Wednesday, July 3, 2019

Subramanya bhujangam - Experience by a devotee


சில விஷயங்கள் நமக்கு தெரியாமல் ஏதோ ஒரு காரணத்துக்காக நடக்கும். சுப்ரமண்ய புஜங்கம் கேட்டால் நல்லது என்று கேள்விப்பட்டு தினமும் காலை 6 மணிக்கு அது ஒலிக்குமாறு ஏற்பாடு செய்தேன், இது ஒரு 3 மாதங்களாக போய் கொண்டிருக்கிறது.  ஓரளவு வார்த்தைகளுக்கு மனப்பாடம் ஆகி இருக்கிறது.

நேற்று சுப்ரமண்ய புஜங்கம் பிரவசனம் கேட்கும் போது தான், இது சாதரணமில்லை, மிக பெரிய விஷயம் என்று தெரிந்து கொண்டேன். ஆசார்யாள் பக்தி ரசத்தை பிழிந்து கொடுத்து இருக்கிறார்.

ந ஜானாமி பத்யம் ந ஜானாமி கத்யம் |

சிதேகா ஷடாஸ்யா ஹ்ருதி த்யோததே மே

முகாந்நிஸ்ஸரந்தே கிரஸ்சாபி சித்ரம் ||

ஆசார்யாளுக்கு தன்னுடைய முகத்துலேர்ந்து வெளிப்பட்ட முதல் ஸ்லோகத்தை கேட்டு, "ஆஹா நான் எவ்வளவு ஸாஹஸத்தோட, தைரியத்தோடு உங்களை ஸ்தோத்ரம் பண்றேன் ன்னு வந்து நிக்கறேனே, எனக்கு ஒண்ணுமே தெரியாதே! இப்படி ஒரு ஸ்லோகம் என் வாக்கில் வந்துதே" ன்னு ஆச்சர்யப் பட்டு சொல்றார்,  "நான் உங்களை ஸ்தோத்ரம் பண்ண போறேன், ஆனா இது நான் பண்றது கிடையாது. 'அவன் அருளாலே அவன் தாள் வணங்கி' ன்னு சொல்றா மாதிரி, உங்களுடைய அருளால் எனக்கு இந்த வாக்கு வர்றது. நான் இதைக் கொண்டு உங்களை ஸ்தோத்ரிக்கிறேன்"  ன்னு சொல்றார். அதை இந்த ஸ்லோகத்துல சொல்றார்.

'ந ஜானாமி சப்தம்' எனக்கு ஒரு பதத்தைக் கூட சரியான பொருள் தெரிஞ்சு பேச தெரியாது. 'ந ஜானாமி சார்த்தம்' இது இன்ன அர்த்தம்-ன்னு தெரியாது. எனக்கு vocabulary-யும் இல்லை, semantics ம் தெரியாது. வார்த்தைகளுக்கு சரியான அர்த்தங்களும் சொல்ல தெரியாது. 'ந ஜானாமி பத்யம்' எனக்கு ஒரு கவிதை எழுதறதுக்கும் தெரியாது. யாப்பிலக்கணம் னா என்ன, என்ன rules, எவ்வளோ அக்ஷரங்கள் இருக்கணும், எவ்வளோ பாதத்துல இருக்கணும், ஹ்ரஸ்வம் னா குறில், தீர்க்கம் னா நெடில், இதெல்லாம் எப்படி அமையணும், தளை தட்டாம இருக்கணும். அப்படியெல்லாம் rules, அது ஸம்ஸ்க்ருத்துலேயும் இருக்கு. அதுலேர்ந்து தான் தமிழ்லயும் வந்து இருக்கு, அந்த rules எல்லாமும் எனக்கு தெரியாது."

"சரி, கவிதை எழுத தெரியாது, ஏதோ prose மாதிரி, 'கத்யம்'னா prose, ஸம்ஸ்ருதத்துல சூர்ணிகைன்னு சொல்றா. தண்டாகாரமா, line-ஆ சொல்லிண்டே போறது. ஷ்யாமளா தண்டகம் மாதிரி, அப்படி ஏதாவது சொல்ல தெரியுமான்னா, அது கூட எனக்கு சொல்லத் தெரியாது. எழுத்தே தெரியாதுங்கிற போது  வார்த்தைகளே தெரியாதுங்கிற போது நான் எப்படி உங்களை ஸ்தோத்திரிக்க முடியும்?" ன்னு சொல்லிட்டு,

"ஆனால் என்னுடைய மனசுல, 'மே ஹ்ருதி' என்னுடைய ஹ்ருதயத்தில், 'சிதேகா ஷடாஸ்யா' ஒரு ஆறுமுகங்களோடு கூடின ஒரு 'சித்', ஒரு ஒளி, 'த்யோததே' பிரகாசிக்கறது. ஆறுமுகங்களோடு கூடின ஒரு ஒளி, ரொம்ப நிகரற்ற ஒரு தேஜஸோட என் மனசுல பிரகாசிக்கறது. அதுனால 'முகாத்' என்னுடைய வாக்கில் இருந்து, முகத்தில் இருந்து, 'கிரஸ்சாபி சித்ரம்' ரொம்ப ஆஸ்ச்சரியமான வார்த்தைகள் எல்லாம் 'நிஸ்ஸரந்தே' வெளியில வந்து அருவி மாதிரி கொட்டறது", அப்படீன்னு சொல்றார்.

நான் முடிவு பண்ணிட்டேன், இதை நல்லா பாடம் பண்ணி திருச்செந்தூர் க்ஷேத்திரத்தில் நானும் யத்தினும் ஸ்தோத்திரம் செய்ய வேண்டும்.

அதற்கு ஆசார்யாள் அனுக்கிரகம் செய்ய வேண்டும். வீட்டில் சின்னதாக ஒரு குரு பூஜை செய்தேன்.

சங்கர பகவத் பாதாளுக்கு அநேக கோடி நமஸ்காரகங்கள்

No comments:

Post a Comment