Monday, July 8, 2019

Vishnu Sahasranama 440 to 468 in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

விஷ்ணு ஸஹஸ்ர நாமம்-44

460. ஸுமுக: -அழகிய முகம் உள்ளவர். ராஜ்ஜியத்தை ஆள் என்று சொன்னபோதும் சரி காட்டுக்குப் போ என்று சொன்னபோதும் சரி ராமனின் முகம் அன்றலர்ந்த தாமரையை ஒத்ததாக இருந்தது என்று சொல்கிறான் கம்பன். எப்போதும் பகவானின் முகம் மலர்ந்த நகையுடன் காணப்படுகிறது. கிருஷ்ணாவதாரத்தில் அவன் முகம் மனதைக் கவரும் புன்சிரிப்பின்றி இருந்ததே இல்லை.

461. சூக்ஷ்ம:-பகவானை அணோரணீயான் மஹதோ மஹீயான் என்று வர்ணிக்கிறது உபநிஷத்.அதாவது அணுவினும் சூக்ஷ்மமானவன், (ஸர்வாந்தர்யாமியாக இருப்பதால்) ,எல்லாவற்றையும் விடப் பெரியவன். (ஸர்வவ்யாபியாக இருப்பதால் ) இந்த்ரியங்களாலும் மனதாலும் அறிய முடியாதவன் என்பதால் சூக்ஷ்ம: எனப்படுகிறான்.

462.ஸுகோஷ:- வேதமாகிய கோஷத்தை (பிரணவ சப்தம்) உடையவர் அல்லது வேதத்தால் கோஷிக்கப்படுபவர்.' ஹரி என்ற பேரரவம்,' –திருப்பாவை. ஹரி என்ற சப்தம் காதில் கேட்கும்போது மற்ற சப்தங்கள் கேட்பதில்லை. அதனால் பேரரவம் .

ஸுகோஷம் என்றால் நல்ல சப்தம் என்றும் பொருள். பகவானுக்கு வேத கோஷமும் ஆயர்பாடியில் தயிர் கடையும் சப்தமும் ஒன்றாக இருந்ததாம்.

463. ஸுகத:-ஸாதூனாம் ஸுகம் ததாதி- நல்லவர்களுக்கு சுகம் கொடுப்பவர். அஸாதூனாம் சுகம் தயதி- அல்லாதவரின் சுகத்தைக் கெடுப்பவர்.

464. ஸுஹ்ருத்- நல்ல ஹ்ருத்யம் உள்ளவர் . ஸுஹ்ருத் என்றால் காரணம் இன்றி காட்டப்படும் நட்பு. பகவான் எல்லா உயிர்களிடத்தும் எதையும் எதிர்பாராது நட்பு கொண்ட ஒரே நண்பனாக இருக்கிறார். அவர் தண்டனை கொடுப்பதும் நட்பினாலே . அதாவது நாம் திருந்த வேண்டும் என்பதற்காக. விரோதம் பாராட்டுபவர்க்குக் கூட கடைசி வரையில் திருந்த சந்தர்பம் கொடுப்பத் நட்பினாலேயே.

465. மனோஹர: - மன: ஹரதி இதி- மனதைக் கொள்ளை கொள்பவர். ராமனையும் லக்ஷ்மணனையும் குறித்து ஜனகர், திருஷ்டி சித்தாபஹாரிணௌ, கண்களையும் மனதையும் கவ்ர்கின்றவர்கள் என்று குறிப்பிடுகிறார். 
பகவான் பக்தர்கள் மனத்தைக் கவர்வதின் மூலம் அவர்களின் மற்ற ஆசைகளைப் போக்குகிறார்.

466. ஜிதக்ரோத: -சினத்தை வென்றவர். அவதாரங்களில் அவர் கோபத்தை கைக்கொள்வது போலத் தொன்றினாலயும் அது வெறும் நடிப்பே. 
467. வீரபாஹு: -பராக்கிரமம் கொண்ட தோளினன். .
468. விதாரண;-அதர்மம் செய்வோரை அழிப்பவர்.

No comments:

Post a Comment