Wednesday, August 28, 2019

Advise to brahmins by Mukkoor azhagiya singar

முக்கூர் அழகியசிங்கர்  ஆவணி ஹஸ்தம்,   முக்கூர் ராஜகோபாலாசார் என்றும், ஸந்நியாஸம் பெற்று ஸ்ரீவண் சடகோப ஸ்ரீ வேதாந்ததேசிக யதீந்த்ர மஹாதேசிகன் என்றும்,   ஸ்ரீ அஹோபில மடத்தின் நார்பற்றுநான்காவது பட்டத்தில் எழுந்தருளி, ஸ்ரீவைஷ்ணவ ஸமூஹத்தை கட்டி ஆண்டு வந்த மஹானின் திருநக்ஷத்திரம் .  இத்தினத்தில் அவர் தமது சிஷ்யகோடிகள் உய்ய அருளிச்செய்த அமுதங்களில்** சிலவற்றை நினைவில் கொணர்வோம்  3 வேளை சந்த்யா வந்தனம் செய்கின்றாயா ? இல்லை எனில் இன்றே ஆரம்பி  க்ருஹத்தில் சாளக்ராம மூர்த்தியை ஏழுந்தருள் செய்து பஞ்சகச்சத்துடன் தினமும் ஆராதனம் செய்.   மஹாலக்ஷ்மீ வரும் அந்தி வேளையில் விளக்கேற்றி ஸ்த்ரீகளை வீட்டில் இருக்க சொல்  ஏகாதசி - அசித்ர,அஸ்வமேத பாராயணமும் த்வாதசி - காடக பாராயணமும் அவஸ்யம் செய்  ப்ரதோஷ வேளையில் லக்ஷ்மீ ந்ருஸிம்ம கராவலம்பத்தை சொல்  வெள்ளிக்கிழமை பசுவிற்க்கு அகத்தி கீரை/புல் போடு  சுமையான கல்விகளுக்கு நேரம் ஒதுக்கும் நீ , சுவையான கல்விகளான வேத,பிரப ந்த,ஸ்தோத்ர பாட, ஆஹ்னீக ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய காலக்ஷேபங்களுக்கு நேரம் ஒதுக்குகின்றாயா?  பக்ஷ்க்ஷ, மாஸ , அயன , வருட தர்பணாதிகளை வேறு வேலைகளை ஒதுக்கிவிட்டு ஒழுங்காக செய்,மாளய ,அஷ்டகா & அன்வஷ்டகா செய்யாமல் விடாதே! பித்ரு சாபம் வந்து சேரும்  திருமண் இல்லாமல் பாழும் நெற்றியுடன் திரியாதே  வீட்டிற்கு வந்தவுடன் பஞ்சகச்சத்திற்கு உடனே மாறு - பர்முடாஸ் வேண்டவே வேண்டாம்  இதர ம்ருகங்களை போஷிக்கும் நீ? உன் கடமையான பசு ரக்ஷ்ணத்தை மறந்தது ஏன்?  நீராட்டதின் போது "அகமர்ஷண ஸூக்தத்தை" அவஸ்யம் சொல்  பயிர் தொழில் செய்பவர்களை வாழ்க்கையில் மதிக்க கற்று கொள்   இன்று தர்ப்பண நாளில் நிஷேதிக்கபட்ட காய்கறிகளை தளிகையில் சேர்க்காதே / இரவு பலகாரம் செய்ய கற்று கொள் / வெளியில் இன்று உணவு வேண்டாம்  இவற்றிர்க்கெல்லாம் மேலாக அடியேனுக்குப் பிடித்தது  "ஏன்டி! உன்னோட ஆத்துக்காரன் சந்தியாவந்தனம் பண்ணலைனா சாதம் போடாத! ஒரு சொம்பு ஜலத்த குடு, அவன் போயி சும்மா கொட்டிட்டானு வரட்டும். அப்படியானு வெக்கம் வந்து பண்ண ஆரம்பிப்பான்!"

No comments:

Post a Comment