Thursday, August 8, 2019

Sraddham some facts

சனாதனம் சில புரிதல்கள்..பாகம் 19

#ஶ்ராத்தம்_திவசம்...

யமன்-- 
யே யஜந்தி பித்ரூன் தேவான் ப்ராம்மணான் ச ஹுதாஶனான்
சர்வ பூதாந்தராத்மானம்
 விஷ்ணுமேவ யஜந்தி தே
ஆயு: புத்ரான் யஶ: ஸ்வர்கம் 
கீர்த்திம் புஷ்டிம் பலம் ஸ்ரீயம்
பஶுன் சுகம் தனம் தான்யம்
ப்ராப்னுயாத் #பித்ரு பூஜனாத்..

எவர்கள் பித்ருக்களையும் தேவர்களையும் அக்னியையும் சாஸ்த்ர விதிப்படி பூஜிக்கிறார்களோ, அவர்கள் சர்வ ப்ராணிகளுக்கும் அந்தர்யாமியான  விஷ்னுவை பூஜிக்கிறார்கள். ஆயுஸ் புத்ரன் புகழ் தநம் உடல் பலம் ஸ்வர்கம் ல்க்ஷ்மீ கடாக்ஷம் பசுக்கள் சுகம் தான்யம் இவைகளை பித்ரு பூஜனத்தால் அடைகிறார்கள். ஆகையால் க்ருஹஸ்தர்கள் ஶ்ரத்தையுடன் ஶ்ராத்தத்தை செய்யவேண்டும்.

சாஶ்த்ரம் ஹிரண்ய ஶ்ராத்தம் செய்வதை நலிந்தவனுக்கு மட்டுமே கூறுகிறது. பார்வனம் எனும் அன்ன ஶ்ராத்ததையே அனைவரும் செய்தல் வேண்டும்

பார்வன ஶ்ரச்த்தம் செய்யும் அஹத்தில் சந்ததிகள் கஷ்டப்படுவது..
சந்ததில் இல்லாமல் போவது ஆகியவை நடப்பதே இல்லை ..
ஶ்ராத்தம் என்பதே உன்மையில் நம் நன்மைக்காக செய்யப்படுவதிதான்.  

அதுவும், முதல் வருடத்தில்.அனைத்து 16.ஶ்ராத்தங்களையும் ஆசார ஹீனமில்லாமல் செய்வது அஶ்வமேத யக்ஞம் செய்த பலனை தரும்  என ஶாஶ்த்ரம் கூறுகிறது. 

 #16_ஶ்ரத்தங்களாவன

ஏகோதிஷ்டம் எனப்படும் 11 ம் நாள் செய்யும் . முதல் மாச ஶ்ராத்தம்..
 11 மாசத்திற்கான.ஶ்ராத்தம் 
ஊமாஸ்யம்.. 27 ம் நாள் இரண்டாவது.மாத ஶ்ராத்ததிற்கு முன் செய்வது...
உன் த்ரைமாசிகம்.. மூன்றாம் மாத ஶ்ராத்ததிற்கு முன் செய்வது
ஊன.ஷான்மாசிகம்..6 அம்.மாத ஶ்ராத்தைற்கு முன் செய்வது.
ஊனாப்தீகம்..முதல் வருட.ஶ்ராத்தத்திற்கு முன் செய்வது..

ஆக 12 மாச.ஶ்ராத்தம்..4 ஊன ஶ்ராத்யம் சேர்ந்து.16 ஷோடச ஶ்ராத்தம்  செய்பது அனேக புண்யங்களை கொடுக்கும்..
இதை செய்பவன்.முன்.7 தலைமுறைகளும் பின் 7 தலைமுறையும்
கடைத்தேறி க்ஷேமங்களை அடைகிறார்கள்.. 

மகன் பெற்றொர்க்கு செய்ய வேண்டிய விஷயம் என ஶாஸ்த்ரம்.உரைப்பது இரண்டே விஷயம் தான்.ஒன்று அவர்கள் உயிருடன் இருக்கும்போது அவர்கள் சொல்லை தட்டாமல் இருப்பது
அடுத்து அவர்கள் இறந்த பின் விடாமல் ஶ்ராத்தம் செய்வது.

அந்த நாட்களில் வசதி இல்லாதவர் கூட ஹிரண்ய சிரார்த்தம் செய்ய யோசிப்பார்கள்.ஆனால் தற்போது வசதியானவர்கள்கூட ஹிரண்ய சிரார்த்தமாக செய்கிறார்கள்.
அதையும் கொஞ்சம்கூட குற்ற உணர்வு இல்லாமல் செய்கிறார்கள்.

அன்ன சிரார்த்தத்தில் தான் விசேஷமாக ஐந்து விதமாக பித்ருக்களுக்கு திருப்தி செய்யப்படுகிறது.
1.தேவரூபத்தில் இருப்பவர்களுக்கு அக்னியில் ஹோமத்தில் அன்னம்.
2. மனுஷரூபத்திற்கு பிராமணாளுக்கு
போஜனம் பூ லோக 
3.கிருமி ஊர்வன ரூபத்தில் இருக்குக்ம்   பிராமணாள் இலைக்குமுன் உதிரி அன்னம் விகிரன்னம்..
4.பறவை ஊபத்தில்.இருக்கும் பித்ருக்கள் பெரிய வாயஸபிண்டம்
5. ஆறு பிண்டம் பித்ருலோகத்தில் இருப்பவர்களுக்கானது.
எவுவளவு விதம்!!!!!
6 . நீர்வாழ்வன.. மீன்.ரூபத்தில் இருக்கும் பித்ருக்களுக்கு எள்ளும் தீர்த்தமும்..

