Friday, April 19, 2019

Vishnu Sahasranama 258to 266 in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 28

258. வ்ருஷாஹீ-வ்ருஷஸ்ய ( அக்னே: அஹ;( பிரகாச:) அக்னியின் ஒளியானவர்.
அக்னி என்பது சூரியன் ,சந்திரன் முதலிய எல்லா ஒளி வடிவங்களையும் குறிக்கும்.

தமேவ பாந்தம் அனுபாதி ஸர்வம். தஸ்ய பாஸா ஸர்வம் இதம் விபாதி, என்ற உபனிஷத் வாக்கியத்தின்படி, எல்லா ஒளி உருவங்களும் பகவானுடைய ஒளியால் பிரகாசிக்கின்றன.

வ்ருஷா என்ற சொல் தர்மத்தையும் குறிப்பதால் வ்ருஷரூப: பிரகாச: அஸ்ய இதி வ்ருஷாஹீ என்ற பொருளில் தர்மமே ஒளியானவர்.

259. வ்ருஷப: - வருஷ: வர்ஷணம். தேன பாதி இதி. அருளே மழையாகப் பொழிபவர்

260. விஷ்ணு: -விவேஷ்டி ஸர்வத்ர ச்வகாயா விபூத்யா- எங்கும் தன் மகிமையால் வ்யாபித்துள்ளவர்.

261. வ்ருஷபர்வா- பர்வம் என்றால் சாந்தி அல்லது இணைப்பு. வ்ருஷ என்றால் தர்மம். உலகம் வர்ணாஸ்ரம தர்மம், ஸ்வதர்மம், நெருப்பும் உஷ்ணமும் போன்ற இயற்கை தர்மம் இவைகளால் இணைக்கப்பட்டுள்ளது. பகவான் எல்லாவற்றையும் இணைப்பவன் ஆதலால் வ்ருஷ பர்வா என்று கூறப்படுகிறது.

பர்வம் என்றால் படிக்கட்டு என்று ஒரு அர்த்தம். தன்னை அடையும் படிக்கட்டுகளான, அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம் முதலிய வழிகளை காட்டுவதால் வ்ருஷபர்வா எனப்படுகிறான். அதாவது அவனே படிக்கட்டு , அவனே அடையும் இடம்.

262. வ்ருஷோதர: -வ்ருஷம் அல்லது தர்மமே அவன் உதரம்.அகில உலகும் தர்மத்தினால் இணைக்கப்படுகிறது. அந்த உலகைத் தன் உதரத்தில் வைத்துக்காப்பதால் வ்ருஷோதரன் எனப்படுகிறான்.

263.வர்தன: - எல்லாவற்றையும் தாயைப்போல் தன்னுள் தாங்கி அவைகளை வளரச்செய்கிறான்.

264. வர்தமான:-அவனே உலகமாக வளர்கிறான். உலகஸ்ருஷ்டியின் முன் சித் அசித் (உயிருள்ளது, ஜடமாக உள்ளது) இவைகளை சூக்ஷ்ம வடிவில் உள்ளடக்கி, சிருஷ்டியின் பின் அவைகளை ஸ்தூல வடிவில் வெளிக்கொணர்கிறான்.

265. விவிக்த:- பகவானே சிருஷ்டியின் காரணமாகவும் அதன் விளைவாகவும் (cause and effect) இருந்த போதிலும் அதனால் அவன் பாதிக்கப்படுவதில்லை.

'யதா ஆகாசஸ்திதோ நித்யம் வாயு: ஸர்வத்ரகோ மஹான், ததா சர்வாணி பூதானி மத்ஸ்தானி இதி உபதாரய,' (ப. கீ. 9.6). 
இதன் பொருள்,
காற்று ஆகாயத்தில் எப்போதும் இருந்து எங்கும் சஞ்சரித்தாலும் அது எதனாலும் பாதிக்கப்படுவதில்லை. அதே போல பகவான் எங்கும் நிறைந்து இருந்தபோதிலும் எதுவும் அவருக்கு ஒட்டுவதில்லை.

266.ச்ருதிஸாகர;- வேதங்களின் சாகரம். வேதங்கள் நதிகள் கடலில் கலப்பதைப் போல் அவரிடமே வந்து சேருகின்றன.

  

No comments:

Post a Comment