Wednesday, June 26, 2019

Vishnu Sahasranama 434 to 448 in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

விஷ்ணுஸஹஸ்ரநாமம் -42

434. அர்த்த:-எல்லோராலும் விரும்பப்படுபவர். அர்த் என்றால் அடைய விரும்புதல். அடையய் விரும்பும் பரமார்த்தமாக இருக்கிறவர்.

435. அனர்த்த:- தாம் விரும்பத் தக்க பயன் இன்று இல்லாதவர். அல்லது அற்ப பலன்களை விரும்புவோரால் வேண்டப்படாதவர்.

'நானவாப்தம் அவாப்தவ்யம்,' (ப.கீ. 3.22) "எனக்கு அடைய வேண்டியது ஒன்றும் இல்லை. "

436. மஹாகோச: -கோச என்றால் வைப்பு நிதி (treasure) என்று பொருள். பகவான்தான் உண்மையான நிதி. "அஸ்தி மே ஹஸ்தி சைலாக்ரே வஸ்து பைதாமஹம் தனம்,' என் உண்மையான தநம் அத்திகிரி மேல் உள்ளது.அதுவே என் பரம்பரை சொத்து." என்று வேதாந்த தேசிகர் கூறியபடி.

சங்கரர் இந்த நாமத்தை பஞ்ச கோசங்களில் உறைபவர் என்று விளக்குகிறார். பஞ்ச கோசமாவது, அன்னமயகோசம்( சரீரம்), பிராணமயகோசம், (பிராணன்), மனோமய கோசம் (மனம்) விஞ்ஞானமய கோசம்( புத்தி) ஆனந்த மய கோசம்(ஆத்மா).

437. மஹாபோக:- பகவான்தான் எல்லாவற்றிலும் சிறந்த போகம் 
438. மஹாதன:- அவனே சிறந்த செல்வம்.

439.அனிர்விண்ண:-உத்சாஹமின்மை, துக்கம், தாமதம் இவை இல்லாதவர். உத்சாஹம் குறைவு படாதவர். கூடாரை வெல்லும் சீர் கோவிந்தன். 
கீதையில் ,"மூன்று உலகங்களிலும் நான் செய்தே ஆகவேண்டும் என்பது எதுவும் இல்லை. நான் அடைய வேண்டியது எதுவும் இல்லை ஆயினும் நான் விடாது செயலாற்றுகிறேன்," என்கிறார்.

440. ஸ்தவிஷ்ட: -மிகவும் விரிவாக இருப்பவர். சர்வவ்யாபியாக இருப்பதனால். 'ஸ பூமிம் விச்வதோ வ்ருத்வா அத்யதிஷ்டத் தசாங்குலம். ' – புருஷ சூக்தம். பிரபஞ்சம் முழுவதும் வியாபித்து மேலும் பத்து அங்குலம் விரிவானவர். பத்து அங்குலம் என்பது எண்ணிக்கையைக் குறிக்கிறது. அதாவது எல்லையில்லாதவர் என்று பொருள்.

441.அபூ:- பிறப்பு இல்லாதவர். பூ: என்பது பாட பேதம் . அதற்குப் பொருள் எப்போதும் உள்ளவர் என்பது..

442.தர்ம யூப: -தர்மங்கள் பசுவைப்போல் கட்டப்படும் யூபஸ்தம்பம் போன்றவர்

443. மஹாமக: -மக; என்றால் யாகம். அது வேண்டிய பலனைக் கொடுக்கிறது. மஹா மக: என்றால் எல்லாவற்றையும் தரும் யாகம் போன்றவர். அல்லது எவருக்கு அர்ப்பணம் செய்யப் பட்டால் யாகங்கள் பெருமை அடைகின்றனவோ அவர். (சங்கரர்)

444.நக்ஷத்ர நேமி:-நயதி ப்ராப்யதி இதி நேமி: கொண்டு செல்வது. சக்கரத்தின் அச்சுக்கு நேமி என்று பெயர்.ந க்ஷரதி இதி நக்ஷத்ர:, மாறாதது என்று பொருள். நக்ஷத்ரம் முதலிய ஒளி வடிவங்களுக்கு அச்சாக அல்லது செலுத்துபவராக இருப்பவர்.

நக்ஷத்திர மண்டலம் சிம்சுமாரம் அல்லது ஒரு பெரிய திமிங்கிலமாக வர்ணிக்கப்படுகிறது. துருவ நக்ஷத்ரம் அதன் வால். அதன் இதயம் பகவானாகிய ஒளி.

445. நக்ஷத்ரீ- நக்ஷத்ராணி ஸந்தி அஸ்மின் இதி நக்ஷத்ரீ-நக்ஷத்ரங்களுக்கு ஆதாரமாக இருப்பவர். அல்லது நக்ஷத்திரங்களின் நாயகனாகிய சந்திரவடிவினர். 'நக்ஷத்ராணாம் அஹம் சசீ,' கீதை 1௦
.
446. க்ஷம: - பொறுமை வடிவினர். சாமர்த்தியம் உள்ளவர் . சிருஷ்டி ஸ்திதி சம்ஹார சக்தி உள்ளவர். அதே சமயம் பொறுமையுடன் குற்றங்களை பொறுப்பவர். சக்தி உள்ளவர்க்கு பொறுமை இருப்பதுதான் விசேஷம்.

447. க்ஷாம:- சர்வவிகாரேஷு க்ஷயிதேஷு ஸ்வாத்மனா அவஸ்தித: - பிரளய காலத்தில் கெல்லாம் அழிந்தபோது தான் மட்டும் தனித்திருப்பவர்.

448.ஸமீஹன:-சிருஷ்டி காலத்தில் எல்லோரையும் அந்தந்த காரியங்களில் பிரவ்ருத்திக்கச் செய்பவர்


No comments:

Post a Comment