Tuesday, July 16, 2019

Certain dos & donts about eclipse

க்ரஹணத்தை பற்றி சிறிது வெளியிடுகிறேன். விரும்பியோர் பகிர்ந்துகொள்ளுங்கள்.

सूर्यग्रहे नाश्नीयात् पूर्वं यामचतुष्टयम् ।

चन्द्रग्रहे तु यामांस्त्रीन् बालवृद्धातुरैर्विना।।

"ஸூர்யக்ரஹே து நாஶ்னீயாத் பூர்வம் யாமசதுஷ்டயம்| சந்த்ரக்ரஹே து யாமாம்ஸ்த்ரீன் பாலவ்ருத்தாதுரைர்வினா||"


க்ரஹணம் ஸூர்ய,சந்த்ர க்ரஹணம் என இருவிதம்.

ஸூர்யக்ரஹணம் ஏற்படுவதற்கு முன் நான்கு யாமங்களும் சந்த்ரக்ரஹணத்தில் மூன்று யாமங்களும் உணவு உட்கொள்ளக்கூடாது.

ஒரு யாமம் என்பது மூன்று மணி நேரங்களை கொண்டது.தற்போது வரும் சந்த்ரக்ரஹணமானது இரவு 01.32 நிமிடங்களுக்கு ஆரம்பிப்பதால் மாலை  5-00 க்குள் போஜனங்களை முடித்துக்கொள்ளவேண்டும்.இது அனைவருக்கும் பொதுவானதா என்றால் "பால வ்ருத்த ஆதுரை:வினா"என்று ஸமாதானம் அளிக்கிறது ஸ்ம்ருதி.அதாவது சிறுவர்கள், முதியவர்கள், நோயுற்றோர் ஆகியோருக்கு விதிவிலக்கு அளிக்கப்படுகிறது.சரி அப்படியானால் விதிவிலக்கு அளிக்கப்பட்டோர் க்ரஹணஸமயத்திலும் சாப்பிடலாமா?என்றால் க்ரஹணத்திற்கு முதல் வரை மட்டுமே அவர்களுக்கு விலக்கு. இரவு 9.30 முதல் யாமத்திலிருந்து அவர்களும் எல்லோரைப்போலவும் இருக்கவேண்டும். இதென்ன அய்யா அவர்களும் மனிதர்கள் தானே ?என்னைப்போலவே அவர்களுக்கும் தோஷம் வராதா என்றால் பேருந்தில் அனைவருக்கும் ஒரே கட்டணம் என்றாலும் ஊனமுற்றோர் முதியோர் மாணவர்களுக்கு குறைந்த கட்டணச்சலுகை இருப்பது போன்று இதை புரிந்தகொள்ளவேண்டும்.இங்கே ஶாஸ்த்ரம் வளைந்துகொடுக்கவில்லை.அனுக்ரஹித்து இருக்கிறது.

         தொடரும்

 ஒருநாளைக்கு பகலும் இரவும் ஆக அறுபது நாழிகைகள். எல்லா நாட்களிலும் இவை ஸரிஸமமாக இருப்பதில்லை. சிலமாதங்களில் பகலும் சிலமாதங்களில் இரவும் அதிகரிக்கும். இந்த க்ரீஷ்மருதுவில் பகற்பொழுது அதிகம். இரவு சற்றே குறைவு.

60:00-31:14=28:46

அஹஸ் எனப்படும் பகற்பொழுதை அறுபது நாழிகைகளில் கழித்துள்ளோம்.

பகற்பொழுதின் ஒருயாமத்திற்கு 0:18:30விநாழிகைகள் அதிகமாகவும் இரவில் ௸விநாழிகைகள் குறைவாகவும் வரும்.

பகலின் ஒரு யாமத்திற்கு மூன்று மணிநேரம் ஏழரை நிமிடங்கள்.

இரவில் 2:52:30நிமிடங்கள். இதை வைத்து கணக்கிட்டு கொள்ளுங்கள்.



உணவு உட்கொள்ளுதல் என்பதை ஏன் தடுக்கிறது தர்மஶாஸ்த்ரம் என்றால் அதற்கு பல காரணங்களை விஜ்ஞானத்தோடு ஸம்பந்தப்படுத்தி கூறுவர். அதில் எனக்கு உடன்பாடு இல்லை. இதை நாம் நவீன விஜ்ஞானத்தோடு ஸம்பந்தப்படுத்த தேவை என்ன?அப்படிச்செய்வதால் ருஷிவாக்யங்களையும் முன்னோர் வாக்யங்களை பரிசோதிப்பதோடு அல்லாமல்  பகுத்தறிவு என சொல்லுக்கொண்டு திரிவோருக்கும் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்படுகிறோம்.நமக்கு அதெல்லாம் நேரத்தை வீண்செய்யும் வேலைகள்.

