Thursday, June 20, 2019

why we have to visit Saints & Mahatmas? - Periyavaa

மகான்களை தரிசிப்பதால் நமக்கு நன்மை கிடைக்குமா... ?

பாவ புண்ணியங்களின் அடிப்படையில் தான் வாழ்வு நடைபெறுகிறது என்பதால் மகான்களை தரிசிப்பதால் மட்டும் அது மாறி விடப் போகிறதா என்று பலர் நினைக்கிறார்கள்.

பாவ புண்ணியங்களை மகான்கள் மாற்றுவது இல்லை என்றே வைத்துக் கொள்வோம்.

ஒருவர் ஐந்தாயிரம் ரூபாய்க்கு சில்லறை நாணயங்களாக வைத்திருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள் அது ஒரு மூட்டை மாதிரி இருக்கும் . அதை சுமப்பது கையாள்வது எல்லாமே கஷ்டம். அவர் படுகிற பாட்டைப் பார்த்து விட்டு ஒருவர் சில்லறையைத் தாம் வாங்கிக் கொண்டு புது ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக 5ஐ தருகிறார் .

என்ன நடந்தது ..? 
இப்போதும் அதே ஐந்தாயிரம் தான் அவரிடம் இருக்கிறது 
ஆனால் சுமை தெரியவில்லை ..! பாரம் குறைந்து விட்டது ..!! 
இதைத்தான் மகான்கள் செய்கிறார்கள்...!!

கர்மவினை நம்மிடம் தான் உள்ளது அனால் நாம் கஷ்டப்படாத படி நம் மனோ நிலையை ஞானிகள் மாற்றி விடுகிறார்கள். நமது ஆத்ம சக்தியை பலப் படுத்தி விடுகிறார்கள்.

பாவ புண்ணியங்களில் சம நிலை எய்திய மகான்கள் சந்நிதியில் நமது பாவ வினை ஒழியும் என்பது மற்றுமோர் அசைக்க முடியாத உண்மை அவர்கள் சமாதியிலும் கூட இன்றும் இது நிகழ்கிறது ..!

இதை வார்த்தைகளால் சொன்னால் புரியாது .. 
அனுபவத்தில் தான் புரிந்து கொள்ள முடியும் ..!
🚩🕉🚩🕉🚩🕉🚩🕉🚩🕉

No comments:

Post a Comment