Monday, September 9, 2019

From Maaya to Gnana - Arunagiri nathar

Courtesy: Sri.N.V.S.Manian


இன்று மாலை அலங்காரப்பாட்களைப் பாரத்துக்கொண்டிருந்தேன். என்னுடைய
தற்போதைய  மனநிலையை பிரதிபலிக்கும் படியான பாடல் ஒன்று கண்ணில் பட்டது
உடன் கருத்தினுள்ளும் சென்றது.



அந்தப் பாடல்

உதித்து
ஆங்கு உழலவதும்
சாவதும்
தீர்தது
என்னை
உன்னில ஒன்றாய் விதித்து
ஆண்டு
அருள் தரும் காலமும்
உண்டோ?

என்று ஒரு கேள்வியைக் கேட்கிறார் அருணை முனிவர்  இந்தக் கேள்வி நாம்
ஒவ்வொருவரும் கேட்க வ்சேடிய கேள்வி. பிறப்பு இறப்பு என்ற உண்மையை
உணர்ந்து கொண்டவர்கள் அத்தனை பேருக்கும் எழக்கூடிய கேள்விதான் இது.

இந்தக் கேள்வியை குறித்து சிந்திக்கும் போது பல உண்மைகள் நமக்குப் புலப்படுகின்றன.
.
நம்மை அறியாமல்நம்மால் திட்டமிடப் படாமல் . ஒரு உடலோடு பிறக்கிறோம்.
பிறப்பின் காரணம் நமக்குத் தெரிவதில்லை. ஏன் பிறந்தேன் என்ற கேள்வி
நமக்கு வாழ்   நாள் முடியும் வரை எழுவதே இல்லை, எதோ பிறக்கிறோம். யாரோ
வளர்க்கிறார்கள். வளர்ந்து,ஆடி ஓடி, அறியாமையினாலும், காரணம்
தெரியாமலும், ஒவ்வொரு செயலையும் செய்து, சொல்லொணாத துயரத்திற்கும்,
துன்பத்திற்கும் ஆளாகிறோம். சிலருக்கு, முதுமை வர வர, சாவின் பயங்கரம்
வந்து தாக்குகிறது. மரணத்திற்கு பின்னால்?என்ற கேள்வியைக் கேட்டுக்
கொண்டு, பதில் தெரியாமல் தவிக்கிறோம்.

இது இப்படியே தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது என்பது அறிஞர் கருத்து.

பிறப்பதும்
பிறந்து  வளர்ந்து  உழல்வதும்
பிறகு மரிப்பதும்
விடாமல் நடந்து கொண்டே இருக்கிறது.

இதற்கு முடிவு கிடையாதா?
முடிவு உண்டு. ஞானத் த்போதனர்களை நாடி, அவர்கள் அருளுரைகளைக் கேட்டு,
அதன்படி, வாழக் கற்றுக் கொண்டோமானால்
ந்மக்கு அந்த அறியாமை நீங்கும்.. அறியாமை இருட்டிலிருந்து
வெளிச்சத்துக்கு வருவோம். வெளிச்சத்துக்கு வந்த உட்னே, நமக்கு விமோசனம்
கிடைத்து விடவில்லை.

அருணை முனிவர், கேள்வி கேட்கும் போதே அதற்குண்டான விடையையும் அதில்
வைத்தே  கேள்வியைக் கேட்கிறார்.

உதித்து, ஆங்கு உழல்வதும் சாவதும் தீர்த்து, ( தவிர்த்து)
இதைத் தவிர்க்க வேண்டுமானால், நான் என்ன செய்ய வேண்டும்?
நான் செய்வதற்கு ஒன்றுமே இல்லை அப்பா.
நீ தான் அருள் செய்ய வேண்டும்.
என்னை,, இந்தப் பிறவியை,, பிறப்புக்குக் காரணமாக் அமையும் வினை சார்ந்த
விதியை, எல்லாவற்றையும் இல்லாததாக்கிவிட வேண்டும்.
எப்படி?
என்னை உன்னோடு சேர்த்துக் கொண்டு விடு.  உன்னில் ஒன்றாக்கி விடு
விதையை இல்லாததாக்கி விடு..
காவிக் கமலக் கழலுடன் சேர்த்து எனைக் காத்தருள்.
நீ அழிவில்லாதவன். பிறப்பும் இறப்பும் அற்றவன்.  அறியாமையினால் உழல்வது
என்பது உனக்குத் தான் கிடையாதே.
நீ ஞான வடிவானவன்.
நான் என்ற உணர்வு இருக்கும் வரை,   நான் அஞ்ஞானத்தின் உருவமாகத் தான் இருப்பேன்..
அக்னியில் சேர்ப்பித்த எல்லாப் பொருளும், அக்னி ஆகிவிடுவதைப் போல,
உன்னில் சேர்ந்த ஒவ்வொன்றும் நீயாகி விடுகின்றன.
நீயான் ஞான வினோதத்தை என்று நீ எனக்கு அருளப் போகிறாய்?
உனது அருள் h இல்லாமல், நான் எவ்வளவு தான் முயன்றாலும், என்னால்
சாதிப்பது என்பதே கிடையாது.
உன் அருள் கடாட்சம் கிடைத்த உடனே, நான் என்பது அற்று விடும்.
நான் என்பது செத்து விடும்.
நான் என்ற எண்ணம் அழிந்தவுடன் ஏங்கும் நீதான் இருப்பாய்.  நீயாய்
இருப்பாய் என்று சொல்வதற்கு நான் இருக்க மாட்டேன்.

