Monday, November 5, 2018

Totakashtakam of Sri.Jayendra Saraswati of Kanchi

॥ श्रीजयेन्द्रगुरुतोटकाष्टकम् ॥

स्वगुरोरुपदेशधिया तृणवत्
तनुमानमुखान् विगणय्य चरम् ।
खलमारणदूषणभर्त्सनतो
नविचालितम् ऊर्जितधैर्यनिधिम् ॥ १ ॥

(टि - नविचालितम् इति नञा समानार्थकेन नशब्देन समासो नैके इत्यादि यथा।)

தன் குருவின் உபதேசத்தையே மனதில் கொண்டவராக, (அதனை நிறைவேற்ற தன்) ஶரீரம் (லௌகிக) கௌரவம் போன்றவற்றைப் பொருட்படுத்தாது ஸஞ்சரித்தவரும், (அதனாலேயே) (பெரும்பாலும் வேற்றுமதத்தைச் சேர்ந்த) துஷ்டர்கள் கொலை (செய்வோம்) அபகீர்த்தி (உண்டாக்குவோம் என்றவாறு) மிரட்டினாலும் அசையாது (ஆத்ம)பலம் கொண்ட தைரியத்தின் நிதியாக இருந்தவரும்…

बहुधाऽन्तरितानलमर्षणश-
क्तिददेशिकशोधितहेमनिभम् ।
तमसां निधनेऽर्क इवोर्ध्वगतिम्
ऋतवीरमहं प्रणमामि गुरुम् ॥ २ ॥

(टि - अन्तरितम् इति भावक्तान्तम्।)

எத்தனை விதமான நெருப்பு (போன்ற) இடையூறுகளையும் ஸஹித்துக்கொள்ளும் ஶக்தியை அளித்த குருவினால் (அந்த நெருப்பிலேயே) புடம்போடப்பட்டு தங்கம் போல் ஆனவரும் (அதனாலேயே) இருள்களை அழிக்க ஸூர்யனைப் போல் உயர்ந்தெழுந்தவருமான தர்மவீரராம் குருவை நமஸ்கரிக்கிறேன்.

गुरुणा समताऽस्य न हीति वृथा
सुपृथग्जनजल्पनतिक्तरसम् ।
गुरुणा समता मम नेत्यनुमो-
दधिया विनयाद् अमृतं दधतम् ॥ ३ ॥

(टि - पृथग्जनः पामरः अविवेकी इति यावत्।)

இவர் குருவுக்கு ஒப்பாகவே மாட்டார் என்று தேவையின்றி மிகவும் விவேகமற்றவர்கள் பேசுவதான கசப்பான சாற்றை (என்றும் குருவே பெரியவர் என்ற) விநயத்தால் "(ஆமாம்) நான் என் குருவுக்கு ஸமம் இல்லை" என்று ஆமோதிக்கும் எண்ணம் கொண்டு அம்ருதமாக ஏற்றவரும்…

स्तुतिनिन्दनसिद्ध्यफलत्वविधं
द्वितयं सहमानम् उतैकधियम् ।
अघबन्धचयं तपसा जहतं
स्मितपूर्णमुखं प्रणमामि गुरुम् ॥ ४ ॥

மேலும் (தன் குரு காட்டிய தர்ம ஸ்தாபன லக்ஷ்யமாகிய) ஒன்றிலேயே சிந்தை உடையவராய் (பிறர்) போற்றுவது-தூற்றுவது, (காரியங்கள்) நிறைவேறுவது-பயனின்றிப்போவது போன்ற இரட்டைகளைப் பொறுத்தவரும், (இதுவே) தபஸ்ஸாகி (தமதும் தமது சிஷ்யர்களதுமான) பாபத்தளைக்கூட்டங்களை உதறியவரும், (இவ்வளவு கஷ்டத்தின் இடையேயும்) மந்தஹாஸம் நிறைந்த முகத்தவருமான குருவை வணங்குகிறேன்.