எல்லா விஷயத்தையும் நவீன விஜ்ஞானத்தோடு பொருத்திப்பார்ப்பது தேவையற்ற செயல்.அம்மா சாதம் ஊட்டும்போது "நிலா நிலா ஓடிவா"என்றால் அதெப்படி இங்கே வரும்.நாமல்லவா போகவேண்டும் என்பர் அரைகுறை அறிவாளிகள். அங்கே நிலாவை வரவழைப்பது அல்ல  முக்யத்வம்.குழந்தைக்கு அன்னத்தை ஊட்டுவதல்லவா முக்யம்.இதை புரிந்துகொள்ளாதவர் பகுந்தறிந்து ப்ரயோஜனம்.

 

பாலர்களுக்கும் வ்ருத்தர்களுக்கும் நோயாளிகளுக்கும் (கர்ப்பிணிகளையும் சேர்த்து)முதல் யாமத்திலிருந்து ஆஹார நியமம் ஆரம்பிக்கிறது. தோராயமாக இரவு 8.30 மணியில் இருந்து நியமம் ஆரம்பம்.

சரி முன்கூட்டியே சமைத்தவைக்கலாமா?சமைத்துவைக்கப்பட்ட பண்டங்களின் நிலை என்ன?

க்ரஹணகாலத்தில் உண்ணத்தடைபோன்றே தற்சமயத்தில் ஸித்தமாக இருக்கும் உணவும் த்யாஜ்யம்.சாதம்,குழம்பு, ரஸம்,கறிவகைகளும் இதில் அடக்கம்.

ஆனால்

आरनालं पयस्तक्रं दधिस्नेहाज्यपाचितम् ।

मणिकस्थोदकं चैव न दुष्येद्राहुसूतके ।। "ஆரநாலம் பயஸ்தக்ரம் ததி ஸ்நேஹாஜ்யபாசிதம்|மணிகஸ்தோதகம் சைவ ந  துஷ்யேத் ராஹுஸூதகே||

*அன்னம் பக்வமிஹ த்யாஜ்யம் ஸ்நானம் ஸவஸனம் க்ரஹே|வாரி தக்ராரநாலாதி திலதர்ப்பைர் ந துஷ்யதி"

என்கிறது "ஜ்யோதிர் நிபந்தமும் மன்வர்த்த முக்தாவளியும்".நிறைய தண்ணீர் விட்டு தயாரிக்கப்பட்ட கஞ்சிக்கு ஆரநாலம் எனப்பெயர்.பால்,மோர் ,நிறைய நெய்விட்டு தயாரிக்கப்படும் பதார்த்தங்கள் ஆகியவற்றில் தர்ப்பை போட்டு வைத்திருந்தால் க்ரஹணத்திற்கு பின்னர் மீண்டும் உபயோகிக்கலாம்* .

நீரை நிரப்ப உபயோகப்படுத்தும் பெரிய பாத்திரங்களுக்கே "மணிகம்"என்று பெயர்.

அவைகளுக்கும் தோஷமில்லை. ஆகவே வாட்டர் டேங்க் தண்ணீரை வீண் செய்யவேண்டாம்.

க்ரஹணத்தின் ஆரம்பத்திலும் முடிவிலும் ஸ்நானம் செய்யவேண்டும்.

சாதாரணமாக இரவில் கட்டாயம் ஏற்பட்டால் ஒழிய ஸ்நானம் செய்யக்கூடாது. ஆனால் க்ரஹணத்தில் இரவானாலும் ஸ்நானம் அவஶ்யம். 

நீரை பொறுத்து பலன் அதிகரிக்கிறது.

மார்க்கண்டேயர் கூறுகிறார்:


शीतमुष्णोदकात्पुण्यं

अपराख्यं परोदकात् ।

भूमिष्ठमुद्धृतात्पुण्यं

ततः प्रस्रवणोदकम् ।।

ततोपिसारसं पुण्यं 

ततः पुण्यं नदीजलम् ।

तीर्थतोयं ततः पुण्यं

महानद्याम्बु पावनम।।

तत्स्थोपि गङ्गाम्बु

पुण्यंपुण्यतथाम्बुधिः।।


"ஶீதமுஷ்ணோதகாத் புண்யம் அபாரக்யம் பரோதகாத்|பூமிஷ்டம் உத்த்ருதாத் புண்யம் தத:ப்ரஸ்ரவணோதகம்||

ததோபி ஸாரஸம் புண்யம் தத:புண்யம் நதீஜலம்|தீர்த்ததோயம்

தத:புண்யம் மஹாநத்யம்பு பாவனம்||

தத:ஸ்தோபி கங்காம்பு புண்யம் புண்யஸ்ததோம்புதி:"


வென்னீரை காட்டிலும் தண்ணீரும் பிறர் கொணர்ந்ததை காட்டிலும் தான் கொணர்ந்ததும் அதை காட்டிலும் பூமியில் இருப்பதும் அதைக்காட்டிலும் குட்டையும் அதைக்காட்டிலும் ஸரஸ்ஸும் அதைக்காட்டிலும் நதியும்  புண்யதீர்த்தமும் அதைக்காட்டிலும் கங்கையும் அதைக்காட்டிலும் ஸமுத்ரமும் அதிக புண்யங்களை தருபவை. முடிந்ததை உபயோகப்படுத்திக்கொள்ளலாமே!

