Monday, July 29, 2019

Mole in Queens thigh- Story of Vikramaditya

விக்ரமாதித்யன் கதை J K SIVAN

''ஸ ஸே மி ரா'' பைத்தியம்

இதுவரை நடந்த பூர்வ கதை. உஜ்ஜையினி ராஜா போஜன் காட்டுக்கு வேட்டையாட போகிறான். அங்கே சரவணபட்டனின் வயலில் பசி தாகம் தீர்த்துக் கொள்ளும்போது பறவைகளை விரட்ட ஒரு பரணில் இருக்கும்போது சரவண பட்டன் குணம் மாறுபடுவதை கவனித்து அவன் வயலை வாங்கி, தோண்டி, அடியில் 32 படி கொண்ட சிம்மாசனம் ஒன்று கண்டு அதை தனது அரண்மனைக்கு கொண்டு செல்லும்போது, போஜனின் மந்திரி நந்தன் என்கிற ராஜாவின் மகன் ஜெயபாலன், மந்திரி மகன் அறிவுரை கேட்காமல் காட்டில் பைத்தியமாகி ''ஸஸேமிரா'' என்று கத்திக்கொண்டு அலைவதை பார்த்து அரண்மனைக்கு தூக்கி வந்து அவனை குணமாக்கும் வைத்தியனுக்கு பாதி ராஜ்ஜியம் என்று தண்டோரா போட, ஏற்கனவே தனது ராஜகுரு நடத்தையை சந்தேகம் கொண்டு அவரை கொன்றுவிட உத்தரவிட்டு, அவரை ரகசியமாக மந்திரி பஹுஸ்ருதன் காப்பாற்றி, அவரிடம் நாட்டில் நடந்த விஷயங்களை சொல்கிறான் மந்திரி பஹுஸ்ருதன். இனி மேலே செல்லுவோம்:

''குருநாதா, ராஜா நந்தன், தான் தவறாக உங்கள் மேல் சந்தேகப்பட்டு நீங்கள் கொல்லப்பட்டதற்காக வருத்தப்படுகிறார். அவர் மகன் ஜெயபாலன் சித்த சுவாதீனம் இழந்து அவனை குணமாக்க அலைகிறார்.''

ராஜகுரு சாரதானந்தர், ''பஹுஸ்ருதா, '' நீ நந்தனிட, உனக்கு உறவுக்கார ஒரு பெண் இருக்கிறாள் அவள் ஜெயபாலனை குணமாக்கிவிடுவாள் என்று சொல்லி ஜெயபாலனை இங்கே அழைத்து வா. நான் எப்படியாவது அவனை குணப்படுத்த முயல்கிறேன் ''

பஹுஸ்ருதன் சொன்னதை கேட்டு ராஜா நந்தன் மகிழ்ந்தான். ஜெயபாலனை அழைத்துக்கொண்டு மந்திரி வீட்டுக்கு சென்றான். ஒரு பெரிய அறை . நடுவே ஒரு படுதா, திரை. அதற்கு முன்னால் ஜெயபாலனை உட்காரவைத்து திரைக்கு பின்னால் ராஜகுரு சாரதானந்தர் இருந்தார். ஜெயபாலன் வாய் ஓயாமல் ''ஸஸேமிரா'' என்று வழக்கம்போல் கத்திக்கொண்டே இருந்தான்?

ராஜகுரு பகவானை தியானித்து நான்கு ஸ்லோகங்கள் உரக்க சொல்கிறார். ஒவ்வொரு ஸ்லோகமும் ஸ , ஸே , மி, ரா என்று தொடங்குபவை.

