Monday, June 10, 2019

Sacred thread -பூணூல்

பூணூல் - பூணும் நூல் - முப்புரி நூல் - SACRED THREAD 
யக்ஞோபவீதம் பரமம் பவித்ரம் 🙏 YAJGNOPAVEETAM !
நூலிலே சிறந்த நூல் எந்த நூல் ? பூநூல் ! ஆனாலும்...                     
பூணூல் என்பதற்கும் பூவுக்கும் தொடர்பே இல்லை 🤔 

இது "பூண்" + "நூல்" என்னும் சேர்க்கையால் வருவதே  பூணும் நூல் உடலில் தரித்தல் என்ற பொருளுடையது. 
ஒரு காலத்தில் எல்லாருமே பூணூல் தரித்திருந்தனர்.

பூணூலில் மொத்தம் 96 திரிகள் உள்ளன.
மூன்று முடிச்சுகள் கொண்டதாக உள்ளது.

சுத்தமான பஞ்சைத் தக்ளியில் நூலாக நூற்று, அதிலே 96 இழைகள் சேர்த்து, வேத மந்திரங்களை ஜபித்து, பிராண பிரதிஷ்டை செய்து பூணூல் தயாரிப்பார்கள். 

பூணூலில் இருக்கும் மூன்று புரிகள், காயத்திரி(மனம்),
சரசுவதி(வாக்கு),சாவித்திரி(செய்கை) தேவியரைக் குறிக்கும். இதன் மூலம் பூணூலை அணிபவர் மனம், வாக்கு மற்றும் செய்கையில் தூய்மையுடன் இருக்க எந்நேரமும் நினைவுறுத்தப்படுகிறார்.

மூன்று முடிச்சுகளை சிவன், விஷ்ணு, பிரம்மன் 
ஆகிய மும்மூர்த்திகளின் அம்ஸமாகவும், 
ஒவ்வொரு முடிச்சிலும் மூன்று பிரிகளாகவும், 
மூன்று முடிச்சுகளிலும் உள்ள ஒன்பது பிரிகளை நவகிரகங்களாகவும், நாம் நமது உடலியல் அணிந்துக்கொள்ளவதன்மூலம் மும்மூர்த்திகளும், நவகிரகங்களும் நம்மை எல்லா நேரங்களிலும் கட்டி காத்துவருவதாக ஐதீகம். இதுவே பூணூல் அணிந்துகொள்வதன் சிறப்பம்சமாகும். 

அப்படிப் பட்ட பூணூலைத் தயாரிக்கையில் காயத்ரி மந்திரத்தை ஜபித்துக்கொண்டே தயாரிப்பார்களாம். 
அப்படி ஜபித்து ஜபித்து உரு ஏற்றப்பட்ட பூணூலுக்கு சக்தி அதிகம். 

இழைகளின் எண்ணிக்கையும் அணியும் காலமும் :

1
பிரம்மச்சாரியாக இருக்கும் போது தனக்கென ஜபம் செய்ய கல்வியறிவு பெற ஒரு பூணூல் அணிகிறார்கள்.
ஒரு பூணுல் என்பது மூன்று இழைகளையுடையது.

2
திருமணமான பிறகு தனது மனைவிக்காகவும் குடும்பத்திற்காகவும் ஜபம் வழிபாடு செய்வதற்காக இரண்டு பூணூல் அணிகிறார்கள். 
இரு பூணூல் என்பது ஆறு இழைகளையுடையது.

3
சிவதீட்சை அல்லது வைணவ முத்ராதானம் பெறுகின்றவர்கள் மட்டும் மூன்று பூணூலை அணிகிறார்கள். 
இது ஒன்பது இழைகளையுடையதாகும்.

சடங்குகள் செய்யும்போது பூணூல் 
மூன்று விதமாக அணியப்படுகிறது:

நேர்முறை - 
வழமையான முறையில் இடது தோளிலிருந்து வலது கைப்புறம் அணிதல்....கடவுளருக்கு வழிபாடுகள் செய்யும்போது.

மாலையாக - 
கழுத்து வழியே நெஞ்சின் மீது மாலையாக அணிதல் - இருடிகளுக்கு தர்ப்பணம் கொடுக்கையில், உடலுறவு கொள்கையில் மற்றும் இயற்கை கடன்களை கழிக்கும்போது.

