Monday, February 18, 2019

Vishnu Sahasranamam 15 to 24 in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

விஷ்ணுஸஹஸ்ர நாமம் 5

18. யோக:-மனஸ:: திய: ச ஏகீ பாவ: யோக: . யோகம் என்பது மனமும் புத்தியும் ஒருநிலைப்படுவது. இங்கு யோகத்தினால் அடையப்படுபவன் யோகா: எனப்படுகிறான்.,ஏன் என்றால் யோகம் என்பது ஐக்கியம் . இறைவனோடு ஐக்யம் ஆவது. பாதையும் அடையவேண்டிய இலக்கும் ஒன்று என்பது.

அவனருளால் அவன் தாள் வணங்கி என்பதைப் போல.
19. யோகவிதாம் நேதா – யோகம் அறிந்தவர்களின் வழிகாட்டி. தன்னை அடைய யோகம் மூலம் வழிகாட்டுபவன். இங்கு யோகம் என்றால் கர்மயோகம் பக்தியோகம் ஞானயோகம் மூன்றையும் குறிக்கும்.

20. பிரதான புருஷேச்வர:-பிரதானம் என்பது முக்குணம் உடைய பிரகிருதி. அதிலிருந்து உண்டாவது பிரபஞ்சம். புருஷன் என்பவன் ஜீவாத்மா. உண்மையில் பந்தமற்ற புருஷன் பிரகிருதி சம்பந்தத்தால் கட்டுப்படுகிறான். அதை அறிந்து பரமபுருஷனிடம் புத்தியை செலுத்தினால் விடுபடுகிறான். அதனால் பரமபுருஷனே பிரகிருதி புருஷன் இருவருக்கும் ஈசன்.

21. நாரசிம்ஹ வபு: -நரசிம்ஹ ஸ்வரூபம் இருமையைக் கடந்த ஸ்வரூபம். ஞானசக்தியும் க்ரியாசக்தியும் சேர்ந்தது. நரஸ்ய விசார்ய பூர்விகா கார்யகாரண சக்தி: ஸிம்ஹஸ்ய ச பராக்ரமசக்தி: லக்ஷ்யதே யஸ்மின் வபுஷி தத்வபு: யஸ்ய ஸ: நாரசிம்ஹவபு: . அதாவது புத்தியும் பராக்ரமமும் சேர்ந்த சக்தி என்று பொருள். பிரம்மாவின் வரங்களை ஒத்தும் பக்தனைக் காக்கவும் எடுத்த வீரம் பொருந்திய அவதாரம்.

22. ஸ்ரீமான்-திருவை உடையவன். எந்த உரு எடுத்தாலும் திருமகளை மார்பில் உடையவன் .அதுவே நரஸிம்ஹஉருவத்தின் அழகு.

23. கேசவ: -கம் என்றால் ஜலம், சுகம் என்று பொருள். தண்ணீர் எவ்வாறு அவசியமோ அவ்வாறு சுகத்தையும் அளிக்கிறவன். குளிர்ந்த ஆனந்தத்தை அளிப்பவன் என்றும் கொள்ளலாம். க என்றால் பிரமனைக் குறிக்கும். அ என்பது விஷ்ணு. ஈச என்பது சிவன். இவைகளோடு வ என்ற எழுத்தும் சேர்ந்தால் மும்மூர்த்திகளும் இவன் வசம் அதாவது பரப்ரம்மமே என்பது பொருள்.

பொதுவாக அறிந்த பொருள் என்னவென்றால், அழகிய பெரும் முடிகொண்டவன் எனபது. பிரசஸ்த ஸ்நிக்த நீலகுடில குந்தலத்வாத் கேசவ: , சிறந்த அழகிய கருத்த சுருட்டையான கூந்தலை உடையவன். 
அல்லது கேசியைக் கொன்றவன் என்ற பொருளிலும் கேசவன் என்று சொல்லப்படுகிறான். இதற்கு முந்தைய நாமம் நரசிம்மனைக் குறிப்பதால் மகத்தான பிடரி மயிரைக் கொண்டவன் என்றும் கூறலாம்.

24. புருஷோத்தம:- இந்த சொல் இரண்டு விதமாக பகுத்தறியப் படுகிறது. 
புருஷேஷு உத்தம: - இது புருஷர்களுக்குள் உத்தம புருஷன் அதாவது பரம புருஷன்.இங்கு புருஷன் என்பது ஜீவாத்மாவைக் குறிக்கிறது. 
புருஷானாம் உத்தம: - புருஷர்களுக்குள் உத்தமன், சிறந்தவன். இது சரியான பொருளாகாது . ஏனென்றால் புருஷர்களுக்குள் ஒருவனாக அவனைக் கொள்வது சரியல்ல.
உத்தம: புருஷஸ்து அன்ய: பரமாத்மா இதி உதாஹ்ருத:(ப.கீ- 15-17)


No comments:

Post a Comment