हितपावकतः कृशदीनजना-
वधि पोषणदत्तमतिं बहुदम् ।
तुहिनाचलमूर्ध्नि जनुर्भुवि चा-
द्यगुरोः स्मृतिकारणभक्तिभृतम् ॥ ५ ॥

(टि - हितः आहितः पावकः यैस्तेभ्यः प्रभृति। आद्यगुरोः इति देहलीदीप इव जनुषि स्मृतौ च उभयत्र अन्वेति। कारणा इत्यर्थे कारणम् इति णिजन्तात् ल्युट्। तद्धेतुभूता भक्तिः।)

(அதே தர்ம ஸ்தாபன லக்ஷ்யத்திற்காக) அக்னிஹோத்ரிகள் முதல் நலிந்து மெலிந்தோர் வரை (அனைவரையும்) போஷணம் செய்ய வேண்டும் என்பதில் மனதை ஈடுபடுத்தி (அனைவருக்கும்) நிறைய வழங்கியவரும், முதல் ஆசார்யாளின் (மூல ஸ்தானமான கைலாஸ க்ஷேத்ரத்தில்) பனிமலையின் உச்சியிலும் ஜன்ம க்ஷேத்ரமான (காலடியிலும், கைலாஸத்தில் ஆசார்யாளின் மூர்த்தியையும் காலடியில் கீர்த்தி ஸ்தம்பத்தையும் நிறுவி அவரது புண்ணிய) நினைவை ஏற்படுத்தி பக்தியை (தாமும்) தரித்து (பிறரிடமும்) வளர்த்தவரும்…

अवनीतनयापतिवेश्ममुखे
परमङ्गलकर्मणि पूर्वगतिम् ।
प्रतिकूलजना अपि सूनृतया
सुमुखाः स्युरितीहितयत्नकृतम् ॥ ६ ॥

(கருணையே வடிவான) பூமியின் மகளின் கணவன் (ஶ்ரீராமனுக்கு அயோத்தியில்) கோவில், (மதமாற்றத்தை நிறுத்துவது, மடங்கள் ஒற்றுமையாக இருப்பது) முதலிய மிகவும் மங்களமான காரியங்களில் (தாம்) முன்சென்று (செயல்பட்டவரும்), (வேற்று மதத்து தலைவர்கள் போன்ற) ப்ரதிகூலமானவர்களும் ப்ரியமான வார்த்தையால் ஸுமுகமாக ஆகட்டுமே என்ற ஆசையால் (ராமரைப் போலவே ம்ருது-பூர்வ-பாஷியாக) யத்னம் செய்தவரும்…

अपि वार्धक औषसजागरणं
समयानुसृताखिलकार्यकृतम् ।
गुरुभाष्यनिशामनसक्तहृदम्
अविवादरतिं नियताक्षगणम् ॥ ७ ॥

வயது மிகுந்த பிறகும் உஷஃகாலத்தில் (சாஸ்த்ரப்படி) துயில்நீங்கி (குறித்த) நேரப்படி அனைத்து காரியங்களையும் செய்தவரும், (அவ்வாறே சாதுர்மாஸ்யத்தில் தினமும் குறித்த நேரத்தில் பாஷ்ய பாடத்திற்கு ஸித்தமாகி) ஆசார்யாளின் பாஷ்யத்தைக் அனுஸந்தானம் செய்வதில் ஆர்வம் கொண்ட ஹ்ருதயம் உடையவரும், (சாஸ்த்ரங்களின் தாத்பர்யத்தை அறிந்துகொள்வதற்குத் தேவையற்ற) விவாதங்களில் ஆர்வமின்றி (சாஸ்த்ரங்களின் தாத்பர்யத்தை உண்மையில் பின்பற்றி) அனைத்து புலன்களையும் அடக்கியவரும்…

कृपयाऽऽर्द्रदृशा पुरतः प्रणतान्
स्नपयन्तमनुग्रहशीलमहम् ।
जननीव बुधाबुधसूनुषु यः
समवृत्तिरमुं प्रणमामि गुरुम् ॥ ८ ॥

கருணையால் நனைந்த பார்வை (மழை)யால் (தம்)முன் வணங்கியவர்களைக் குளிப்பாட்டுபவரும், அருளே இயல்பாக உடையவரும், புத்திசாலி - அப்படி அல்லாதவன் ஆகிய இருவித குழந்தைகளிடமும் தாயார் (எப்படி ஸமமான அன்பு காட்டுவாளோ அது)போல் (தம்மை பக்தியுடன் அண்டுபவர்கள் விஷயத்தில்) எவர் ஸமமாக நடந்துகொண்டாரோ அந்த குருவை நான் நமஸ்கரிக்கிறேன்.

श्रीगुरुजयेन्द्रकृपया सदाशिवब्रह्मसन्निधौ वासी ।
बालो मातुरिवाग्रे गुरवे विरचितम् उपायनीकुर्वे ॥

No comments:

Post a Comment