Monday, July 15, 2019

Dont leave sandhyavandanam

ஸந்த்யாவந்தனத்தை எவர்கள் 
எப்போதும் விருப்பத்துடன் விடாமல் ( விடக்கூடாது என்கின்ற நிஷ்டையுடன்) 
செய்கின்றனரோ அவர்கள் எல்லாவிதபாபங்களில் இருந்தும் விடுபட்டு ஶாஶ்வதமான ப்ரஹ்மலோகத்திற்கு ( மோக்ஷத்திற்கு) செல்வர்..सन्ध्यामुपासते ये तु सततं शंसितव्रताः।
विधूतपापास्ते यान्ति ब्रह्मलोकं सनातनम् ।।
यमः आह्निकभास्करे
வீட்டில் செய்யப்படும் சந்த்யாவந்தனம் செய்வதனால் ஒரு மடங்கும்,
பசுக்கொட்டிலில் செய்வதனால் பத்து மடங்கும்,
நதியில் செய்வதனால் லக்ஷம் மடங்கும், விஷ்ணு ஸந்நிதியில் 
எண்ணற்ற மடங்கும் பலன் ஏற்படும்.गृहेत्वेकगुणा संध्या गोष्ठे दशगुणास्मृता।
शतसाहस्रिका नद्यां अनन्ता विष्णुसन्निधौ।।व्यासः
ஸந்த்யாவந்தனம் செய்யாதவன் 
எப்போதும் ஶுத்தமற்றவன் ஆவான் .
வேறு நித்யகர்மாக்களில் அவனுக்கு அர்ஹதை இல்லை..
வேறு ஏதேனும் கர்மாக்கள் ( நித்ய, நைமித்திக , காம்ய,)
செய்தாலும் அது பலனை அளிக்காது..सन्ध्याहिनोsशुचिर्नित्यमर्हस्सर्वकर्मसु ।
यदन्यत् कुरुते कर्म न तस्य फलभाग्भवेत् ।।
दक्षवचनम् आह्निकभास्करे
ப்ரஹ்மாவின் ஹ்ருதயம் விஷ்ணு
விஷ்ணுவின் ஹ்ருதயம் ஶிவன்
ஶிவனின் ஹ்ருதயம் ஸந்த்யை
ஆதலால் ப்ராஹ்மணர்களால்
ஸந்த்யாவந்தனம் எப்போதும் அனிஷ்டிக்கப்படவேண்டும்..ब्रह्मणो हृदयं विष्णुः 
विष्णोश्च हृदयं शिवः।
शिवस्य हृदयं सन्ध्या
तेनोपास्याद्विजोत्तमैः।
संवर्त वचनम् । दीक्षितीये।।
  

No comments:

Post a Comment