ஊத்துக்காடு ஸ்ரீ வேங்கட சுப்பையரின் நாம கீர்த்தனத்தை வலியுறுத்தும் மிக அழகான பாடல்
ராகம்: ப்ருந்தாவன ஸாரங்கா தாளம்: ரூபகம்
01. கோவிந்த கோவிந்த ராதா முகுந்தா
முரளீதரானந்தகந்தா
ஹரே மதுஸூதன கோகுலேந்த்ர
எங்கள் கோலாஹலனந்த ப்ருந்தாவனானந்த கோபீஜனாம்போதி சந்த்ர
02. காயத்தினை நொந்து கர்மம் கழித்த பின் கதியினை தேடத்தகாதே - அதைக்
கருத்தினில் கொள்ளப்புகாதே - வெறும்
காலத்தினைச் சொல்லி நேரத்தில் பாதியை கனவென்று விட்டு விடாதே
வெறும் கனவென்று விட்டு விடாதே
03. கண்ணால் அவனை நீ நாடு - நல்ல
பண்ணால் அவன் புகழ் பாடு - இரு
கையாலே தாளங்கள் போடு - இரு
காலால் அடவுன்றி ஆடு - அந்த
காலன் வந்தாலென்ன நேரில் அவன் கையில் தாளத்தைக் கொண்டு போய்ப் போடு
(அவன் கையில்) தாளத்தை கொண்டு போய்ப் போடு
04. நித்யம் அநித்யம் பரத்வம் வசித்வம் என்றென்றும் புரியாது போ போ - எங்கள்
நீலநிறக்கண்ணன் நாமத்தைப் பாடும் ஆனந்தத்திற்கீடில்லை இப்போ
ஆனந்தத்திற்கீடில்லை இப்போ
05. நேரத்தகும் என்று சொல்லு - உன்
நெஞ்சில் அவன் உருக் கொள்ளு - இன்னும்
கூட ஒருதரம் சொல்லு - பல
கோடி பழவினை தள்ளு - செல்வம்
கோடி கொடுத்தாலும் பாடும் பிறவிகள் கூட கிடைக்குமோ சொல்லு
பாடக் கூட கிடைக்குமோ சொல்லு
06. பாடக்கிடைத்த நாவொன்று - தாளம்
போட கிடைத்த கை இரண்டு - இன்னும்
கூடும் கரணங்கள் மூன்று - வேதம்
கோடி எனப்படும் நான்கு - இந்த
குற்றமற்ற சுகம் மற்றவர்க்குச் சொன்னால் கொள்ளை தான் போகாதோ ஐந்து
கொள்ளை தான் போகாதோ ஐந்து
07. கையில் கிடைத்திட்ட கன்னல்
கணிச்சாற்றை மெய் சுவைக்கப் படாதோ - அதை
கருத்தினில் கொள்ளப்புகாதோ - வெறும்
காலங்கள் கோலங்கள் அவை-இவை என்று சொல்லி காலனில் வசப்படாதே
காலனில் வசப்படாதே
08. பச்சை நிறம் பட்ட மேனி - பரம்
பாடி கிடைத்திட்ட போதே - எமைப்
பழவினை ஓன்றும் செய்யாதே - இங்கு
பண்ணின புண்யம் திண்ணம் பலித்திட பாடிட வரும் தப்பாதே
பாடிட வரும் தப்பாதே
09. காணக்கிடைக்காத தங்கம் - இங்கு
கண்டு களிக்க ஸத்ஸங்கம் - இங்கு
வேண்டியது அருள் பொங்கும் - நிகர்
இல்லை என்றென்றும் தங்கும்
கோண கோண சொல்லி கோவிந்தா என்றாலும் கூட அருள்தானே பொங்கும்
கூட அருள்தானே பொங்கும்
10. பாடும் சுகமொன்று போலே - இந்தப்
பாரில் இல்லை ஆதலாலே
நாடறிய சொல்லு மேலே
கூடக் கலந்திட்ட ஹாஸம் பரந்திட்ட கோலாஹலத்துக்கப்பாலே
கோலாஹலத்துக்கப்பாலே
***Listen to Govindha Govindha Radha Mukundha by ozgodivinity on #SoundCloud
https://soundcloud.com/ozgodivinity/govindha-govindha-radha-mukundha

No comments:
Post a Comment