வருட ஶ்ராத்தம் என்பது தந்தை காலமான மாசம் பக்ஷம் திதி மூன்றையும் கவனித்து செய்யவேண்டும்..

எந்த பக்ஷத்தில் ஶ்ராத்தம் திவசம்.வருகிறதோ அந்த பக்ஷதில் வெளியில் சாப்பிடுவது, க்ஷவரம்( முடி குறைத்தல் முகம் வழித்தல்), ஸ்த்ரீ சங்கமம் ஆகியன செய்யக் கூடாது.

வருடத்திற்கு மொத்தம் 96 (ஷன்னவதி) தர்பன ஸ்ராத்த தினங்கள் செய்யவேண்டும்.. குறைந்த பட்சம்  அமாவாசை, தக்ஷிணாயன் உத்தராயன் (ஆடி தை மாத பிறப்பு) புண்யகாலங்கள். விஷு புண்யகாலம் (சித்திரை ஐப்பசி மாத பிறப்பு),   க்ரஹண காலங்கள் ,  மஹாலய பக்ஷத்தில் அவரவர் பிதா தந்தை இறந்த திதி, மஹா பரணி , மத்யாஷ்டமி ஆகியவற்றில் கண்டிப்பாக செய்யவேண்டும்..

மிக நலிந்தவன்.. ஹிரண்ய அல்லது ஆம ஶ்ராத்தம் அதுவும் முடியாதவன் பசுமாட்டிற்கு அகத்தி கீரையும் ஒரு பொழுது சாப்பிடிவதற்கான புல்லும் போடலாம்...

புண்ய தீர்த்தங்களுக்கு என்று செல்கிறொமோ அன்று நாள் திதி ஆகியன பார்க்க வேண்டிய அவசியமில்லை அன்றே ஶ்ராத்தம் தர்பனம் செய்யலாம்

கயை , புஷ்கரம் காசி ப்ரயாகை குரு க்ஷேத்ரம் ,  சேது , ஆகிய க்ஷேத்ரங்களில் ஶ்ராத்தம் செய்ய ஒரு மஹான் பிறக்க மாட்டானா என பித்ருக்கள் காத்திருப்பார்கள்..
அவ்விடங்களில் ஶ்ராத்தம் செய்வது அவ்வளவு விசேஷமான பலனை  கொடுக்கும்.

விவாகம் முதலான சுப காரியங்களில் அன்று செய்யப்படும்.நாந்தி ஶ்ராத்தம் பூர்வாஹ்னம் முற்பகலில் செய்ய வேண்டும். அன்று எள் சேர்க்கவேண்டியதில்லை.

மற்ற ஶ்ராத்தங்களில் எள் மிக அவசியம் . அனைத்து ஶ்ராத்தங்களும் 
அபரான்னத்திலேயே..குதப காலம் எனப்படும் மத்யான்னம் 12 மணிக்கு மேல் 3 மணிக்குள் செய்வது விஷேஷம்.

சொத்து பிறிக்கப்பட்ட அல்லது தனி க்ருஹங்களில் வாழும் சகோதரர்கள் தனித் தனியாகவே ஶ்ராத்தம் செய்ய வேண்டும்.

பிதாவின் ( தந்தை) திவசத்தில்
 (தந்தை தாத்தா கொள்ளுதாத்தா) பிதா பிதாமஹன் ப்ரபிதாமஹன் ஆகிய மூன்று பேருக்கும் சேர்த்தே செய்ய வேண்டும். 
   தாத்தாவின் பெயர் தெரியாதவர் ""அந்தரிக்ஷசத்""என்றும்
கொள்ளுதாத்தாவின் பெயர் தெரியாதவர் "" திவிஷத்"" என்றும் சொல்லவேண்டும். கோத்ரம் தெரியாதவர்கள் காஶ்யப கோத்ரத்தை சொல்லவேண்டும்.

சௌர மாசத்தில் (சித்திரை வைகாசி..முதலிய) ஒரே மாசத்தில் தந்தை காலமான  இரண்டு திதி வந்தால், பின் வரும் திதியையே அனுஷ்டிக்க வேண்டும்..
இரண்டாவது திதி க்ரஹனம் வந்தால் முதல் திதியிலே செய்யவேண்டும்..

தற்போது பல இடங்களில் பார்வன  அன்ன சிரார்தம் செய்து வைக்க வசதிகள் வந்துவிட்டன.எனவே வருடத்திற்கு ஒருமுறை/இருமுறை வரும் ஶ்ராத்தங்கள் திவசங்களை அங்கு செய்யலாம்.

எந்த இடத்தில் ஸ்வாஹா, ஸ்வதா என்ற சொற்கள் ஒலிக்கின்றனவோ அவ்விடத்தில் என்னுடைய சான்னித்யம் இருக்கும் என்பது க்ருஷ்ணனின் வாக்கு..
ஸ்வாஹா என்பது தேவர்களுக்கான சொல்லாகும்..ஸ்வதா என்பது பித்ருக்களுக்கான சொல்லாகும்.

ஆகையால் ஶ்ராத்தம் செய்வது நமக்கும் தலைமுறைக்கும் நல்ல பலன்களை கொடுக்கும்..

No comments:

Post a Comment