விஷ்ணு ஸஹஸ்ரநாமம்
. 657.காமதேவ; -காமான் தீவ்யதி இதி காமதேவ:. வேண்டுவதைத் தருபவர்.
658. காமபால: -தந்ததைக் காப்பவர்.
659. காமீ-பரிபூர்ணகாமன் அவாப்த சமஸ்த காமன். அவருக்கு வேண்டுவது எதுவும் இல்லை.
660.காந்த:-கவர்ச்சி உடையவர். க என்றால் பிரம்மா கஸ்ய அந்த: பிரம்மாவின் முடிவு. அதைச்செய்கிறவர்.
661. க்ருதாகம:-ஆகமங்களை ( வேதம் பாஞ்சராத்ரா ஆகமம் இவைகளை) வெளியிட்டவர்.
'வேதா: சாஸ்த்ராணி விக்ஞானம் ஏதத் த சர்வம் ஜனார்தநாத்,' – விஷ்ணு ஸஹஸ்ரநாமம் பலஸ்ருதி.
வேதம் சாஸ்திரங்கள் ஞானம் எல்லாம் வந்தது ஜனார்தனனிடம் இருந்து.
662.அனிர்தேச்ய வபு: -இப்படிப்பட்டததென்று நிர்ணயிக்க முடியாத ரூபம் உள்ளவர்.
'ஏகைகஸ்மின் குணப்ராந்தே ஸ்ராந்தா: நிகம வந்தின:' – யாதவாப்யுதயம். பகவானின் ஒரு குணத்தை வர்ணிக்க முயன்று வேதங்கள் களைப்படைந்தன என்று தேசிகர் கூறுகிறார்'
ஆணல்லன் பெண்ணல்லன் அலியும் அல்லன்
காணலும் ஆகான் உள்ளல்லன் இல்லையல்லன் ( திருவாய்மொழி)
663.விஷ்ணு: -எங்கும் வியாபித்திருப்பவர்
வ்யாப்திர் மே ரோதஸீ பார்த்த காந்திரப்யதிகஸ்தித:
க்ராமமாணம் சாப்யஹம் பார்த்த அபிஸம்ஞித:
"பார்த்தா என்னுடைய் ஒளி ஆகாயத்தையும் பூமியையும் வியாபித்திருப்பதனாலும் பாத்தால் உலகத்தை ஆக்ரமிப்பதனாலும் ஆண் விஷ்ணு என்று சொல்லப்படுகிறேன்." – மகா. பா. சாந்தி பர்வம்
664. வீர: - வீ: என்றால் செல்லுதல், வியாபித்தல், படைத்தல், ஒளிர்தல் முதலியவை. முந்தைய நாமத்தின் தொடர்ச்சியாகும்.
665. அனந்த: - அளவிடப்படாதவர். இடம் காலம் பொருள் இவற்றால் அளக்க முடியாதவர்
666.தனஞ்சய: -தனம் ஜயதி இதி தனஞ்சய: யுதிஷ்டிரரின் ராஜசூய யாகத்தின் பொது அர்ஜுனன் எல்லா தேசங்களுக்கும் சென்று பொருள் சேகரித்ததனால் தனஞ்சயன் என்ற பெயர் ஏற்பட்டது. கீதையில் கண்ணன் தன்னை பாண்டவானாம் தநஞ்ஜய:, பாண்டவர்களில் நான் தனஞ்சயன் என்று கூறுகிறான்.
பகவான் செல்வத்தை ஜெயித்தவர் அதாவது மிகப்பெரிய தனமாக உள்ளவர்.
No comments:
Post a Comment