Thursday, November 22, 2018

Narada bhakti sutram 16 & 17 in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

நாரத பக்தி சூத்ரம் 16/17

.சூத்ரம் 16
பூஜாதிஷு அனுராக: இதி பாராசர்ய: 
பராசரருடைய மகனான வியாசர் சொல்வது என்னவென்றால் பூஜை ஆராதனம் இவைகளில் ப்ரியம் உண்டாவதே பக்தி என்கிறார். 
'காயேன வாசா மனசா , உடலாலும் வாக்காலும் மனதாலும் செய்யும் பக்தியை இனிவரும் மூன்று சூத்ரங்கள் கூறுகின்றன.

பூஜை செய்வது உடலால் செய்யும் பக்தி முறை. இதில் உடலால் செய்யும் வழிபாடுகள், சேவைகள் இவை அடங்கும். இவற்றை பிரியத்துடன் செய்தால் அதுதான் பக்தி. நம் இந்த்ரியங்களை முழுவதும் பகவத்சேவைக்கே ஈடுபடுத்துவது சிறந்த பூஜையாகும்.

வியாசர் நாரதர் மூலம் பக்திப்ரபாவத்தை அறிந்து பாகவதபுராணம் இயற்றினார் . இவர் தந்தை பராசரர் விஷ்ணுபுராணம் இயற்றியவர். ஆதலால் இங்கு பராசர புத்திரர் என்று வியாசர் குரிப்பிடப்படுகிறார்

சூத்ரம் 17
கதாதிஷு இதி கர்க: 
கர்க மகரிஷி கண்ணனாக அவதாரம் செய்த பகவானுக்கே பெயர் சூட்டியவர். அவர் சொல்கிறார் தெய்வீகக்கதைகள், நாம சங்கீர்த்தனம் இவற்றில் ஈடுபடுதல் பக்தி என்று. ஏனெனில் தெய்வீகக்கதைகளில் பூஜை விதி முறை யோகிகள் வரலாறு , பக்தர்கள் வாழ்க்கை முறை , தெய்வங்களின் தன்மை அவர்களை வணங்கும் முறை , அவற்றிற்கு பலன் , தத்துவ விசாரம் எல்லாமே வந்துவிடும்.

ச்ரவணம்,மனனம், நிதித்யாசனம் என்ற முறையில் ச்ரவணமே முதல் படி. கதைகளிலீடுபடுதல் என்றால் வெறும் கேட்டல் மட்டும் அன்று. அவற்றைப் பற்றி பிறருக்கு எடுத்துரைத்தாலும் அதில் அடங்கம். பக்தர்கள் எவ்வாறு இருப்பார்கள் என்பதை கதையில் பகவான் விளக்குகிறார்.
மச்சித்தா மத்கதப்ராணா: போதயந்த: பரஸ்பரம் 
கதயந்தஸ்ச மாம் நித்யம் துஷ்யந்தி ச ரமந்தி ச (ப.கீ.1௦.9)

'எப்போதும் என்னையே நினைந்து என்னையே உயிராக எண்ணி ஒருவருக்கொருவர் சந்திக்கும்போது என்னைப்பற்றியே பேசுபவராக, என் கதைகளை சொல்பவராக அவர்கள் இன்புறுகிறார்கள்.

இதனால் அவன் நினைவு எப்போதும் இருந்துகொண்டே இருப்பதால் அந்திமஸ்மரணம் எளிதாகிறது.

பரீக்ஷித் சுகரை கிருஷ்ணாவதாரத்தைப் பற்றி கூறுமாறு கேட்கையில் பற்றற்றவர்களிடம் இருந்து பகவானின் அவதாரக் கதைகளை திரும்ப திரும்ப கேட்பதில் பசுவதை செய்வ்பவனைத் தவிர வேறு யாருக்கு ஆர்வம் இருக்காது என்கிறான்.

இதற்கு நாரதரே உதாரணமாக் இருக்கிறார். மூவுலகும் சுற்றி வந்து நாராயண நாமத்தையும் பிரபாவ்த்தையும் பரப்புபவர் அல்லவா? (பகவானின் கொபசெ! )
மற்றும் வால்மீகி . வியாசர், துளசிதாசர் இன்னும் பல பக்தர்கள் ஆழ்வார்கள் இதற்கு உதாரணம் ஆவார்கள்



No comments:

Post a Comment