எதிர்மறையாக - 
வலது தோளிலிருந்து இடது கைப்புறம் அணிதல் - இறந்தவர்களுக்கு கருமாதி செய்கையில், திவசம் கொடுக்கையில்

உபநயனம் போது ஓர் நூல்பிரியே அணிவிக்கப்படுகிறது. 

பின்னர் திருமணத்தின் போது இரண்டாவதும் 
பிள்ளை பிறந்தபின் மூன்றாவதும் அணியப்படுகிறது.

உலகில் தனது கடமைகளை அவனுக்கு நினைவுறுத்திய வண்ணம் இருக்க இவ்வாறு செய்யப்படுகிறது.

தமிழில் முப்புரி நூல் என அழைக்கப்படும் 
பூணூலைப் பற்றிய குறிப்புகள் புறநானூறு, 
கந்த சஷ்டி கவசம், விநாயகர் அகவல்... 🛐 
போன்ற பல நூல்களிலும் காணப்படுகின்றன

பூணல்,பூணூல்,முப்புரி நூல் – பிண்ணனி :

பூணலுக்கும் சாதிக்கும் சம்பந்தம் இல்லை 
என்பது நம் இந்துக்களுக்கே தெரியவில்லை. 

எல்லா இந்துக்களும் அணியும் ஒன்றே. 
அந்தணர்கள் அந்த வழக்கத்தை விடவில்லை. மற்றையவர்களின் வாழ்வில் பழக்கம் குறைந்துவிட்டது. 

ஆனால் கருமாதி செய்யும் போது பூணல் அணியும் பழக்கம் எல்லா இந்து சமூகத்தினரிடமும் இன்றும் உண்டு. 

பெண்களும் பூணல் அணிந்த காலம் உண்டு. 

பூணல் அணிவதற்கு 
இரண்டு காரணங்கள்.

ஒன்று 
அறிவு சார்ந்த புலன்கள் 
அதாவது ஞானேந்திரியங்கள் (கண்,வாய்,காது,மூக்கு,தொட்டுணர்தல்) இவையனைத்தும் தலையில் அமைந்துள்ளன
(தொட்டுணர்வு உடலெங்கும் உண்டு).

பூணூலை... 
இடது தோளிலிருந்து குறுக்காகஇடும்போது 
நம் உடல் இரண்டு பகுதியாக பிரிக்கப்படுகிறது. 

ஒருபுறம் தலையும் வலதுகையும் – 
அறிவுபூர்வமான உறுப்புக்கள் . 
மறுபுறம் இதயம்,நுரையீரலின் ஒருபகுதி, வயிறு,இனப்பெருக்க உறுப்பு,மலவாய் . 
இவை கர்மேந்திரியங்கள்: 
அதாவது 
உண்டல்,செரித்தல்,மலம் கழித்தல்,கலவி போன்ற அறிவு சம்பந்தப்படாத செயல்களைக் குறிப்பன. 
இது முதல் காரணம். 

இரண்டாவது காரணம் 
ஒருவரின் வாழ்க்கைப் பொருப்பைக் குறிக்க. பூணூலை முப்புரி நூல் என்பதுண்டு. 

அதில் மூன்று தனி நூல்கள் உண்டு. 
திருமணம் ஆகும் முன் மூன்று நூல். 
திருமணம் ஆனால் ஆறு நூல். 
தந்தை உயிர் தவறினால் ஒன்பது நூல். 
தாய் உயிர் தவறினால் 12 நூல். 

இந்த நூல்கள் பார்த்தே நாம் அவரின் 
குடும்பநிலையை அறிந்து கொள்ளலாம்! 

இதில் 
பார்ப்பனீயமும் இல்லை 
மண்ணாங்கட்டியும் இல்லை! 

சில சமூகங்களில் இது வழக்கத்தில் இல்லை 
அவ்வளவே! 

யார் வேண்டுமானாலும் பூணூல் அணியலாம்.

பூணூல் அணியும் போது கூறவேண்டிய மந்திரங்கள் 
--------------
ஆதாரம் :
-------------
1
"முப்புரி நூலின் மெய்ப்பொருள் " :
2
பூணல்,பூணூல்,முப்புரி நூல் – பிண்ணனி
------------
அக்கால பூணூல்தரித்த ஆண் பெண் அந்தணர் இல்லை
பூணூல் அனைவரும் (பெண்களும்) அணிந்ததே, காலப்போக்கில் குறைந்தது 

புத்தகம் : யக்ஞோபவீதம்  சர்மா சாஸ்திரிகள்

No comments:

Post a Comment