Monday, June 10, 2019

Vishnu Sahasranama 408 to 418 in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

விஷ்ணுஸஹஸ்ரநாமம்

408. வைகுண்ட: -குண்ட: என்றால் தடை அல்லது இடையூறு. விகத: குண்ட: யஸ்மாத் ஸ: விகுண்ட:- தடையொன்றும் இல்லாதது வைகுண்டம். அதை உடையவன் வைகுண்ட:- பக்தர்களின் எல்லா இடையூறையும் நீக்கித் தன்னுடன் சேர்த்துக்கொள்வதாலும் அவன் வைகுண்ட; எனப்படுகிறான்.

சிருஷ்டியின் ஆரம்பத்தில் பஞ்ச பூதங்களை சிதறிப் போகாமல் ஒழுங்குபடுத்துபவர். _(சங்கரர்). மயா ஸம்ச்லேஷ்தா பூமி: அத்பிர்வ்யோம ச வாயுனா வாயு;ச தேஜஸா ஸார்தம் வைகுண்டத்வம் ததோ மம-மஹா. பா. சாந்தி- 352-15)

409. புருஷ: -புர: என்றால் தேகம் அதனுள் இருப்பதால் புருஷ: பிரபஞ்சமே அவனுடைய தேகமானதால் அதன் ஆத்மாவாக இருப்பவன் என்பது பொருள். 
இதர அர்த்தங்கள் பினவருமாறு.

1. புரு ஸனாதி – எல்லாம் கொடுப்பவன்
2. புரா அஸ்தி- எப்போதும் இருப்பவன்- ஆதி புருஷன்.,
3.பூரயதி இதி- எங்கும் பூரணமாக இருப்பவன்- ஸர்வ வ்யாபி.
4. எல்லா பாவங்களையும் எரிப்பவன். 
'ஸ: யத் பூர்வ: அஸ்மாத் ஸர்வஸ்மாத் ஸர்வான் பாப்மன: ஔஷத் தஸ்மாத் புருஷ:- ப்ர்ஹத். உப.

410.ப்ராண:- எல்லா உயிர்களிலும் ஆத்மாவாக இருந்து பிராணனை உயிர்ப்பிப்பவன்.

411.ப்ராணத: -ப்ர என்றால் பூர்ணம் என்று ஒரு பொருள். அதனால் ப்ராணத: என்பது பூர்ணத: எல்லாவற்றையும் முழுமையாக்குபவன் என்று பொருள். 
ப்ராணான் ததாதி- ஸ்ருஷ்டித்தல்,

412. ப்ரணவ:-ப்ரணைதி யம் இதி- யாரை எல்லா ஜீவராசிகளும் துதிக்கின்றனவோ.

413. ப்ருது:-ப்ருது என்றால் விரிந்து பரந்த என்று பொருள். பிரபஞ்ச ரூபமாக விரிந்துள்ளவர்.

414. ஹிரண்யகர்ப: -ஹிரண்யம் கர்பே யஸ்ய ஸ: பிரம்மாவின் உற்பத்திக்குக் காரணமான பொன் அண்டத்தை தன்னுள் வைத்திருப்பவர்

415.சத்ருக்ன:- சத்ரூன் ஹந்தி இதி. எதிரிகளை அழிப்பவர். அதாவது தன்னைச் சரண் அடைந்தவர்களின் எதிரிகளை என்று பொருள். அவருக்கு எதிரிகள் இல்லை.
பக்தர்களின் உள்பகையை அழிப்பதனாலும் சத்ருக்னன்.

416. வ்யாப்த:-சர்வவ்யாபியாக இருப்பவர். எல்லாவற்றிற்கும் காரணமாக இருப்பதால் கார்யமாகிய மட்பாண்டங்களில்காரணமாகிய மண் ஊடுருவி நிற்பதைப் போல. .

417. வாயு: வாதி , ஸர்வத்ர கதோ பவதி இதி வாயு: தம்மை தியாநிப்பவர்கள் இருக்கும் இடம் தாமே செல்பவர். எங்கும் செல்பவர். வாயு கந்தத்தை எடுத்துச்செல்கிறது." புண்யோ கந்த: ப்ரிதிவ்யாம் ச. " பகவத்கீதை. நானே மண்ணில் வாசனையாக இருக்கிறேன்., அதாவது மண்ணின் முக்கிய குணமாகிய வாசனை என்பதைத் தருவது நானே என்று பொருள். வாயு இல்லாமல் உலகம் ஜீவிக்காது அதனாலும் வாயு எனப்படுகிறார்.

418. அதோக்ஷஜ;-அத: ந க்ஷீயதே ஜாது இதி. அக்ஷம் என்றால் ஆகாசம். அத: பாதாளம். அதோக்ஷஜ: என்றால் த்ரிவிக்ரமாவதாரம்.

No comments:

Post a Comment