Wednesday, July 31, 2019

Vishnu Sahasranama 522 to 535 in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

விஷ்ணு ஸஹஸ்ர நாமம்

522. அம்போநிதி: -அம்பஸாம் நிதி: அம்பு என்றால் நீர். நிதி: என்றால் இருப்பிடம். ஆதலால் இந்தச் சொல் கடலைக் குறிக்கிறது.பகவானை அம்போநிதி என்று குறிப்பிடுவதன் காரணம் மூன்று. 
1. கீதையில் பகவான் 'ஸரஸாம் அஸ்மி ஸாகர:' "நீர்நிலைகளுள் கடலாக இருக்கிறேன் என்கிறான். 
2, பாற்கடலில் கூர்மமாக தன்னை வைத்தான் , அம்பஸி நீயதே இதி அம்பஸாம் நிதி: தண்ணீரில் வைக்கப்பட்டது. 
3. அம்பஸ் என்ற சொல் தேவர்களையும் குறிக்கும். அவர்களுக்கு நிதி போன்றவன், அல்லது அவர்கள் அவனிடம் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

523. அனந்தாத்மா- அனந்த என்றால் ஆதிசேஷன் என்றும் எண்ணற்ற என்றும் பொருள். பகவான் ஆதிசேஷனுக்கு ஆத்மாவானவன். அனைத்துயிர்களுக்கும் அந்தராத்மாவாக இருக்கிறான்.

524.மஹோததிசய: -மஹோததி என்பது பாற்கடலைக் குறிக்கிறது. மஹோத்திசய என்றால் அதன் மேல் பள்ளிகொள்பவன் என்று பொருள். அல்லது பிரளயகாலத்தில் ஆலிலை மேல் துயில்கின்றதையும் குறிப்பதாகக் கொள்ளலாம்

525. அந்தக:- அந்தம் கரோதி இதி அந்தக: - ஸம்ஹரிப்பவன் என்று பொருள். கீதையில் 'காலோ அஸ்மி லோகக்ஷயக்ருத் ப்ரவ்ருத்த: ,' "உலகங்களை அழிக்கும் காலன் நான்" என்கிறார்.

526.அஜ:-- அகாரத்தின் பொருள் நாராயணன். (அக்ஷராணாம் அகாரோ அஸ்மி – எழுத்துக்களில் நான் ஆகாரமாக இருக்கிறேன்.- கீதை) ஜ: என்றால் அகாரமாகிய நாராயணனிடம் ஜனித்த மன்மதனின் மறுஜன்மமாகிய பிரத்யும்னன். அதாவது பகவானுடைய வ்யூஹ ரூபமாகிய பிரத்யும்னனைக் குறிக்கிறது.,

அஜ என்பதின் சாதாரண அர்த்தம் பிறவி இல்லாத என்பது. அதுவும் பொருந்தும்.

527.மஹார்ஹ: -மஹ: என்றால் பூஜை. அர்ஹ: என்றால் அருகதை உடையவர். பூஜைக்குரியவர்..

528. ஸ்வாபாவ்ய: -இயற்கையாகவே மாறுபாடற்றவர் அல்லது பூஜைக்குரியவர்

529. ஜிதாமித்ர; - அமித்திரர்கள் அதாவது நண்பர் அல்லாதவர், விரோதிகள் இவர்களை வெல்பவர். பக்தர்களின் ராகத்வேஷாதிகளான உட்பகைவரை அழிப்பவர்

530. ப்ரமோதன; -ப்ரமோதம் அதாவது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பவர். எப்போதும் ஆனந்தத்தில் இருப்பவர்.

531. – ஆனந்த: - ஆனந்த வடிவானவர். 'ஸத்யம் ஞானம் ஆனந்தம் ப்ரம்ம.' அதவது பிரம்மானந்தம்.

532. நந்தன: -பக்தர்களுக்கு ஆனந்தம் அளிப்பவர். ஏனென்றால், 
533. நந்த:- அவரேதான் ஆனந்தம்

534. ஸத்யதர்மா-உண்மையான தர்மம் ஞானம் இவற்றை உடையவர். அவருடைய தர்மமான சரணாகதி தர்மத்தை பொறுப்பாக நடத்துபவர்..

535.த்ரிவிக்கிரம: -இதன் பொருள் மூன்றடியினால் உலகத்தை வ்யாபித்தவர் என்பது. ஆனால் அடுத்த நாமம் கபிலாவதாரத்தைக் குறிப்பதால் இதன் பொருள் மூன்று வேதங்களிலும் வ்யாபித்தவ்ர் அல்லது, விழிப்பு, உறக்கம், ஆழ்ந்த தூக்கம் இம்மூன்று நிலையம் கடந்து நான்காவது நிலையான துரீயவஸ்தையில் உள்ளவர் என்று கொள்ளலாம்.

  

No comments:

Post a Comment