக்நௌ ப்ரஹ்மணா ஹுதம், (பக. கீ) 
ப்ரஹ்மம் என்னும் அக்னியில் ப்ரஹ்மத்தினால் அர்ப்பணம் செய்யப்படும் ஹவிஸ் எல்லாம் ப்ரஹ்மமே.
பிரளயகாலத்தில் பிரபஞ்சமே அவருக்கு ஹவிஸ் ஆகிறது.

No comments:

Post a Comment