நாரதபக்தி சூத்ரம் 18
சூத்ரம் 18
ஆத்மரதி: அவிரோதேன இதி சாண்டில்ய:
ஒருவிதமான இடையூறும் இல்லாமல் ஆத்மானந்தத்தில் ல்யித்திருப்பதே பக்தி என்று சாண்டில்யர் கூறுகிறார்.
இந்த மூன்றுவிதமான் விளக்கங்களைப் பார்க்கும்போது இவை மூன்று வகையானவை அல்ல பக்தியின் மூன்று தளங்கள் என்று தெரிகிறது
. முதல் வகை பக்தி மூடபக்தியாகவும் இருக்கலாம். அல்லது தவறான கொள்கையைக் கொண்டும் இருக்கலாம் உயிர்பலி கொடுப்போர் பக்தி இவ்வகை. பாகவதத்தில் பகவான் சொல்கிறார். மற்ற உயிர்களிடம் தயை இல்லாதவன் பக்தியை நான் ஒரு போதும் ஏற்கமாட்டேன் என்று. அதேபோல உடலால் பூஜை புனஸ்காரங்களை செய்தாலும் பகவானிடம் மனம் லயிக்காமல் செய்வதால் ஒரு பயனும் இல்லை
. ஆத்மானுபவனம் என்பது இங்கு சதா பகவான் நினைவுடன் இருப்ப்தாகும் . ஆகையால் மேற் சொன்ன மூன்றும் சேர்ந்ததுதான் பக்தி. இதற்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது.
ஒரு ஆசார சீலர். தினமும் தவறாமல் பூஜை செய்பவர். அவருக்கு ஒரு பிள்ளை. பூஜை புனஸ்காரம் எதுவுமே செய்ய மாட்டான். சும்மா வாயிலில் உட்கார்ந்து இருப்பான்.
ஒருநாள் அவர் வீட்டில் பூஜையில் ஈடுபட்டிருந்தார் .அப்போது ஒருவர் அவரைத் தேடி வந்தார். அவர் உள்ளே பூஜையில் இருக்கிறாரா என்று கேட்டபோது அதற்கு அவர் பிள்ளை அவர் செருப்பு தைப்பவனிடம் போய் இருப்பதாகச்சொன்னான்.
அப்போது அவன் தந்தை வந்து அதைக்கேட்டு ஏன் இப்படிக் கூறினாய் என்றபோது அவன் சொன்னான். "உங்கள் வாய் மந்திரம் சொல்லிக்கொண்டிருந்தது ஆனால் உங்கள் மனம் தைக்ககொடுத்த செருப்பையே நினைத்துக் கொண்டிருந்தது அல்லவா என்றான்.
அப்போதுதான் அவருக்கு தன் பிள்ளையின் மகிமை தெரிந்தது., கையால் பூஜை செய்து வாயால் மந்திரம் ஓதுவதை விட மனதால் ஒருமை நிலை அடைவது பெரிது என்று.
அதனால் மேற் சொன்ன மூன்றும் சேர்ந்ததுதான் பக்தி.
இதை குலசேகராழ்வார் தெளிவாகக் கூறுகிறார்.
ஜிஹ்வே கீர்த்தய கேசவம் முரரிபும் சேதோ பஜ ஸ்ரீதரம்
பாணித்வந்த்வ தம் அர்ச்சய அச்சுதகதா: ச்ரோத்ரத்வய தவம் ச்ருணு
க்ருஷ்ணம் லோகய லோசனத்வய ஹரே: கச்ச அங்க்ரியுக்ம ஆலயம்
ஜிக்ர க்ராண முகுந்தபாத துலஸீம் மூர்தன் நம அதோக்ஷஜம்
ஓ என் நாவே கேசவனைப்பாடு. மனமே ஸ்ரீதரனை நினை. என் இரு கைகளே அவனை பூஜை செய்யுங்கள். காதுகளே அவன் கதைகளைக் கேளுங்கள். என் இரு கண்களே கிருஷ்ணனைப் பாருங்கள்..கால்களே அவன் ஆலயத்திற்குச் செல்லுங்கள். மூக்கே அவன் பாத துளைசியை முகர். தலையே அதோக்ஷஜனை வணங்கு.
இதைவிட விளக்கமாக பக்தியை வர்ணிக்க முடியாது அல்லவா?
No comments:
Post a Comment