Monday, December 10, 2018

Todakashtakam with meaning in tamil

Courtesy:Sri.Ranga Prasad

தோடகாஷ்டகம்

சமஸ்க்ருத ஸ்லோகத்தின் கீழ் ஒவ்வொரு ஈரடிக்குப்பின் தமிழாக்கம் செய்து பக்தர்களின் நன்மை கருதி தரப்பட்டுள்ளது.

விதிதாகில சாஸ்த்ர ஸுதா ஜலதே!
மஹிதோப நிஷத் கதிதார்த நிதே |
ஹ்ருதயே கலயே விமலம் சரணம்
பவ சங்கர தேசிக மே சரணம் || 1 ||

சங்கர குருவே சரணம்... சரணம்
உயரிய சாஸ்திர அமுதக் கடலே
உபநிடம் கூறும் உண்மைப் பொருளே!
சங்கர குருவே சரணம், சரணம்!

கருணா வருணாலய பாலய மாம்
பவஸாகர துக்க விதூன ஹ்ருதம் |
ரசயாகில தர்சன தத்வ விதம்
பவ சங்கர தேசிக மே சரணம் || 2 ||

கருணை வடிவே! கடல்போல் வாழ்வில்
கவலைகள் தீர்த்தே காத்திட வேண்டும்!
காவியம், சாஸ்திரம் உணர்த்திட வேண்டும்
சங்கர குருவே சரணம், சரணம்!

பவதா ஜனதா ஸுஹிதா பவிதா
நிஜபோத விசாரண சாருமதே |
கலயேஸ்வர ஜீவ விவேக விதம்
பவ சங்கர தேசிக மே சரணம் || 3 ||

உம்முடைப் பிறப்பால் உலகம் உய்ந்தது,
உண்மை, ஞானம் உணர்த்திட வைத்தது!
ஒள்ளிய ஆத்தும அறிவினை அருள்வாய்
சங்கர குருவே சரணம், சரணம்!

பவ எவ பவானிதி மெனிதராம்
ஸமஜாயத சேதஸி கௌதுகிதா |
மம வாரய மோஹ மஹா ஜலதிம்
பவ சங்கர தேசிக மே சரணம் || 4 ||

மங்களம் தந்திடும் சங்கரர் நாமம்
மனதில் மகிழ்வினை உடனே தந்திடும்!
மாளா ஆசைகள் நீக்கிடச் செய்வாய்
சங்கர குருவே சரணம், சரணம்!

சுக்ருதே‌ உதிக்ருதே பஹுதா பவதோ
பவிதா ஸமதர்சன லாலஸதா |
அதி தீனமிமம் பரிபாலய மாம்
பவ சங்கர தேசிக மே சரணம் || 5 ||

நற்செயல் பற்பல செய்திட அருள்வாய்
நல்லவர் பார்வை ஒன்றிடத் செய்வாய்!
நாடிடும் இந்த எளியனைக் காப்பாய்
சங்கர குருவே சரணம் சரணம்!

ஜகதீமவிதும் கலிதாக்ருதயோ
விசரன்தி மஹாமாஹ ஸச்சலத: |
அஹிமாம்சுரிவாத்ர விபாஸி குரோ
பவ சங்கர தேசிக மே சரணம் || 6 ||

உலகைக் காத்திடும் உத்தமர்கள் பலர்
உலகில் நன்மையை வேண்டியே நிற்பர்!
ஒளிர்ந்திடும் கதிரவன் ஒளியினைப் போலாம்
சங்கர குருவே சரணம் சரணம்!

குருபுங்கவ புங்கவகேதன தே
ஸமதாமயதாம் நஹி கோ‌பி ஸுதீ: |
சரணாகத வத்ஸல தத்வ நிதே
பவ சங்கர தேசிக மே சரணம் || 7 ||

தவமுனி பலரினிலும் குருவே
தரணியில் உனைப்போல் ஞானியும் உண்டோ?
தாளினைப் பணிபவர் தாபங்கள் தீர்ப்பாய்
சங்கர குருவே சரணம் சரணம்!

விதிதா நமயா விதைக கலா
ந ச கிஞ்சன காஞ்சன மஸ்தி குரோ |
து மேவ விதேஹி க்ருபாம் ஸஹஜாம்
பவ சங்கர தேசிக மே சரணம் || 8 ||

கலைகள் எவையும் யான் அறியேனே.
குருவினை வணங்கும் வகை தெரியேனே!
கடிதென வந்தே காத்திட வேண்டும்
சங்கர குருவே சரணம்

No comments:

Post a Comment