Sunday, July 7, 2019

Lunar eclipse on 16.07.19

*சந்திர க்ரஹணம்*

விகாரி வருஷம், 
ஆனிமாதம் 31ந் தேதி,
16/07/.2019. செவ்வாய்க்கிழமை, பௌர்ணமி அன்று

உத்ராட நக்ஷத்திரத்தில்,
நடுஇரவு 1.32க்கு ஆரம்பித்து அதிகாலை 4.30மணிக்கு சந்திரகிரஹணம் முடிவடைகிறது.

சாந்தி (பரிகாரம்) செய்ய வேண்டிய  நக்ஷத்திரக்காரர்கள்

1. உத்ராடம், 2. திருவோணம். 3. பூராடம். 4. கிருத்திகை, 5. உத்திரம் ஆகிய நக்ஷத்திரக்காரர்கள் சாந்தி செய்து கொள்வது நல்லது.

இந்தியா நாடு முழுவதும்  சந்திர கிரகணம் தெரியும்.

இது காலங்காலமாக வேத தர்ம சாத்திரத்தின்படி  நமது மடாதிபதிகள் - பண்டிதர்கள் -  ப்ராமணர்கள் - தெய்வ பக்தியுடையவர்கள் என்போர் பலரும் கடைபிடிப்பது நம் பாரம்பரிய வழக்கமாகும்.

க்ரஹணம் ஏற்பட்டவுடன் ஸ்னானம் செய்து மந்த்ர ஜபம் செய்யலாம்.  மத்தியத்திற் தர்ப்பண, தானாதிகள் செய்து க்ரஹணம் விட்டபின் ஸ்னானம் செய்யலாம்.

க்ரஹண ஆரம்பத்திற்கு முன் 9மணிநேரம் உபவாசம் அனுஷ்டித்தல் சாஸ்த்ரிய வசனம்.

No comments:

Post a Comment