Thursday, October 11, 2018

Thoopul

நாளை நம் ஆசார்ய ஸார்வபௌமர், தூப்புல் மஹானின் 750ஆவது திருநக்ஷத்திர வைபவம். தேசிகனடியார்கள் பலர் தூப்புல், திருவஹீந்திரபுரம், மற்ற திவ்ய தேசங்களிலும் நடைபெற உள்ள மங்களாஸாசன வைபவத்தை நேரில் சென்று அநுபவிக்க உள்ளனர்.  சக்தியில்லாதவர்கள் தாம்தமது க்ருஹத்திலேயே  சுற்றம் சூழலுடன் சாளக்ராம ஆராதனத்துடன் பாயாசான்ன்னம், குடான்னம் ததி க்ஷீரான்னம் மற்றும் பக்ஷ்னாதிகள் என்று விதவிதமான அன்னங்களை எம்பெருமானுக்கும், ஆச்சார்யனுக்கும் அமுது செய்து, ஆசார்யன் அருளிச்செய்த ஸ்ரீஸுக்திகளை யதாசக்தி பாராயணம் செய்து ஸத்ஸம்பாவனையுடன்  திருநக்ஷத்திரத்தை கொண்டாடவுள்ளனர். 

நாம் அனைவரும் உய்ய நம் ஸந்த்தியினரும் உய்ய பேருபகாரம் செய்துள்ள நம் ஆச்சார்யனுக்காக, போற்றி உகப்பதும் புந்தியிற் கொள்வதும் பொங்கு புகழ் சாற்றி வளர்ப்பதும் கற்றல்லவோ முன்னம் பெற்றதற்கே என்கிறபடியே  இவ்வாறு மஹோத்ஸவங்களை கொண்டாடுவதுடன் நில்லாது ,ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி ,வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம் என்று ஆசார்யன் நமக்கு காட்டிய வழியில் நடந்து நாம் நம் வாழ்க்கையை சீர்படுத்திக் கொள்வோம். அதற்கான  ப்ரதிக்ஞைகளையும் இந்நந்நாளில் எடுத்துக் கொள்வோம். 

44ஆம் பட்டம் ஸ்ரீமதழகியசிங்கரின் அருளமுதத்திலிருந்து சில வரிகள்.

3 வேளை சந்த்யா வந்தனம் செய்கின்றாயா ? இல்லை எனில் இன்றே ஆரம்பி

க்ருஹத்தில் சாளக்ராம மூர்த்தியை ஏழுந்தருள் செய்து பஞ்சகச்சத்துடன் தினமும் ஆராதனம் செய். 

மஹாலக்ஷ்மீ வரும் அந்தி வேளையில் விளக்கேற்றி ஸ்த்ரீகளை வீட்டில் இருக்க சொல்

ஏகாதசி - அசித்ர,அஸ்வமேத பாராயணமும் த்வாதசி - காடக பாராயணமும் அவஸ்யம் செய்

ப்ரதோஷ வேளையில் லக்ஷ்மீ ந்ருஸிம்ம கராவலம்பத்தை சொல்

வெள்ளிக்கிழமை பசுவிற்க்கு அகத்தி கீரை/புல் போடு

சுமையான கல்விகளுக்கு நேரம் ஒதுக்கும் நீ , சுவையான கல்விகளான வேத,பிரபந்த, ஸ்தோத்ர பாட, ஆஹ்னீக ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய காலக்ஷேபங்களுக்கு நேரம் ஒதுக்குகின்றாயா?

பக்ஷ்க்ஷ, மாஸ , அயன , வருட தர்பணாதிகளை வேறு வேலைகளை ஒதுக்கிவிட்டு ஒழுங்காக செய்,மாளய ,அஷ்டகா & அன்வஷ்டகா செய்யாமல் விடாதே! பித்ரு சாபம் வந்து சேரும்

திருமண் இல்லாமல் பாழும் நெற்றியுடன் திரியாதே

வீட்டிற்கு வந்தவுடன் பஞ்சகச்சத்திற்கு உடனே மாறு - பர்முடாஸ் வேண்டவே வேண்டாம்

இதர ம்ருகங்களை போஷிக்கும் நீ? உன் கடமையான பசு ரக்ஷ்ணத்தை மறந்தது ஏன்?

நீராட்டதின் போது "அகமர்ஷண ஸூக்தத்தை" அவஸ்யம் சொல்

பயிர் தொழில் செய்பவர்களை வாழ்க்கையில் மதிக்க கற்று கொள் 

இன்று தர்ப்பண நாளில் நிஷேதிக்கபட்ட காய்கறிகளை தளிகையில் சேர்க்காதே / இரவு பலகாரம் செய்ய கற்று கொள் / வெளியில் இன்று உணவு வேண்டாம்

கடைபிடிப்போமா!!!!.

*எங்கள் தூப்புல் பிள்ளை பாதம் என் சென்னியதே!*

தூப்புல்குலமணியே இன்னுமொரு நூற்றாண்டிரும்

தாஸன்
நாகை நரஸிம்ஹன்

No comments:

Post a Comment