Tuesday, July 2, 2019

No rebirth

கருவரை  பிற்புகாமல் பிறவாத பேரின்பத்தை அடைய பரமசிவாகம விதியும் நன் மறையின் விதி முழுதும் ஒழிவின்றி நவிலும்,

எம்பிரான் ஞான சம்பந்த நாயனாரின் புள்ளிருக்குவேளூர் தேவாரத்தின் பதிக பலனாக சொல்லிய பதினோராவது பாடல் இதோ

"செடியாய உடல் தீர்ப்பான் தீவினைக் கோர் மருந்தாவான் பொடியாடிக் அடிமை செய்த புள்ளிருக்கு வேளூரை கடியார்ந்த பொழிற்காழி கவுணியன் சம்பந்தன் சொல் மடியாது சொல்ல வல்லார்க்கு இல்லையாம் மறுபிறப்பே"

சம்பந்தப் பெருமான் இந்த தேவாரத்தை, வைத்தியநாதசுவாமியிடம் அடிமை செய்து பாடும் பொழுது மீண்டும் கருவில் நுழைய மாட்டோம் என்று சொல்கிறார்.

பெரும்பெரும் சிவஞானிகள் எல்லாம் கருவில் நுழைவதை அஞ்சி புழுவாய் துடிக்கின்றனர். காரணம் ஒரு நாள் உயிர் என்று கர்பத்தில் சொல்லப்படும் அந்த உயிரை சுற்றி ஏகப்பட்ட கிருமிகள் மொய்த்துக் கொண்டிருக்கும். 

அந்த உயிருக்கு அது மிகவும் வேதனையாக இருக்கும். ஏழு நாள் என சொல்லப்படும் கர்ப்பத்தில் இருக்கும் உயிரை வளரவிடாமல் சுற்றிலும் அவ்வளவு கிருமிகள் தின்று கொண்டிருக்கும் அது மிகவும் நரக வேதனை ஆகும். 

விஞ்ஞான உண்மையும் இதுவேயாகும்."மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து ஈனம் இல் கிருமிச் செருவினில் பிழைத்தும்"என்று மாணிக்கவாசகப் பெருமானும் திருவாசகத்தில் போற்றித் திருவகவலில் குறிப்பிடுகிறார்.

 கருப்பத்தில் வாழ்வது என்பது சிவாகமங்களில் ரௌராவதி நரகம் போன்று மிகவும் துன்பமாக சொல்லப்பட்டுள்ளது. வாந்தி மலம் உணவு அனைத்துமே கர்ப்பப்பையில் தான் எவ்வளவு கேவலம் என்று சிந்தித்துப் பாருங்கள்.  


சத்தியபடியும் வேதங்கள் விதிக்கப்பட்ட தர்மங்களின் படி வாழ்ந்தவனும், நரகத்திற்கு செல்லாமல்,பஞ்சாக்னி வித்தையில் சுவர்க்க புவனங்கள் எல்லாம் அனுபவித்து, 

ஐந்தாவது ஆக பூமியில் பிறக்கும் பொழுது கர்ப்ப வாசத்தில் ரௌராவதி நரக துன்பங்களை அனுபவித்தே ஆக வேண்டும். 

அதனால் தான் பெரும் ஞானிகளே பிறப்பதற்கு புழுவாய் துடிக்கின்றனர். உயிர் கர்ப்பத்தில் இருக்கும் வரை, இந்தக் கேவலமான பிறப்பை எவ்வாறாவது சிவனை வணங்கி கடப்பேன் என்று உறுதியாக இருக்கும்.

 ஆனால் இந்த பூமியில் ஜனனம் ஆனவுடன் எல்லாவற்றையும் மறந்து பிரார்த்த கர்மா படி  இன்ப துன்பத்தை நுகர்கிறது. அதுபோல் அந்த உயிர் கர்ப்பத்தில் இருந்து யோனி துவாரம் வழியாக வெளிவரும் போது கோடி ஊசியை ஒன்றாக குத்தினால் எவ்வளவு ரணமோ அந்த ரணம்  இருக்கும். 

இதுவெல்லாம் பூமிக்கு வந்த உடன் நாம் மறந்துவிடுவோம். இவ்வளவு துன்பமாக சொல்லப்பட்ட இந்த கர்ப்பத்தில் வந்து மீண்டும் பிறக்காமல் இருக்க 

ஞானசம்பந்தப் பெருமான் எளிய வழியாக இந்த தேவாரத்தைப் பாடுபவர்களுக்கு மறுபிறப்பு கிடையாது என்கிறார் ஆதலால் அடியார் பெருமக்கள்,

 இந்தப் பதிகத்தைப் பாடி, மீண்டும் கருவுக்குள் புகாமல் இறைவன் திருவடியை அடைந்து விடலாம். என்றும் அடியார்கள் திருவடியில் சம்பந்த சரணாலயன்.....

No comments:

Post a Comment