Tuesday, November 13, 2018

Srimad Bhagavatam skanda 4 adhyaya 31 in tamil

Courtesy: Smt.Dr.Saroja Ramanujam

ஸ்ரீமதபாகவதம் ஸ்கந்தம் 4- அத்தியாயம் 31

ப்ரசேதஸர்கள் பல காலம் ஆட்சி செய்தபின்னர் விவேகமடைந்தவர்களாய் பகவானுடைய உபதேசத்தை மனதில் கொண்டு மனைவியிடம் புத்திரனை ஒப்படைத்து துறவறம் பூண்டனர். மேற்குக்கடலின் கரையில் பிரம்மா சாக்ஷாத்காரத்தின் பொருட்டு பிரம்ம சத்ரயாகத்தை மேற்கொண்டனர்.

பிராணன், மனம், இந்த்ரியங்கள் இவைகளை அடக்கி யோகத்தில் அமர்ந்த அவர்களைக் காண நாரத மகரிஷி வந்தார். அவரை உபசரித்த ப்ரசேத்ஸர்கள் ஞான சூரியனைப்போல் மனிதரின் மன இருளை விலக்கும் அவர் வந்தது தங்கள் பாக்கியம் என்று கூறி பகவானின் உபதேசத்தை உலக வ்யவஹாரத்தால் நன்கு நினைவு கூற இயலவில்லை என்று கூறி அவரை ஞானோபதேசம் அளிக்குமாறு வேண்டினர்., நாரதர் அவர்களுக்கு பக்தியை உபதேசித்தார்.

"மனித வாழ்க்கை பகவானின் சேவையாலேயே அர்த்தம் உள்ளதாகிறது. உயர்குடிப் பிறப்பு, யாக யக்ஞாதிகள், நீண்ட ஆயுள், சாஸ்த்ரஞானம், யோகம் தியானம்வாக்கு வனமாய் , இவை எல்லாமே பகவானுக்கு அர்ப்பணமாக செய்யவில்லை என்றால் வீணேயாகும்.

ஒரு மரத்தின் வேரில் நீர் ஊற்றினால் அடிமரம் கிளை எல்லாம் பயன்பெருவது போல பிராணனை ஆகாரத்தால் வலியுறச்செய்தால் இந்த்ரியங்கள் பலமடைவது போல அச்சுதனை பூஜை செய்தால் அனைவரையும் பூஜைசெய்ததற்கு ஒப்பாகும்.

சூரியனிடம் இருந்து வரும் மழை மறுபடி ஆவியாக சூரியனைச்சென்றடைவது போல் , மண்ணிலிருந்து வந்த எல்லாம் கடைசி மண்ணோடு மண்ணாவது போல., இந்த சிருஷ்டி எல்லாமே ஹரியிடம் இருந்து வந்து திரும்ப அவரிடமே ஐக்கியம் ஆகின்றது.

இந்த பிரபஞ்சம் முழுவதும் பகவானின் ஸ்தூலமான வெளிப்பாடு. அவனன்றி இவ்வுலகில்லை. சர்வ வ்யாபியாகவும் அந்தராத்மாவாகவும் உள்ளும் வெளியும் வியாபித்துள்ள பகவானை த்யானிப்பீர்களாக.

எல்லா உயிர்களிடமும் தயையுடன் இருந்து கிடைத்ததில் திருப்தி அடைந்து இந்தியங்களை அடக்கினவருக்கு பகவானுடைய அருள் விரைவில் கிடைக்கும்.

தன்னையே அரும் செல்வம் என நினைக்கும் பக்தர்களிடம் அன்புள்ள பகவான் கல்வி,செல்வம், தொழில் இவைகளால் கர்வம் கொண்டு படாடோபமாக பூஜை செய்பவர், சாதுக்களுக்கு தீங்கிழைப்பவர் இவர்களுடைய பூஜையை பகவான் ஏற்பதில்லை.

மைத்ரேயர் கூறினார்.

பிரசேதசர்களிடம் இவ்வாறு பகவானுடைய பெருமையைக் கூறிவிட்டு நாரதர்பிரம்மலோகம் சென்றார். பிரசேதஸர்களும் ஹரிசரணதியானத்தால் பரம பதம் எய்தினர்.

பிறகு சுகர் பரீக்ஷித்திடம் "இதுவரை உத்தானபாத்ருடைய வம்சம் உமக்கு வர்ணிக்கப் பட்டது. இனி பிரிய வ்ரதருடையவம்சத்தைப் பற்றி தெரிந்து கொள்ளும்." என்று கூறினார்.

நான்காவது ஸ்கந்தம் முடிவுற்றது

No comments:

Post a Comment