Monday, April 8, 2019

Vishnu Sahasranama 174 to 183 in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

விஷ்ணு ஸஹஸ்ரநாமம் -20

174. மஹோத்ஸாஹ: ( ஐஸ்வர்யம் )
பிரபஞ்சத்தை ஊக்கமுடன் ஆள்பவர். 
175. மஹாபல: - ( பலம் )
கீதையில் 'பலம் பலவதாம் அஸ்மி,' வல்லமை உள்ளவைகளுக்கு வல்லமையாய் இருப்பவர். 
176. மஹாபுத்தி: : ( ஞானம்) 
ஞானஸ்வரூபன்.
177. மஹாவீர்ய:- ( வீர்யம்) 
சிருஷ்டியின் காரணமான அபார வீர்யம் கொண்டவன். 
.

178. மஹாசக்தி: -( சக்தி)
எல்லாவற்றையும் இயக்கும் சக்தியாக இருப்பவன்
179.- மஹாத்யுதி;- ( தேஜஸ்) உபநிஷத் ஸ்வயம் ஜ்யோதி, தானாக பிரகாசிப்பவன், ஜ்யோதிஷாம் ஜ்யோதி: , ஒளிகளுக்கெல்லாம் ஒளியானவன் என்று கூறுகிறது. 
இவ்வாறு பகவான் என்ற சொல்லின் ஆறு லக்ஷணங்களையும் இந்த ஆறு நாமங்கள் குறிக்கின்றன. 
180. அனிர்தேச்யவபு: இது இவ்விதம் என்று சுட்டிக்காட்ட முடியாத ஸ்வரூபம் உடையவர். 
ஆணல்லன் பெண்ணல்லன் அலியும் அல்லன் 
காணலும் ஆகான் உளன் அல்லன் இல்லையல்லன் ( நம்மாழ்வார் )
அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் இருப்பவனை என்னவென்று நிர்ணயிப்பது? 
181. ஸ்ரீமான் – ஈஸ்வரத்தன்மையாகிய திருவுடன் கூடியவர். திருமால். 
182.அமேயாத்மா – அளவிடமுடியாத பெருமை உடையவர். எல்லாமே அவன் சிருஷ்டி என்றிருக்கையில் எதைக்கொண்டு அளப்பது அவன் பெருமையை? கடலில் இருந்துகொண்டே கடலை அளக்க முடியுமா? ஆகாயத்தில் இருந்துகொண்டே ஆகாயத்தின் பரிமாணத்தை அறிய முடியுமா? 
183.மஹாத்ரித்ருக் – பெரிய மலையைத் தூக்கியவர் . மந்திர மலையை தங்கியது கூர்மாவதாரத்தில். கோவர்தன மலையைத் தாங்கியது கிருஷ்ணாவதாரத்தில்.




No comments:

Post a Comment