யான் எனது என்னும் செருக்கு அறுப்பான்
வானோர்க்கு உயர்ந்த உலக்ம் பெறும்

என்று ஒரு மேலான,, ஒப்பில்லாதஒரு கருத்தைச் சொல்லுகிறார் வள்ளுவர்
.
யான் எனது என்பது செருக்கா? ஆம் என்கிறார் வள்ளுவர்.  நான் என்று
உணர்தலே, அகங்காரத்தின் மறுபக்கம் போலிருக்கிறது.
எனது என்கிற எண்ணம் அகங்காரத்தின் உச்ச்க் கட்டம் போலிருக்கிறது.

எனது என்று சொல்லிக் கொள்ள ஏதுமில்லாத ஞானிகள் பலர் இருந்திருக்கின்றனர்.
ஆனால் நான் என்பதை அறிந்து, உணர்ந்து, அந்த் எண்ணத்தைக் கூட நழுவ
விட்டவர் சிலர் தான்.
அந்த சிலரில், நான் ஒருவராக இருக்கக் கூடாதா இறைவா?

வானோர் என்பவரும் பிறக்கத்தானே செய்கிறார்கள்.
அவர்களுக்கு, அந்த மேலான பதவியை நீதானே அளித்திருக்கிறாய்.
எந்தப் பதவிக்கும் முடிவு காலம் உண்டல்லவா?

வானோர்க்கு உயர்ந்த உலகம் என்றது, அவர்களைக் காட்டிலும் ஒரு மேலான
பதவியைப் பெறுதல்.
அந்தப் பதவி தான் இறைவன் திருவடி நிழலிலெயே இருத்தல்.
வானுலகமும், பூவுலகமும் காணாதிருத்தல்.

மரணம் பிறவி இரண்டும் எய்தார்,இந்த வையகத்தே
யார் அது?
இறைவனால் சேர்த்துக் கொள்ளப்பட்டவர், இறைவனின் திருவடி கண்டு அத்னோடு இணைந்தவர்..
அப்படி இணைந்தவர், பிறவிப் பெருங்கடல் நீந்தி விடுவார்,.,

கயல் மாண்ட கன்ணி பங்கண்
கலந்து என்னை அவனோடு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தண்ணீரில் உப்பு கரைவதைப் போல, என்னுடைய உருவமும், என்னுடைய தன்மைகளும்,
அப்படியே அந்த இறைவன்
என்ற பெருங்கடலுள் கலந்துவிட வேண்டும்.

இப்படிப் பிரார்த்தனை செய்து,இறைவன் அருள் பெற்று," நான், நீ" யாகி
விட்டால், அது உலகத்தார்க்கு வினோதம் தான்.
அது ஞான வினோதம்.
அந்த ஞான வினோதம் என் வாழ்வில் என்று நடக்கப் போகிறது?
அப்படி அந்த வினோதம் நடக்குமானால், அது மற்றவரகளுக்குத் தான் தெரியுமே
ஒழிய, நான் அறிய மாட்டேன்.
அந்த இடத்தில் நான் இருக்காது.
முழுவதும் கரைந்த பின் உப்புக்கு உருவம் ஏது?

எனது தொடர் பிறவி இடரானது,
எழு கடல் மணலை அளவிடின் அதைக் காட்டிலும் அதிகமப்பா.
படைப்புக் கடவுள், கை ஓய்ந்து விட்டான்.
கழுகுகளும் நரிகளும், என் பல்வேறு உடலைத் தின்று அலுத்து விட்டன.

பிறவி அலை ஆற்றினில் புகாமல்,
பிருகிருதி மார்க்கத்தைத் தொடராமல்,
உறுதியான குரு வாக்கியத்தை ( நான் யார் என்று விசாரம் செய்து- என்னை அறிவித்து-
உனது பத காட்சியைத் தந்து, எனை உன் கழலோடு இணைத்து அருள் செய் அப்பா.

உலகியல் மாயா வினோதம் தொலைந்து, ஞான வினோதம் நடக்குமாறு அரு செய்யப்பா!

No comments:

Post a Comment