முதல் சுலோகமான Sadbhavam pratipannanam vanchane ke vidaghata? ankam aruhya suptanam, hantuh kim nama paurusham? 'ஸத் பாவம் ப்ரதிபன்னநாம் வஞ்சனே கே விதாகதா? அங்கம் ஆருஹ்ய சுப்தனம் ஹந்து, கிம் நாம புருஷம்? ஸ என்று தொடங்கும் இந்த ஸ்லோகத்தின் அர்த்தம் நட்பையும், நம்பிக்கையையும் எத்தனை உயர்வாகப் போற்ற வேண்டும் என்று சுட்டிக்காட்டுகிறது. நயவஞ்சகப்புலி அவன் கரடியின் பாதுகாப்பில் தூங்கும்போது ''ஹி கரடி, நீயும் நானும் விலங்குகள். மனிதனை நம்பமுடியாது. அவனை கீழே தள்ளு. நான் தின்று பசியாறி சென்றுவிடுகிறேன் " என்று சொல்ல. என்னை தஞ்சமடைந்தவனுக்கு நான் துரோகம் செய்யமாட்டேன் என்கிறது கரடி. பிறகுகரடி தூங்கும்போது அதை கீழே தள்ளு நான் தின்றுவிட்டு செல்கிறேன். நீயும் பயமின்றி போகலாம் என்று சொல்ல, நயவஞ்சக புலியின் பேச்சை கேட்டு கரடிக்கு துரோகம் செய்து கரடியால் சபிக்கப்பட்டு அல்லவோ இந்த நிலை அடைந்தான். இந்த ஸ்லோகத்தை கேட்டதும் ஜெயபாலன் ஸஸேமிரா என்று கத்துவதை விட்டு ''ஸேமிரா ஸேமிரா'' என்று பிதற்றுகிறான்.

அடுத்து இன்னொரு ஸ்லோகம் ஸே என்கிற எழுத்தில் ஆரம்பிக்கிறது. அதை சாரதானந்தர் சொல்கிறார்.

Setum gatva samudrasya ganga-sagar-sangame, Brahmahatya pramuchyate, mitra-droha na muchyte! ஸேதும் கத்வா ஸமுத்ரஸ்ய கங்கா சாகர சங்கமே, ப்ரம்மஹத்யா பிரமுச்யதே , மித்ர த்ரோஹ ந முச்யதே. துரோகம் செய்வது, பிராமணனை கொள்வதால் சேரும் பாவம், நண்பனுக்கு துரோகம் செய்வதால் நேரும் துன்பம் தீர.. அதை கேட்ட ஜெயபாலன் பிறகு '' மி ரா'' என்று மட்டும் விடாமல் கத்துகிறான்.

ராஜகுரு அடுத்து மி என்று துவங்கும் ஸ்லோகம் சொல்கிறார்:

Mitra-drohi, kritaghnas cha yas cha vishvas-ghatakam, Trayas te narakam yanti, yad Chandra-divakarau. ,மித்ர த்ரோஹி, க்ரிதக்னஸ், ச யஸ் ச விஷ்வஸ் கடகம், த்ரயஸ் தே நரகம் யந்தி, யத் சந்திரதிவாகரௌ - சூர்ய சந்திரர்கள் உள்ளவரை நட்புத்ரோகம் செய்தவனுக்கு நரகம் கிடைப்பதை பற்றி அதை தவிர்க்கும் வழி சொல்கிறார்.
நான் சொல்லாமலேயே நீங்கள் இதைக் கேட்ட ஜெயபாலன் ரா ரா என்று மட்டும் கத்திக்கொண்டே இருந்தான் என்று சொல்வீர்கள்.

கடைசியாக சாரதானந்தர் கூறிய ஸ்லோகம் ரா வில் ஆரம்பித்தது.