     தொடரும்

க்ரஹண விஷயங்கள் 

हेमाद्रिवचनम् 

ग्रस्यमाने भवेत् स्नानं ग्रस्ते होमं विधीयते।

मुच्यमाने भवेद्दानं मुक्ते स्नानं विधीयते ।।

ஹேமாத்ரி வசனம்:

"க்ரஸ்யமானே பவேத் ஸ்நானம் க்ரஸ்தே ஹோமம் விதீயதே|முச்யமானே பவேத் தானம் முக்தே ஸ்நானம்

 விதீயதே"||

க்ரஹண ஆரம்பத்தில் ஸ்நானம் செய்யவேண்டும். மத்யகாலத்தில் ஹோமங்கள் செய்வேண்டும்.விடும் காலத்தில் தானங்கள் செய்யவேண்டும். விட்டபின் ஸ்நானம் செய்யவேண்டும்.

मुक्तौ यस्तु न कुर्वीत स्नानं ग्रहणसूतके ।

स सूतकी भवेत्तावद्यावत्स्यादपरो ग्रहः ।।

"முக்தௌ யஸ்து ந குர்வீத ஸ்நானம் க்ரஹணஸூதகே| ஸ ஸூதகீ பவேத் தாவத் யாவத் ஸ்யாத் அபரோ க்ரஹ:"||


க்ரஹணம் விட்டபின் எவர் ஸ்நானம் செய்யவில்லையோ அவர் அடுத்த க்ரஹணம் வரை ஸூதகீ(தீட்டுள்ளவர்)ஆகவே கருதப்படுவார்.


ஒருக்கால் பிறப்பு தீட்டு, இறப்பு தீட்டு அனுஸரித்துகொண்டிருப்போர்க்கு க்ரஹணகாலத்தில் எப்படி நியமம்?

௸தீட்டு உள்ளவர்களாக இருந்தாலும்கூட க்ரஹண ஸமயத்தில் அவர்களுக்கு தீட்டில்லை அவர்களும் கூட க்ரஹணத்தை அனுஷ்டிக்க வேண்டும்

பஹிஷ்டா ஸ்த்ரீ விஷயத்தில் கூட ஸ்நானம் விதிக்கப்படுகிறது.அனைவரும் உபயோகிக்கிம் பாத்ரமில்லாபல் வேறு பாத்திரத்தில் தீர்த்தம் கொண்டு ஸ்நானம் செய்யவேண்டும். அவர்கள் ஸ்நானம் ஆனபின் வஸ்த்ரங்களை பிழியக்கூடாது. ஶரீர உஷ்ணத்தினாலேயே காயவைத்துக்கொள்ள வேண்டும்.


தர்ப்பண விஷயம்.

இதில் இருவேறு கருத்துக்கள் உள்ளன.

त्रिदशाः स्पर्शसमये तृप्यन्ति पितरस्तथा।

मनुष्यामध्यकालेतु मोक्षकालेतु राक्षसाः

த்ரிதஶா:ஸ்பர்ஶஸமயே த்ருப்யந்தி பிதரஸ்ததா|

மனுஷ்யா மத்யே காலேது  மோக்ஷகாலேது ராக்ஷஸா:||

எனக்கூறப்பட்டுள்ளது. ஆகவே க்ரஹண ஸ்பர்ஶ ஸமயத்திலேயே தர்ப்பணம் செய்யவேண்டும் என்பது ஒரு நிலை.அப்படியானால் இந்தமுறை 02:54 pmமுதல் 03:59am வரை தர்பணத்திற்கான காலம்.


ஆனால்  अपरपक्षे पोत्र्याणि அபர பக்ஷே பித்ர்யாணி என்கிறது ஆபஸ்தம்ப க்ருஹ்யஸூத்ரம்.அதனால் க்ருஷ்ணபக்ஷத்தில் தர்ப்பிக்க வேண்டும் என்பது ஒருநிலை.இது  ஆசாரத்திலும் உள்ளது. இதை அனுஸரிப்போர் 02:52am முதல் 03:49am வரையிலான நேரத்தில் செய்யவேண்டும்.


க்ரஹணகாலத்தில் பித்ரு கார்யங்களை (அதிகாரம் உள்ளோர்)செய்யாவிடில்

चन्द्रसूर्यग्रहे यस्तु श्राद्धं विधिवदाचरेत् ।

अकुर्वाणस्तु नास्तिक्यात् पङ्के गौरिव सीदति।।

சந்த்ரஸூர்யக்ரஹே யஸ்து ஶ்ராத்தம் விதிவதாசரேத்|

அகுர்வாணஸ்து நாஸ்திக்யாத் பங்கே கௌரிவ ஸீததி||


சேற்றில் மாட்டிக்கொண்ட பசுபோல போல பாபத்திலிருந்து விடபடமாட்டான் என்கிறது மஹாபாரதம்.
வேதிக்ரவி - ஸ்ரீ புவனேஸ்வரி வேதிக் சென்டர் - 16.07.19 மாலை 4.00

ராம் ராம் ராம ராம ராம

No comments:

Post a Comment