Monday, September 23, 2019

Why mantras to be chanted in Sanskrit?

சமஸ்க்ருதத்தில் ஏன் ?

 தமிழில் மந்திரம் ஓதக்கூடாதா ...?

.....என பேசும் புரட்சி மேதாவிகளுக்கு சமர்ப்பணம் !!

விஞ்ஞானமும் மெய்ஞானமும் வெவ்வேறல்ல என்பதை உறுதியாக நம்புகிறவன் நான். Yes..

அதை உறுதி செய்யும் சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போதெல்லாம் கொஞ்சம் ரிஸர்ச் செய்வேன். Yes.

சமீபத்தில் நெருங்கிய உறவினர் ஒருவரது வீட்டில் நடந்த திவசத்தில் கலந்து கொண்டேன். அந்த உறவினர் கொஞ்சம் மேதாவீ + புரட்சிச் சிந்தனைகள் (என்று அவர் நினைத்துக் கொண்டிருக்கும்) கொண்டவர்.

சாஸ்திரிகள் சொல்கிற மந்திரங்களை எல்லாம் தமிழில் மொழி பெயர்த்துச் சொல்லிக் கொண்டிருந்தார்.

'பவித்ரத்தை அணிந்து கொண்ட பிறகு, தர்பையில் அமர்ந்து கொண்டேன், ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு கரண்டி நெய் எடுத்து' …. இத்யாதி.

சாஸ்திரிகள் இதை அவ்வளவாக ரசிக்கவில்லை.

'இப்படிச் சொல்லக் கூடாது. சமஸ்கிருதத்தில்தான் சொல்லணும்' என்றார்.

'ஏன்? தமிழ்ல சொன்னா சாமிக்குப் புரியாதா அல்லது பிடிக்காதா?' என்று சிரித்தார் அந்த புரட்சி உறவினர்....

வேதாளம் Provoke செய்யும் போது, மௌனம் கலைந்த விக்கிரமன் போல நான்...

 அவ்வளவு நேரம் சும்மா இருந்த நான் வாயைத் திறக்க வேண்டியதாயிற்று.

'நீ பேசறது எதிர்ல இருக்கிறவனுக்கு மட்டும்தான் கேக்குது. ! ரேடியோ அல்லது டிவி ஸ்டேஷன்ல பேசினா பல்லாயிரம் கிலோமீட்டர் தூரத்திலயும் கேட்க முடியுது. ஏன்?'

'எலெக்ரோ மேக்னட்டிக் வேவ்ஸ்'

'அப்படீன்னா என்ன?'

'குறிப்பிட்ட ஃப்ரீக்வன்ஸிக்கு மாத்தறது'

'சரி.. சில ஃப்ரீக்வன்ஸிக்கள் கேட்க இதமா இருக்கு, சில நாராசமா இருக்கு, சிலது காதையே டேமேஜ் பண்ணுது, சில ராகங்கள் வியாதியைக் குணப்படுத்தும் தன்மை கொண்டவைன்னு நிரூபிச்சிருக்காங்க. இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்?'

'என்ன அர்த்தம்?'

'என்ன மாதிரி ஒலி அலைகள் உண்டாக்கறோம்ங்கிறதைப் பொறுத்து விளைவுகள் மாறுது. சரிதானா?'

'ஆமாம்'

'ஒரு ஆஸிலாஸ்கோப்பில் மைக்கைப் பொறுத்தி 'தர்பே ஸ்வாஸினஹா' ந்னு சொல்லு. அப்புறம் 'தர்பையில் அமர்ந்து கொண்டேன்' அப்படீன்னும் சொல்லு. ரெண்டோட வேவ் ஃபார்மும் ஒரே மாதிரி இருக்குமா?'

'இருக்காது'

'ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் அட்மாஸ்பியரில் என்ன மாதிரி அதிர்வுகளை உண்டாக்குவது சரியான +  தகுதியான + தேவையான மனநிலையை உருவாக்கும் என்கிறது தெரிந்து அமைக்கப்பட்டவை சமஸ்கிருத மந்திரங்கள்'

'சரி இப்ப என்ன சொல்றே?'

'மந்திரங்கள் Communication அல்ல மொழிபெயர்க்க.... குறிப்பிட்ட ஒலி அலைகளுக்காக அமைக்கப்பட்டவை'

'தமிழாலே அது முடியாதா?'

'முடியும், ஆனா இதை அப்படியே மொழிபெயர்ப்பதால் முடியாது. இதே வேவ்ஸ் வர்ராப்பல வேற வாக்கியம் அமைக்கணும்'

'ஸோ…?'

'மந்திரங்களை மொழி பெயர்ப்பது காகிதத்தில் வரைந்த சூரியன் மாதிரி. எவ்வளவு வண்ணமயமா அழகா இருந்தாலும், சூரியனோட ஒளியும், வெம்மையும் அதில் வராது'

புத்தி இருக்கறவனுக்குப் புரிந்துகொள்ளவது சுலபம்....

(  நாகப்பட்டிணம் இன்ஜினியர்...சடகோபன் ஐயங்கார் ஐ.ஐ.டி.யில் படித்து, பணியாற்றி ஓய்வு பெற்ற இயற்பியல் மேதை. குரோம்பேட்டையில் இருக்கிறார்... மேலே உள்ள கருத்து அவரிது. மிகவும் ரசித்தேன்.)

No comments:

Post a Comment