Rajan tvam asya putrasya yadi kalyanam icchhasi,Daanam dehi dvijatinam, tat hita durgati varanam. ராஜன் தவம் ஆசிய புத்ரஸ்ய யாடி கல்யாணம் இச்சசி, தானம் தேஹி த்வீஜாதினம் தத் ஹித துர்கதி வரணம் - அடே அரசகுமாரா இனி உன் துர்புத்திகள் நீங்கி, நீ விரும்பியதை அடைய நிறைய தான தர்மங்கள் செய்து நிவாரணம் பெறு '' என்கிறார். ஜெயபாலன் இனி கத்துவதை நிறுத்திவிட்டான். துரோகத்தையும், கடமையையும், சத்திய மீறலையும் குறித்துச் சொல்லப்பட்டவை அவனை திருத்தின. நேரில் பார்த்ததுபோல ஜெயபாலன் கரடியிடம் சரணடைந்தது, புலியின் நயவஞ்சகம், கரடிக்கு அவன் செய்த துரோகம், கரடியின் சாபம் எல்லாவற்றையும் ராஜகுரு எடுத்து சொல்கிறார். ஜெயபாலன் அதிர்ச்சி அடைகிறான். பித்தம் தெளிந்தது. ராஜா நந்தனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. திரைக்கு பின்னால் இருந்த பஹுஸ்ருதன் உருவினள் பெண் ஒருத்தியால் தனது மகன் குணமடைந்து ராஜா நந்தன் ''பெண்ணே, என் ராஜ்யத்தில் உனக்கு பாதி நான் சொன்னபடியே தருகிறேன்'' என்றான்.

குரல் திரையின் பின்னாலிருந்து பதில் சொல்லியது. 'மஹாராஜா, நான் பாதி ராஜ்ஜியம் எதிர்பார்த்து உதவவில்லை. ஒரு உண்மையான பிரஜையின் கடமையாக செய்தேன் ''

''ஆஹா, உன்னால் எப்படி காட்டில் நடந்ததை அப்படியே நேரில் பார்த்தது போல் சொல்லமுடிந்தது?'' என்று ஜெயபாலன் கேட்க,
'நான் வழிபடும் எனது தெய்வத்தின் அருள். ஸரஸ்வதி என் நாவில் வீற்றிருந்து அருள்புரிந்ததால் தான் மகாராணியின் தொடையில் இருக்கும் மச்சத்தையும் ஞான திருஷ்டியால் தெரிந்துகொள்ளமுடிந்தது'' என்று சொல்லிக்கொண்டே திரையின் பின்னாலிருந்து ராஜகுரு சாரதானந்தர் வெளியே வந்தார்.

ராஜா நந்தன் ஆச்சர்யம், அதிர்ச்சி மகிழ்ச்சி அடைந்தவனாக அவர் பாதம் தொட்டு தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்கிறான். மந்திரி பஹூஸ்ருதன் உண்மை வெல்லும், ஒருநாள் வெளிப்படும் என்பதால் அவரை உயிர் பிழைக்க வைத்ததை சொல்கிறான்.

''மந்திரி, நல்லவேளை, நல்லவேலை செய்தீர் கள். ராஜகுருவை கொன்ற பாவத்திற்கு ப்ரம்மஹத்தி தோஷம் பெறாமல் காப்பாற்றி னீர்கள். என் மகன் மறுவாழ்வு பெற ராஜகுரு உதவினார் என்று நிறைய சன்மானங்கள் கொடுத்தான்.

போஜராஜனின் மந்திரி இந்த கதையை சொல்லி, எல்லோரும் விக்ரமாதித்யன் சிம்மாசனத்தை தூக்கிக்கொண்டு அரண்மனை சென்றார்கள்.

மேற்கண்ட பஹூசுருதனின் கதையை நீதிவாக்கிய மந்திரி சொல்லி முடிக்க, போஜராஜனும் கதையில் மகிழ்ந்து போய் மந்திரிக்கு பலவிதமான சன்மானங்கள் தந்து சிறப்பித்தான். பின் எல்லோரும் சிம்மாசனத்துடன் அரண்மனைக்குப் புறப்பட்டார்கள். இனிமேல் தான் படிகளில் உள்ள பெண் பொம்மைகள் கதை சொல்லும்.

  

No comments:

Post a Comment