Sunday, July 7, 2019

Rahukal,yamagandam,kuligan formula to remember easily

காலண்டரை பார்க்காமலே ராகு காலம், எம கண்டம் அறியும் வழி !

பொதுவாகவே, வெளியே செல்லும்போதோ, சுபகாரியம் செய்யும் போதோ ராகு காலம், யமகண்டம் பார்ப்பது பலருக்கும் வழக்கம்.

ஒவ்வொரு நாளுக்கும் உரிய ராகு காலம், யமகண்டத்தை எளிதாக அறிந்துகொள்ள சுலபமான வழி உண்டு. 

அதற்கு, கீழ்க்கண்ட வாக்கியத்தை முதலில் மனப்பாடம் செய்து கொள்ள வேண்டும்.

`திருநாள் சந்தடியில் வெயிலில் புறப் பட்டு விளையாடச் செல்வது ஞாயமா?'

இந்த வாக்கியம், ராகுகாலத்தினை அறிவதற்கானது. வாக்கியத்தில் உள்ள வார்த்தைகளில் முதல் எழுத்துகளை, கிழமைகளின் முதல் எழுத்தாக கொள்ளுங்கள்.

முதலில் திங்கட்கிழமையில் காலையில் 7.30 மணி முதல் 9 மணி வரை ராகுகாலம் அமையும். அதுமுதல் அடுத்தடுத்துள்ள  நேரத்திற்கு உரிய தினம் எது என்று தெரியுமா? 

திங்கள்:7.30-9.00;
சனி:9.00-10.30;
வெள்ளி: 10.30-12.00;
 புதன்:12.00-1.30;
வியாழன்:1.30-3.00;
செவ்வாய்: 3.00-4.30;
 ஞாயிறு: 4.30-6.00.

மேற்கண்டவாறு மனப்பாடம் செய்து கொண்டால் காலண்டரைப் பார்க்காமலே சட்டென்று ராகு காலம் சொல்லிவிடலாம் 

அடுத்தது, யமகண்டத்திற்கான
வாக்கியம் 

 விளையாட்டாய் புண்ணியம் செய்தாலும் திருவருளை ஞானமும் சத்தியமும் வெளிப்படுத்தும்.

யமகண்டம் வியாழக்கிழமை காலை 6 மணி முதல் 7.30 மணி வரை அமையும். இந்த வாக்கியத்தில் உள்ள முதல் எழுத்து வரிசைப்படி கிழமைகள் அடுத்தடுத்துவர, அடுத்தடுத்த 1.30 மணி நேரம் யமகண்டமாகும்.

வியாழன்: 6.00-7.30;
 புதன்: 7.30-9.00;
செவ்வாய்: 9.00-10.30;
திங்கள்: 10.30-12.00;
ஞாயிறு: 12.00-1.30;
 சனி: 1.30- 3.00;
வெள்ளி: 3.00-4.30.

என்ன... இனிமேல் ராகுகாலம், யமகண்டம் பார்ப்பது சுலபம்தானே!

No comments:

Post a Comment