Thursday, January 17, 2019

Uddava gita - Siddhis in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

உத்தவகீதை-சித்திகள்

இந்திரியங்களை ஜெயித்தவனும் சுவாசத்தை ஜெயித்தவனும் என்னிடம் மனதை தாரணை செய்தவனும் ஆன யோகிக்கு பலவகை சித்திகள் உண்டாகின்றன.

யோகத்தில் கரை கண்டவர்கள் சித்திகள் மொத்தம் பதினெட்டு என்று கூறுகின்றனர். அதில் எட்டு என்னை முக்கியமாகக் கொண்டவை.

அணிமா- உடல் சிறுத்தல் , மஹிமா, பெருத்தல் ( இவை இரண்டும் ஹனுமானால் செய்யப்பட்டதை சுந்தரகாண்டத்தில் காண்கிறோம்.)லகிமா- கனம் குறைதல். ப்ராப்தி: இந்த்ரியை: எல்லாப்ராணிகளின் இந்திரியங்களுடன் சேர்ந்து நிற்றல்.ப்ராகாம்யம்- மறைந்துள்ள விஷயங்களை அறியும் சக்தி, ஈசிதா- வசியப்படுத்தும் சக்தி, வசித்துவம்- விஷயங்களில் பற்றற்று இருப்பது, காமாவசாயிதா- வேண்டுபவைகளை அடையும் சக்தி.

குணங்களைக் காரணமாகக் கொண்ட பத்து சித்திகள்.
1.பசிதாகம் இல்லாமல் இருப்பது, 2.தூரத்தில் நிகழ்வதைப் பார்ப்பது, 3.கேட்பது, 4..மனோவேகத்தில் செல்லுதல். 5.விரும்பிய வடிவத்தை எடுத்துக் கொள்ளுதல் 6.பிறர் தேகத்தில் புகுதல், 7. விரும்பியபோது மரணம் அடைதல், 8.தேவர்கள் கூடி விளையாடுதலை உடனிருந்து பார்த்தல் 9.எண்ணியதை எண்ணியவாறு எய்துதல் 10.தடைப்படாத கட்டளை.

மற்றும் யோக தாரணையால் ஏற்படும் சித்திகள், மூன்று காலங்களையும் அறியும் திறமை, குளிர் வெப்பம் முதலிய இரட்டைகளின் ஜெயம், பிறர் மனம் அறிதல், அக்னி, சூரியன், ஜலம், விஷம் இவைகளைக் கட்டுப்படுத்துதல், பிறரால் ஜெயிக்கப்படாமை முதலியவை.

இவை அனைத்தும் என்னை த்யாநிப்பதால் அடையப்படுகிறது. ஆனாலும் என்னை அடைய விரும்பி உத்தம யோகத்தைக் கைக்கொண்டவனுக்கு இவை அனைத்தும் இடையூறாகவே கருதப்படுகின்றன.ஏனென்றால் இவை வீண் காலதாமததிற்குக் காரணமாகின்றன.

பிறப்பாலும் மூலிகைகளாலும் தவத்தாலும் மந்திரத்தாலும் ஏற்படும் சித்திகள் எவையோ அவை அனைத்தையும் ஒருவன் என்னிடம் யோகத்தால் அடைவான். ஆகையால் மற்ற யோக மார்க்கங்களை என் பக்தன் கைவிடவேண்டும்.

சித்திகளுக்கும், வேத வாதிகளுடைய தர்மத்திற்கும்,சாங்கியத்திற்கும் யோகத்திற்கும் காரணமாயிருப்பவனும் ஆள்பவனும், அளிப்பவனும் நானே.

இவ்வாறு கூறிய கண்ணனை பார்த்து உத்தவர் பகவானுடைய பெருமைகளாகக் கருதப்படுபவை எவையோவர்ரை எல்லாம் கூற வேண்டும் என்று கேட்கிறார். அதாவது கீதையில் சொல்லப்பட்ட விபூதியோகமே அது. அதை அடுத்துப் பார்க்கலாம்.

No comments:

Post a Comment